For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஞ்சநேயருக்கும், சனிபகவானுக்கு இடையே நிகழ்ந்த சண்டை

சனிபகவான் சிலரின் பக்தர்களை மட்டும் சோதிக்காமல் விட்டுவிடுவார், உதாரணமாக சிவனின் தீவிர பக்தர்கள் சனிபகவானை நினைத்து பயம் கொள்ள தேவையில்லை. அது தனி கதை. இங்கே சனிபகவான் ஏன் ஆஞ்சநேயரை பார்த்து பயப்படுகி

|

சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து தப்புவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. சனிதேவரின் பார்வை பட்டுவிட்டால் அந்த திசை முடியும் வரை அவர்கள் படும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது. ஆனால் சிலரை மட்டும் சனிபகவான் சோதித்தாலும் பாதிக்காமல் சென்று விடுவார். அவர்களில் முக்கியமானவர்கள் ஆஞ்சநேயரை வழிபடுபவர்கள். அதற்கு காரணம் ஆஞ்சநேயரின் மீது சனிபகவானுக்கு இருக்கும் பயம்தான்.

Shanidev

சனிபகவான் சிலரின் பக்தர்களை மட்டும் சோதிக்காமல் விட்டுவிடுவார், உதாரணமாக சிவனின் தீவிர பக்தர்கள் சனிபகவானை நினைத்து பயம் கொள்ள தேவையில்லை. அது தனி கதை. இங்கே சனிபகவான் ஏன் ஆஞ்சநேயரை பார்த்து பயப்படுகிறார் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்

வாயுமைந்தனான மஹாபலி ஆஞ்சநேயரை பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். இராமபிரானின் தீவிர பக்தன். சிவபெருமானின் ருத்ர அம்சம் நிறைந்தவர். இராவணனை கதிகலங்க செய்து பாதி இலங்கையை தன் வாலால் எரித்தவர். இவையெல்லாம் நாம் நன்கு அறிந்ததே ஆனால் நாம் அறியாத ஒரு தகவல் இவர் சூரியபகவானின் சீடர் என்பது. சூரிய பகவான்தான் சனிதேவரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குள் நடந்த சண்டையால்தான் சனிபகவான் ஆஞ்சநேயரின் மீது அச்சம் கொள்கிறார்.

சூரிய பகவான்

சூரிய பகவான்

ஆஞ்சநேயர் குழந்தையாய் இருக்கும்போது எரியும் சூரியனை சுவைமிக்க பழம் என நினைத்து அதனை பறிக்க விண்ணுலகம் பறந்து சென்றார். பாலகன் ஒருவன் தன்னை நோக்கி பறந்து வருவதை கண்ட சூரியதேவன் இந்திரனிடம் முறையிட்டார். இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் பாலகனான அனுமனை தாக்கினார். இதனால் அனுமனின் தந்தையான வாயுபகவான் சூரியதேவன் மீது கோபம் கொண்டார். இதனால் கவலையுற்ற சூரியபகவான் ஆஞ்சநேயரை தன் சீடனாக ஏற்றுக்கொள்வதாக வாயுபகவானுக்கு வாக்களித்தார்.

சீடரான அனுமன்

சீடரான அனுமன்

சூரியபகவானுக்கு சீடராய் இருப்பதற்கு ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். ஆனால் சூரியபகவானின் வெப்பத்தால் ஆஞ்சநேயர் அவர் அருகில் செல்ல இயலவில்லை. எனவே சூரியபகவானின் ரதத்தில் இருந்த குதிரையின் மீது அமர்ந்துகொண்டு அவர் போதித்த வித்தைகளை கற்றுக்கொண்டார் ஆஞ்சநேயர். ஆண்டுகள் கடக்க ஆஞ்சநேயருக்கு அளவில்லா கல்வியையும், சக்தியையும் வழங்கினார் ஆஞ்சநேயர்.

குருதட்சணை

குருதட்சணை

ஆஞ்சநேயருடைய கல்வி நிறைவு பெற்றதும் தன் குருவான சூரிய பகவானுக்கு குருதட்சணை கொடுக்க விரும்பினார் அனுமன். சூரியபகவானோ குருதட்சணை எதுவும் வேண்டாம் எனக்கூற ஆஞ்சநேயரோ பிடிவாதமாக குருதட்சணை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறிவிட்டார். எனவே சூரியபகவான் தனக்கு குருதட்சணை எதுவும் வேண்டாம் அதற்கு பதிலாக தனது மகன் சனிதேவனின் கர்வத்தை அடக்குமாறு ஆஞ்சநேயரிடம் கூறினார்.

சனிபகவானின் கர்வம்

சனிபகவானின் கர்வம்

நவக்கிரகங்களுள் மிகமுக்கியமான ஒருவராக சனிபகவான் இருக்கிறார். அதற்கு காரணம் அவருக்கு சிவபெருமான் வழங்கிய வரம்தான். வாழ்ந்து முடித்து மேல் உலகம் வருபவர்களை எமதர்மன் தண்டிப்பது போல பூமியில் வாழும்போதே மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அரிய வரத்தை சனிபகவானுக்கு சிவபெருமான் வழங்கினார். இதனால் தன் சக்தியின் மீது சனிபகவானுக்கு கர்வம் உண்டாயிற்று. தன் தந்தை உட்பட அனைவரையும் உதாசீனப்படுத்த தொடங்கினார். அவரின் கர்வத்தை அடக்க அனைத்து தேவர்களும் தருணம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

சனிபகனுடனான வாக்குவாதம்

சனிபகனுடனான வாக்குவாதம்

தன் குருவின் ஆணைக்கிணங்க சனிபகவானை நோக்கி சென்றார் ஆஞ்சநேயர். சனிபகவானின் இடத்திற்கு சென்று அவரிடம் தன் தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்குமாறு கூறினார் ஆஞ்சநேயர். தன் உலகத்திற்குள் எப்படி இவ்வளவு எளிதாக ஆஞ்சநேயர் நுழைந்தார் என்பதை நம்ப முடியாத சனிபகவான் அவரை திரும்ப செல்லும்படி உத்தரவிட்டார். ஆனால் ஆஞ்சநேயர் அங்கிருந்து செல்வதாக இல்லை. இதன் கோபத்தின் எல்லைக்கே சென்றார் சனிபகவான்.

சனிபகவானின் முடிவு

சனிபகவானின் முடிவு

தன் சக்தியின்மை மீது அதீத கர்வம் கொண்ட சனிபகவான் தன் பேச்சை கேட்காத ஆஞ்சநேயருக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினார். அதற்காக அவரின் தோள்பட்டையின் மீது ஏறி அமர்ந்து கொண்டார். அதோடு நிற்காமல் தன் மொத்த சக்தியையும் உபயோகப்படுத்தி ஆஞ்சநேயரை கீழ்நோக்கி அழுத்தினார். ஆனால் அங்குதான் சனிபகவான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்.

ஆஞ்சநேயரின் பலம்

ஆஞ்சநேயரின் பலம்

சனிபகவான் எதிர்பார்த்தது போல அவரின் பலம் ஆஞ்சநேயரின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக ஆஞ்சநேயர் தன் உருவத்தை பெரிதாக்கி கொண்டே சென்றார். சனிபகவான் எவ்வளவு முயன்றும் அவரால் இதனை தடுக்க முடியவில்லை அதேசமயம் ஆஞ்சநேயரின் தோளை விட்டு இறங்கவும் இயலவில்லை. இறுதியில் இடத்தின் மேற்கூரைக்கும், ஆஞ்சநேயரின் தோளுக்கும் இடையில் சிக்கி வலியில் துடித்தார் சனிபகவான்.

சனிபகவான் கொடுத்த வரம்

சனிபகவான் கொடுத்த வரம்

இறுதியில் வலிதாங்க இயலாமல் தன் தோல்வியை ஒப்புக்கொண்ட சனிபகவான் தன்னை மன்னிக்கும்படியும், ஆஞ்சநேயர் சொல்வதை தான் கேட்பதாகவும் ஒப்புக்கொண்டார். அப்பொழுதுதான் அவருக்கு புரிந்தது தன் பலத்தின் மீது அவர் கொண்டிருந்த கர்வம். தன் கர்வத்தை அடக்கிய ஆஞ்சநேயரை பாராட்டியதுடன் ஆஞ்சநேயரை மனமாற வழிபடுவர்களை தன்னுடைய கோபப்பார்வை எதுவும் செய்யாது என்றும், அவர்களுக்கு என் பூரண அருள் கிடைக்கும் என்றும் வரம் கொடுத்தார். இதனால்தான் தன்னை விட பலசாலியான ஆஞ்சநேயரை கண்டு பயம்கொள்கிறார் சனிபகவான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reason behind why Shanidev scared of Lord Hanuman

Father of Shani Dev, Suryadev, is the teacher of Lord Hanuman. Shani Dev has a fight with his own father. So Suryadev requested to Hanuman for destroying Shani dev's pride towards his powers. Shani dev and Hanuman had a challenge and Hanuman won in that.
Story first published: Saturday, August 25, 2018, 13:35 [IST]
Desktop Bottom Promotion