For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேர்தல் வரலாற்றில் படுதோல்வியை சந்தித்த அரசியல் கட்சிகள் - #பிளாஷ்பேக்

தேர்தல் வரலாற்றில் படுதோல்வியை சந்தித்த அரசியல் கட்சிகள் - #பிளாஷ்பேக்

|

விளையாட்டு என்று மட்டுமல்ல, அரசியலிலும் கூட வெற்றியும் தோல்வியும் மிகவும் சகஜம். ஒரு தேர்தலில் அபார வெற்றிப் பெற்று, அதற்கு அடுத்த தேர்தலிலேயே படுதோல்வி கண்ட கட்சிகள் உள்ளன. மிக சில கட்சிகளே, சில குறிப்பிட்ட மாநிலங்களில் தொடர்ந்து இரண்டு, மூன்று முறை வெற்றிபெற்று தங்கள் செல்வாக்கை காப்பாற்றிக் கொண்டுள்ளன.

Worst Defeats Faced By Political Parties in Indian Elections!

அந்த வகையில் இந்திய தேர்தல் வரலாற்றில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் எதிர்கொண்ட மோசமான தோல்விகள் குறித்து தான் நாம், இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

1991ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் ஆளும் கட்சியாக தேர்தலை எதிர்கொண்ட திமுக வெறும் இரண்டே தொகுதிகளில் மட்டுமே வென்று மோசமான தோல்வியை அடைந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் (1989ல்) திமுக 150 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#2

#2

1996ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், கூட்டணி அமைத்து களம்கண்ட அதிமுக , காங்கிரஸ் கட்சிகள் வெறும் நான்கே இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வி அடைந்தது. இதே அதிமுக, காங்கிரஸ் கூட்டணி முந்தைய தேர்தலில் (1991ல்) 225 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

#3

#3

2015ம் ஆண்டு டெல்லி தேர்தலில் பா.ஜ.க வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், ஆளும் கட்சியாக இந்த தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சியோ ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.

#4

#4

1984ம் நடந்த பொது தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவில் பா.ஜ.க. வெறும் இரண்டே இடங்களில் மட்டும் தான் வெற்றிப் பெற்றது. இது அந்த கட்சியின் வரலாற்றில் மறக்க முடியாத படுமோசமான தோல்வியாக இது அமைந்தது.

#5

#5

இந்த படுதோல்விக்கு முக்கிய காரணம், முன்னாள் இந்திய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை தான். இந்த தேர்தலில் காங்கிரஸ் நாடு முழுவதும் மொத்தம் 414 இடங்களை தனிப்பெரும்பான்மையில் வெற்றிபெற்றது. தமிழகத்தில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வெற்றிப் பெற்றிருந்தது.

#6

#6

1984ம் ஆண்டு பொது தேர்தலில் வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பு ஏற்றார். இந்த தேர்தலின் போது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து பெரும்பான்மை எனும் அளவில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமை என்.டி. ராமாராவ் அவர்களுடிய தெலுங்கு தேசம் கட்சிக்கு கிடைத்தது.

#7

#7

தெலுங்கு தேசம் கட்சி 1984ம் ஆண்டு பொது தேர்தலில் 30 இடங்களில் வெற்றிபெற்று இருந்தது. இதன் மூலம் இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக ஒரு மாநில அரசு / கட்சி மத்திய அமைச்சரவையில் எதிர் கட்சி அந்தஸ்து பெற்றது. இது இந்திய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

#8

#8

டெல்லியில் வெற்றி பெற்ற ஆர்வத்தில் கோவாவில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் முனைப்புடன் களம் கடந்து. ஆனால், ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளாராக நின்றவரே நான்காம் இடத்தை தான் பிடித்தார். மற்றும், இவர் டெபாசிட்டும் இழந்தார் என்பது தான் பெரும்சோகம்.

#9

#9

ஏறத்தாழ 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது ஆம் ஆத்மி கட்சி. இதில் ஒரு இடத்தில் கூட அவர்கள் இரண்டாவது இடத்தை கூட பிடிக்க முடியாமல் போனது தான் சோகமே. தேசிய கட்சி என்ற பெருமை மற்றும் பிரதமரை நேருக்கு நேர் எதிர்க்கும் பெரும் நபர் என்று பல சிறப்பம்சங்கள் கொண்ட ஆம் ஆத்மிக்கு கோவா தேர்தல் ஒரு பேரிடியாக அமைந்தது.

#10

#10

2011ம் ஆண்டு எதிர் கட்சியாக இருந்த தேமுதிக மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து 2016ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டது. போட்டியிட்ட 104 இடங்களை தேமுதிக ஒன்றில் கூட வெற்றிப்பெறவில்லை. கட்சி தலைவரான விஜயகாந்த் உட்பட பலரும் டெபாசிட் இழந்தனர். மேலும், போதிய சதவித வாக்குகள் பெற தவறியதால், மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக.

#11

#11

2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கட்சி சீமான் அவர்களது நாம் தமிழர் கட்சி. படித்த பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 232 தொகுதிகளை களம் கண்டார் சீமான். ஆனால், போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி வெற்றிப்பெறவில்லை. வெற்றிபெறவில்லை என்பதை தாண்டி, அந்த கட்சி ஒட்டுமொத்தமாக டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst Defeats Faced By Political Parties in Indian Elections!

Here we have listed some of the worst defeats faced by any political parties in Indian election history. Let's check it out.
Desktop Bottom Promotion