For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  எமன் தன் அழகிய உருவத்தை இழக்க காரணமான சிவன்

  |

  இந்துபுராணங்களின் படி மரணத்தின் கடவுள் எமதர்மன் ஆவார். இவரின் பணியே பூமியில் இறந்தவர்களை மேலோகத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பாவம் மற்றும் புண்ணிய கணக்குகளின் படி அவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்வதுதான். இதற்கு அவருக்கு உதவி புரிபவர் சித்திர குப்தன் ஆவார்.

  Lord Shiva

  கதைகளிலும் சரி, திரைப்படங்களிலும் சரி எமதர்மனை கருப்பாக மிகவும் பயங்கரமாக இருக்கும்படியும், எருமை மாட்டை வாகனமாய் வைத்துக்கொண்டு அவர் மனிதர்களின் உயிரை பாசக்கயிறு கொண்டு பறித்து செல்வது போல கூறப்பட்டிருக்கும். எத்தனையோ வாகனங்கள் இருந்தும் எமதர்மன் ஏன் எருமை மாட்டை வாகனமாய் வைத்திருக்கிறார் என்று யோசித்துளீர்களா? ஏனெனில் அதற்குப்பின் ஈசனின் கோபமும், விஷ்ணுவின் வரமும் உள்ளது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அழகான எமதர்மன்

  அழகான எமதர்மன்

  எமதர்மன் மரணத்தின் கடவுளாய் இருந்தாலும் அவரும் ஒரு தேவர்தான். எனவே தேவர்க்ளுக்கே உரிய அழகும், வசீகரமும் அவரிடம் இருந்தது. சொல்லப்போனால் சற்று அதிகமாகவே இருந்தது. அதைவைத்து தேவலோக கன்னிகளையும், பூலோக பெண்களையும் எளிதில் கவர்ந்து விடுவார். இது மற்ற தேவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. காலப்போக்கில் எமதர்மன் தன்னுடைய கடைமையையே மறந்து விட்டு எந்நேரமும் பெண்களுடன் மகிழ்ச்சியாய் இருப்பதிலியே காலத்தை கடத்த தொடங்கினார்.

  தர்மம் தவறிய எமதர்மன்

  தர்மம் தவறிய எமதர்மன்

  தன் அழகின் மீதும் வசீகரத்தின் மீதும் கர்வம் கொண்ட எமதர்மன் தன் பணியை செய்வதை நிறுத்திவிட்டு பெண்களுடன் நேரத்தை போக்கினார். இதனால் பூமியில் யாரும் இறக்காமல் வாழ்ந்து வந்தனர், எமதர்மனின் செயல் கண்டு கோபம் கொண்ட பூமாதேவி சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். சிவபெருமான் எமதர்மனை கைலாயம் வரும்படி உத்தரவிட்டார்.

  சிவபெருமானும் எமதர்மனும்

  சிவபெருமானும் எமதர்மனும்

  கைலயாம் வந்த எமனிடம் " எமதர்மரே உன்னை பார்த்து பூமியில் யாரும் பயப்படுவது போல தெரியவில்லையே" என்று சிவபெருமான் கூறினார். அதற்கு எமதர்மனோ " ஆம் பிரபு" என்று பதிலளித்தார். " தேவகன்னிகள் உன்னிடம் பழகவே அதிக ஆசைப்படுகிறார்களே ஏன்? " என்று சிவபெருமான் கேட்க " எனக்கு தெரியவில்லை பிரபு அந்த பெண்கள்தான் விரும்புகிறார்கள்" என்று கூறினார் எமன். சிவபெருமான் நன்கு அறிவார் எமதர்மன் அனைவரையும் கவர காரணம் அவரின் வசீகரமான தோற்றம்தான் என்று. " உன்னுடைய முகத்தை தண்ணீரில் பார் " என்று கூறிவிட்டு ஈசன் அங்கிருந்து நகர, அங்கே பயங்கரமான முகம் ஒன்று எமதர்மனை முறைத்தது. அதிர்ச்சியடைந்த எமன் சிவனிடம் " ஈசனே என்னை ஒரு பயங்கர உருவம் தண்ணீரில் முறைக்கிறது " என்று கூறினார்.

  சிவபெருமானின் சாபம்

  சிவபெருமானின் சாபம்

  தண்ணீரில் தெரிந்த அந்த உருவம் பயங்கர கருப்பாக பெரிய பற்களுடன், கொம்புகளுடனும்

  பார்ப்பவரை பயமுறுத்தும் வண்ணம் இருந்தது. அது யார் என எமன் சிவபெருமானிடம் கேட்கும்போது சிவபெருமான் சிரித்துவிட்டு " அது உனது பிம்பம்தான் " என்று கூறினார். செய்வதறியாது திகைத்த எமன் " ஈசனே, எனக்கு ஏன் இந்த நிலை? " என்று கேட்டபோது, " அனைவரையும் வசீகரிக்கும் உனது அழகு போய்விட்டது இனி மக்கள் உன்னை கண்டால் பயமா கொள்வார்கள், இனி உன் கடைமையை சரியாக செய் " என்று கூறினார். தன் தவறை உணர்ந்த எமன் " பிரபு, நான் என் தவறை உணர்ந்து விட்டேன் தயை கூர்ந்து என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கெஞ்சினார். அதற்கு சிவபெருமான் எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இதற்கு மேல் இங்கிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த எமன் கைலாயம் விட்டு நீங்கினார்.

  பிரம்மாவும் விஷ்ணுவும்

  பிரம்மாவும் விஷ்ணுவும்

  தான் பழைய உருவத்திற்கு திரும்ப உதவ கேட்க எமன் பிரம்மாவை சந்திக்க சத்யலோகம் சென்றார், ஆனால் எமனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதேநேரம் பிரம்மதேவனும் மனிதர்களின் தலைவிதியை இயற்றிக்கொண்டிருந்ததால் அங்கிருந்து கிளம்பி, விஷ்ணுவை பார்க்க வைகுண்டம் சென்றார், அங்கே திருமால் தேவி லக்ஷ்மியுடன் உலக நன்மையை பற்றி பேசிக்கொண்டிருக்க அவர்களை தொந்தரவு செய்ய விரும்பாமல் அங்கிருந்து விலகினார் எமன்.

  எமனின் தவம்

  எமனின் தவம்

  வைகுண்டம் விட்டு கிளம்பிய எமன் பூமிக்கு சென்று அங்கே இருந்த ஓவர் மலையில் விஷ்ணுவை நோக்கி தவம் புரிய தொடங்கினார். அவரின் தவத்தில் மகிழ்ச்சியடைந்த விஷ்ணு எமன் முன்பு காட்சியளித்தார். அவரின் பாதம் தொட்டு வணங்கி " பிரபு என்னை அடையாளம் தெரிகிறதா? " என்று கேட்டார் எமன். விஷ்ணுவோ " எமதர்மரே நடந்த அனைத்தையும் நான் அறிவேன். இது அனைத்திற்கும் காரணம் நீ மட்டுமே. நீ உன் கடமையை சரியாக செய்திருந்தால் இந்நிலைமை வந்திருக்காது" என்று கூறினார். " என் தவறை நான் உணர்ந்து விட்டேன் பிரபு என்னை என் பழைய உருவத்திற்கு மாற்றிவிடுங்கள்" என்று கேட்டார் எமன்.

  எருமை வாகனம்

  எருமை வாகனம்

  " உனது கொம்புகளை என்னால் அகற்ற இயலும் அதற்கு பதிலாக இன்று முதல் நீ எருமையை உன் வாகனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் " என நிபந்தனை விதித்தார். எமதர்மனும் கொம்புகளுக்கு பதில் எருமையே சிறந்தது என ஒப்புக்கொண்டார்.

  பிரம்மாவின் சாபம்

  பிரம்மாவின் சாபம்

  " பிரபு எனது பற்களையும் சரி செய்யுங்கள் " என்று எமன் கேட்டார். " நீ சத்தியலோகம் வந்தும் பிரம்மதேவனை சந்திக்கலாமல் சென்றதால் கோபமுற்ற பிரம்மதேவன் உனது பற்கள் இப்படியே இருக்கும்படி சாபமிட்டுள்ளார். எனவே என்னால் அதனை மாற்ற இயலாது" என்று திருமால் கூறினார். தன் நிலை கண்டு நொந்த எமனிடம் " கவலைப்படாதே எமதர்மரே இந்த பற்கள் உன்னை காண்பவரை பயமுறுத்தும், அது உன் கடமையை சரியாக செய்ய உனக்கு உதவும்" என்று ஆறுதல் கூறினார்.

  எமனின் ஆசை

  எமனின் ஆசை

  தன் விதியை இனி மாற்ற முடியாது என்பதை உணர்ந்த எமதர்மன் விஷ்ணுவிடம் தன்னை அவர் அருகில் வைத்துக்கொள்ளும்படி வரம் கேட்டார். விஷ்ணுவும் அதற்கு ஒப்புக்கொண்டார். திருமால் தன் மனைவி லக்ஷ்மியுடன் தன் அழகிய உருவத்தால் பக்தர்களை கவரும் சுந்தரேச பெருமாளாக காட்சியளிக்கும் அழகர் கோவிலில் எமதர்மனும் தன் வாகனத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து கொண்டிருக்கிறார்.

  எமனின் முடிவு

  எமனின் முடிவு

  தான் செய்த தவறுக்கு தனக்கு இந்த தண்டனை அவசியம்தான் என்பதை உணர்ந்த எமதர்மன் இனி தன் கடைமையில் இருந்து தவறாமல் இருப்பதாக சபதமெடுத்தார். அதேசமயம் தன் வாகனமாக எருமையையும் மனமாற ஏற்றுக்கொண்டார். இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. எருமை மாட்டின் வேகம் நாம் நன்கு அறிந்ததுதான். எனவே மரணம் மனிதர்களை மெதுவாகவே நெருங்கட்டும் அதற்குள் மனிதர்கள் தங்களின் பாவங்களை சரிசெய்து கொள்ளட்டும் என்று முடிவெடுத்தார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Reason behind Lord Yama's vehicle

  Lord Yama is the God of death. Through his good looking Yama attracted all women and he didn't do his duty properly. So Lord Shiva changes his looks like Asura.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more