Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
குருபகவானின் அருளால் இந்த மூன்று ராசிக்குதான் பொன்னும் பொருளும் கிடைக்கப்போகுதாம்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவுகளின் மூலமாக உங்களுடைய சிந்தனையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உங்களுடைய விலையுயர்ந்த பொருள்களை கையாளுகின்ற பொழுது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

ரிஷபம்
தொழிலில் உங்களுடைய கூட்டாளிகளுக்கு இடையே உள்ள சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் குறைய ஆரம்பிக்கும். புதிய சில திட்டங்களைத் அமைத்து அதற்காக அடுத்த கட்ட வேலைகளைத் தொடர்வீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் குழந்தைகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய நண்பர்களின் மூலமாக சுப விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
கால்நடைகளின் மூலமாக லாபங்கள் ஏற்படும். மனதுக்குள் தோன்றுகின்ற பல்வேறு குழப்பங்களின் மூலம் உங்களுக்கு உடலும் மனமும் சுார்வடையலாம். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கொஞ்சம் நிதானமாக செயல்படுவது நல்லது. தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலை செய்கின்றவர்களுக்கு மேன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்
கல்வி பயில்கின்ற மாணவர்களுடய புத்திக்கூமையை வெளிப்படுத்துகின்ற வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் மனைவியினுடைய உதவியினால் தொழிலில் உங்களுக்குச் சாதகமான நிலை உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தொலைதூரப் பயணங்களால் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய மூத்த சகோதரர்களால் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பணியில் உங்களுக்கு உண்டாகின்ற மேன்மையான சூழல்கள் உண்டாகும். பொதுக்கூட்டங்களில் பேசுகின்ற பொழுது, உங்களுக்கான ஆதரவுகள் பெருகும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு அனுகூலமான விஷயங்கள் உண்டாகும். பொது சேவை புரிகின்றவர்களுக்கு வெற்றி உண்டாகும். எந்தவொரு செயலையும் கொஞ்சம் நிதானத்துடன் செய்யுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடன் பிறந்த சகோதரர்களைக் கொஞசம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். மனதில் கொஞ்சம் தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தொடங்குவீர்கள். நீங்கள் செய்கின்ற தொழிலில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாகனங்களில் பயணங்களின் மூலம் நல்ல லாபம் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய பெற்றோரின் உடல்நலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளால் உங்களுக்கு வெற்றி உண்டாகும். உங்களுடைய விவாதங்களினால் நீங்கள் கையாளுகின்ற புதிய முயற்சிகளால் நீங்கள் எதிர்பார்த்த உங்களுக்கு சாதகமான சூழல்கள் உங்களுக்கு அமையும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட உதவிகளை நீங்கள் பெறுவதில் கொஞ்சம் கால தாமதம் உண்டாகும். கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். அந்நியர்களால் தொழிலை அடுத்த நிலைக்கு அபிவிருத்தி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலமாக உங்களுக்கு லாபம் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களுடைய ஆதரவின் மூலம் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு உங்களுக்கான வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறையில் உள்ள வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். அருள் தருகின்ற காரியங்களில் பங்கேற்று மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் கலந்து பேசி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய உறவினர்களிடம் தேவையில்லாத சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உங்களுடைய கவனக் குறைவான காரியங்களின் மூலம் தாமதங்கள் ஏற்படலாம். மனதுக்கு விருப்பமானவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளில் இழுபறி நிலைகள் வந்துபோகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்
மன தைரியத்துடன் செயல்பட்டு பல தடைகளை தாண்டி வருவீர்கள். பெற்றோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது தான். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து காலதாமதமாகவே உங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
பதிதாக வேலை தேடுகின்றவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மை உண்டாகும். உங்களுடைய ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற ஆரம்பிக்கும். தொழிலில் உங்களுக்கு இருக்கின்ற நேர்மையினால் உங்கள் மீதான மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். புண்ணிய காரியங்களில் நல்ல பெயர்களைச் சம்பாதிப்பீர்கள். மனதில் உள்ள கவலைகள் தீரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
எதையும் துணிவுடன் தொடர்ந்து புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய பெரியோர்களின் ஆலோசனைகளைப் பெறுவீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய வாக்கு வன்மையின் மூலம் நீங்கள் பெருமை அடைவீர்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். பொன் மற்றும் பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications