Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
உங்க ராசிக்கு இன்னைக்கு எந்த திசையிலிருந்து அதிர்ஷ்டம் வரப்போகுது தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நம்மை விட்டு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து நடந்து கொள்ள முடியும்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
குடும்பத்தில் உள்ளவர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரஙகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகமாகும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணி நிமித்தமான பயணங்களில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பண வரவுகளினால் திருப்தியான சூழ்நிலை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
நினைத்த செயல்களை செய்து முடிப்பதில் கொஞ்சம் இழுபறியான சூழல் இருக்கும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். வாகனங்களில் பயணம் செய்யும்போதும் கொஞ்சம் நிதானம் வேண்டும். எதிர் பாலினத்தவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பழைய பிரச்னைகளால் மன வருத்தங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய குண நலன்களில் மாற்றங்கள் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்னைகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். வெளியூா் வேலை முயற்சிகளினால் நல்ல செய்திகள் உண்டாகும். இதுவரையில் இழுபறியில் இருந்து வந்த பணிகளைச் சிறப்பாக செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
நண்பர்களின் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொது சபைகளில் ஆதரவான சூழல்கள் உண்டாகும். மனதில் புதிய தெம்புடன் புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களைச் செய்யத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த செயல்களினால் மகிழ்ச்சியான தருணங்கள் அமைய வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியான சூழல் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுடைய செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்த்தல் நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் கால தாமதங்கள் உண்டாகும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
வீட்டில் பிள்ளைகளுடைய எண்ணங்களை அறிந்து செயல்படுங்கள். செய்கின்ற தொழிலில் பல தடைகளைத் தாண்டி, நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் சாதகமான சூழல்கள் உண்டாகும். விரும்பிய பொருள்களை வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடைய முழுமையான ஆதரவு கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பயணங்களின் மூலமாக உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற ஆரம்பிக்கும். பேசுகின்ற போர் கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள். வீட்டில் குழந்தைகளின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களிடம் சக ஊழியர்களுடைய வீண் விவாதங்களைத் தவிர்ப்பது மிக நல்லது. நீங்கள் திட்டமிட்ட செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எந்த சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய செலவுகளால்நெருக்கடியான சூழல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடைய பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
புதிய தொழில்கள் தொடங்குவதற்கான உங்களுடைய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். உறவினர்களுடைய முழு ஆதரவினால் தொழிலில் சில மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளுடன் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
உங்களுடைய உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனங்கள் வாங்கி, மகிழ்வீர்கள். புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். தாய்வழியிலான உறவினர்களுடன் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
வெளியூா் பயணங்களினால் கொஞ்சம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு அனுகூலமான பலன்களே கிடைக்கும். தொழிலில் உங்களுடைய லாபங்கள் இருமடங்காக உயர ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த நபரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் முனைவோருக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
குடும்பத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களுடைய நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேற ஆரம்பிக்கும். உங்களுடைய நட்பு வட்டாரங்கள் விரிவடையத் தொடங்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசனை செய்து, பழைய பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். தொழில் செய்கின்றவர்களுக்கு பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











