எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிறந்த முதலாளியாக இருக்கும் தகுதி இருக்கிறது தெரியுமா?

நல்ல தலைமை பண்பு இருக்கும் அனைவருமே சிறந்த முதலாளியாகலாம். ஆனால் முதலாளி அனைவருமே நல்ல தலைமை பண்பு உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

வாழ்க்கையில் அனைவருமே ஒரு முதலாளிக்கு கீழ் வேலை செய்தாக வேண்டும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு மேல் ஒருவர் இருக்கத்தான் செய்வார்கள். தாராளமயக்கப்பட்ட சமூகத்தில் வாழும் நாம் முதலாளிகளுக்கு மட்டுமல்ல நமக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் ஏன் சிலசமயம் நம்முடன் வேலை செய்பவர்களை பார்த்தே பயப்படும் சூழ்நிலை உள்ளது.

zodiac sign

முதலாளியாய் இருக்க முக்கியமான தப்பியது தலைமை பண்புதான். நல்ல தலைமை பண்பு இருக்கும் அனைவருமே சிறந்த முதலாளியாகலாம். ஆனால் முதலாளி அனைவருமே நல்ல தலைமை பண்பு உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு முதலாளியும் ஒவ்வொரு வகையில் இருப்பார்கள். உங்கள் முதலாளி எப்படிப்பட்டவர்கள் அல்லது நீங்கள் முதலாளி ஆனால் எப்படிப்பட்ட முதலாளியாக இருப்பீர்கள் என்பதை உங்கள் ராசியை வைத்தே கூறிவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தும் முதலாளியாக இருப்பார்கள். மற்றவர்களை எப்படி ஊக்கிவித்து அவர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் எத்தனை வாய்ப்பு வேண்டுமென்றாலும் கொடுப்பார்கள் ஆனால் வேலை சொன்ன நேரத்தில் முடிவடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மேஷ ராசி முதலாளிகளை திருப்திப்படுத்த வேண்டுமெனில் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் முதலாளி ரிஷப ராசிக்காரராக இருந்தால் வேலையை முழுமையாய் செய்வது மட்டுமே உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. அவர்களிடம் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும், அவர்கள் எந்த வேலையையும் செய்வதற்கென்று தனக்கென தனிவழியை வைத்திருப்பார்கள். அவர்களின் வழிமுறைகள் ஆரம்பத்தில் இலாபகரமானதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எதிர்காலத்தில் பெரிய பலன்களை அள்ளித்தரும். உங்களின் வேலைக்கான வெகுமதிகள் அவர்களிடம் இருந்து சரியாக வந்துசேரும்.

மிதுனம்

மிதுனம்

இவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு பைத்தியம் பிடிக்கவே வைத்து விடுவார்கள். இவர்கள் தங்கள் மனதை அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள் அதனால் ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்வார்கள், தங்கள் ஊழியர்களையும் செய்ய பணிப்பார்கள். நீங்கள் மிதுன ராசி முதலாளிக்கு கீழ் வேலை செய்ய நேர்ந்தால் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய தயாராகி கொள்ளுங்கள். இந்த முதலாளிகள் அவர்களின் தவறை ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள்.

கடகம்

கடகம்

கடக ராசி முதலாளிகளிடம் நீங்கள் வேலை செய்வது உங்களின் அதிஷ்டமாகும். நீங்கள் அவர்களுக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருக்கும்வரை அதற்கான பலன்கள் தானாக உங்களை வந்துசேரும். இவர்கள் தங்கள் ஊழியர்களை குடும்பமாகத்தான் நினைப்பார்கள். உங்களின் போக்குக்கே நீங்கள் வேலை செய்ய வேண்டுமென்பது இவர்களிடம் நடக்காது. இவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சி உடனடியாக கிடைக்காது ஆனால் உண்மையாக இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

இவர்கள் மிகவும் வேடிக்கையான முதலாளியாக இருப்பார்கள். இவர்கள் அனைத்து விதமான வேடிக்கையான விஷயங்களையும் உங்களை செய்ய அனுமதிப்பார்கள், அதேசமயம் நட்பாகவும் பழகுவார்கள். இவர்களின் சிறப்பே எவ்வளவு அதிகம் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்களோ அவ்வளவு கடுமையாக உழைக்கவும் செய்வார்கள். இவர்கள் அதிகம் பாராட்டையும், பரிசையும் வழங்குவார்கள் அதையே எதிர்பார்க்கவும் செய்வார்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசி முதலாளிகள் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். எவ்வளவு சிரமமான வேலையாக இருந்தாலும் தானே சரிபார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதில் தனக்கு முழுதிருப்தி கிடைக்காதவரை அதனை இவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் அனைத்தும் ஒரு ஒழுங்கு முறைப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு போல நடந்து கொள்ளவில்லை எனில் கன்னி ராசிக்காரர்களிடம் வேலை செய்வது என்பது கடினமான செயல்தான்.

துலாம்

துலாம்

மிகவும் நட்பாக பழகக்கூடிய முதலாளிகளாக இவர்கள் இருப்பார்கள். ஊழியர்களின் பிறந்தநாள், அவர்களின் குடும்பம் வரை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் தங்கள் ஊழியர்களிடம் இருந்து அதிக வேலைகளை எதிர்பார்ப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் வேலைகைளை முடித்து விட்டால் பிரச்சினை இல்லை, இல்லையென்றால் கடினம்தான்.

விருச்சிகம்

விருச்சிகம்

இவர்கள் ஊழியர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது நேர்மையைத்தான். இவர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள். அவர்களுக்கென ஒரு தனிவட்டம் இருக்கும், அதற்குள் நீங்கள் செல்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இவர்கள் அனைவரையும் நிர்வகிப்பதை விட தன் நம்பிக்கைக்குரிய ஒருவரை வைத்து அவர் மூலம் ஊழியர்களிடம் வேலை வாங்கவே இவர்கள் விரும்புவார்கள். ஊழியர்களிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகளை கூட கண்டுபிடிப்பதில் இவர்கள் கவனமாக இருப்பார்கள்.

தனுசு

தனுசு

இவர்கள் ஊழியர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், அவர்கள் வேலையே எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லித்தருவார்கள். இவர்கள் எப்பொழுதும் புதுமையை விரும்புபவராக இருப்பார்கள். எனவே புதுமையான யோசனைகள் கொடுப்பவர்களை இவர்களுக்கு எளிதில் பிடித்துவிடும். இவர்களுக்கு செய்யும் முறை முக்கியமல்ல மாறாக கிடைக்கும் பலனே முக்கியமானதாகும்.

மகரம்

மகரம்

பல வழிகளில் இவர்கள் தலைசிறந்த முதலாளிகளாக விளங்குகிறார்கள். வியாபாரத்தை பொறுத்தவரையில் இவர்களின் நோக்கம் எப்பொழுதும் இலாபம் பற்றியதாக மட்டுமே இருக்கும். இவர்களிடம் இருந்து ஊழியர்கள் பலவற்றை கற்றுக்கொள்ளலாம். அதேசமயம் இவர்கள் ஊழியர்களின் நலனிலும் அக்கறை செலுத்துபவராக இருப்பார்கள். இவர்களின் திறமையிலும், அர்ப்பணிப்பிலும் பாதி இருந்தால் கூட போதும் இவர்களே உங்களை அவர்களை அளவிற்கு உயர்த்தி விடுவார்கள்.

கும்பம்

கும்பம்

இந்த ராசி முதலாளிகள் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு தோழமையாக இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் குழுவாக செயல்படுவதில் ஆர்வம் காட்டுவார்கள். தங்கள் ஊழியர்களை எப்பொழுதும் ஜனநாயகரீதியாக நடத்த விரும்புவார்கள். அறையில் அமர்ந்து வேலை சொல்லும் முதலாளியாக இல்லாமல் அருகில் அமர்ந்து வேலை வாங்கும் முதலாளியாக இவர்கள் இருப்பார்கள்.

மீனம்

மீனம்

நீங்கள் விரும்பும்படி வேலை செய்ய விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டியது மீனராசிக்காரரிடம்தான். இவர்கள் முதலாளி போலவே நடந்து கொள்ள மாட்டார்கள். சக ஊழியராய் இருந்து உங்களின் கருத்துக்களை கேட்பதுடன் அதற்கான ஊக்கத்தையும் வழங்குவார்கள். ஒருவேளை தான் செய்தது தவறு என்று உணர்ந்தால் சற்றும் யோசிக்காமல் மன்னிப்பு கேட்க இவர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் அவர்களின் பெருந்தன்மையை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion