For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமான் ஏன் நரசிம்மரை வதைத்து அவர் தலையை தன் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டார் தெரியுமா?

மிகவும் உக்கிரமான திருமாலின் நரசிம்ம அவதாரமானது இரணியகசிபுவை அழிப்பதற்காக எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு நடந்தவைதான் அதிர்ச்சியை அளிக்கக்கூடியது.

|

இந்துக்களின் முப்பெரும் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் என மூவரும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் வேலைகளை செய்கின்றனர். இவர்களில் சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் உலகத்தில் அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் அவதாரங்கள் எடுத்து அதனை அழித்து மக்களை காத்து வந்தனர்.

Why Lord Shiva killed Lord Vishnus avatar Narasimha

சத்யுகத்தில் இருந்து கலியுகம் வரை விஷ்ணு 9 அவதாரங்கள் எடுத்துள்ளார். அவர் எடுத்த ஒவ்வொரு அவதாரமும் உலகத்திற்கு நன்மையையே வழங்கியது. இதில் முக்கியமான ஒரு அவதாரம் என்றால் அது நரசிம்ம அவதாரம்தான். மிகவும் உக்கிரமான திருமாலின் இந்த அவதாரமானது இரணியகசிபுவை அழிப்பதற்காக எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு நடந்தவைதான் அதிர்ச்சியை அளிக்கக்கூடியது. நரசிம்ம அவதாரத்திற்கு பின் திருமாலுக்கு என்ன நேர்ந்தது என்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நரசிம்ம அவதாரம்

நரசிம்ம அவதாரம்

இரணியகசிபுவை பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள், தன் மகன் பிரகலாதன் தன்னை வணங்காமல் திருமாலை வணங்கியதால் கோபமுற்ற இரணியகசிபு பிரகலாதனை கொள்ள துரத்தியதும் அவனை காப்பாற்ற திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை வதைத்ததும் நீங்கள் நன்கு அறிந்த ஒன்று. ஆனால் அதற்கு பின் நடந்தது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ரிஷி காஸ்யபர்

ரிஷி காஸ்யபர்

இந்து புராணங்களின் படி சப்தரிஷிகளில் ஒருவரான ரிஷி காஸ்யபர்க்கு திருமாலின் அருளால் இரணிய கசிபு மற்றும் இரண்யாக்ஷன் என்னும் இரண்டு மகன்கள் பிறந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அசுரர்களாக வளர்ந்தனர். அவர்களில் இரண்யாக்ஷன் பூமா தேவியை கட்டாயப்படுத்தி அசுர உலகத்திற்கு கடத்திச்சென்றான். அந்த தருணத்தில் அனைத்து தேவர்களும் விஷ்ணுவிடம் காப்பாற்றும்படி வேண்டினர்.

வராக அவதாரம்

வராக அவதாரம்

இரண்யாக்ஷனை வதைக்க திருமால் வராக அவதாரம் எடுத்தார். வராக அவதாரம் என்பது பன்றியும், மனித உருவமும் சேர்ந்த உருவமாகும். வராக அவதாரமெடுத்த திருமால் தன் கொம்பால் இரண்யாக்ஷன் மார்பில் குத்தி அவனை வதைத்தார். பூமாதேவியை காப்பாற்றி விட்டு அசுரர் உலகத்தில் இருந்த அனைவரையும் வதைத்தார். தன் சகோதரனின் இறப்பை கேட்டு நடுங்கிய இரணியகசிபு தன் உயிரை பாதுகாக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்க தொடங்கினான்.

இரணியகசிபு பெற்ற வரம்

இரணியகசிபு பெற்ற வரம்

இரணியகசிபுவின் தவத்தை மெச்சி சிவபெருமான் அவன் விரும்பும் வரத்தை கொடுக்க விரும்பினார். மரணமில்லா வாழ்வை கேட்கக்கூடாதது என்று சிவபெருமான் கூறியதால் தந்திரமாக சிவனை ஏமாற்ற எண்ணினான் இரணியகசிபு. தன் மரணம் மனிதன் அல்லது மிருகம் அல்லாத ஒருவனால் எந்தவித ஆயுதமும் இல்லாமல், பகல் மற்றும் இரவு நேரமும் இல்லாமல், பூமியிலும், வானத்திலும் இல்லாமல் நிகழவேண்டும் என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தை வழங்கினார்.

MOST READ: தினமும் நடுராத்திரியில் ஒரே நேரத்தில் நீங்கள் எழுந்துக்கொள்ள பல திடுக்கிடும் காரணங்கள் உள்ளது..!

பிரகலாதன் பிறப்பு

பிரகலாதன் பிறப்பு

தான் கேட்ட வரம் கிடைத்துவிட்ட கர்வத்தால் இரணியகசிபு மூவுலகத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான். தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் துளியும் இரக்கமின்றி கொன்றான். இந்த சூழ்நிலையில்தான் இரணியகசிபுவிற்கு பிரகலாதன் என்னும் மகன் பிறந்தான். அவன் தன் தந்தையை போல அல்லாமல் திருமால் மீது அதிக பக்தி கொண்டவனாக இருந்தான்.

பிரகலாதனுக்கு சித்திரவதை

பிரகலாதனுக்கு சித்திரவதை

இரணியகசிபு எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரகலாதன் தொடர்ந்து திருமாலையே வணங்கினான். இதனால் தன் மகன் என்றும் பாராமல் அவனை கொல்ல உத்தரவிட்டான். இரணியகசிபுவின் வீரர்கள் எவ்வளவு முயன்றும் பிரகலாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் பிரகலாதனை தன் கைகளாலே கொல்ல துணிந்தான் இரணியகசிபு.

இரணியகசிபு வதம்

இரணியகசிபு வதம்

பிரகலாதனை வதைக்க இரணியகசிபு முயன்றபோது அங்கு நரசிம்ம அவதாரத்தில் தோன்றிய திருமால் அவனை வதைக்க முயன்றார். இரணியகசிபுவை வீழ்த்திய நரசிம்மர் அவனை தூக்கி தன் மடியில் வைத்து தன் கூறிய நகங்களால் அவன் மார்பை பிளந்து கொன்றார். நரசிம்மர் எப்படி இரணியகசிபுவை வதைக்க காரணம் நரசிம்ம அவதாரம் மனிதரும் அல்ல மிருகமும் அல்ல இரண்டும் கலந்த உருவம், அவர் இரணியகசிபுவை வதைக்க பயன்படுத்தியது எந்த ஆயுதத்தையும் அல்ல தன் நகங்களை, அவர் கொன்ற இடம் வானமும் அல்ல பூமியும் அல்ல அவரின் மடியில், அவர் இரணியகசிபுவை வதைத்த நேரம் பகலும் அல்ல இரவும் அல்ல இரண்டுக்கும் இடைப்பட்ட மாலை நேரம். இதனால்தான் நரசிம்மரால் இரணியகசிபுவை வதைக்க முடிந்தது.

நரசிம்மரின் கோபம்

நரசிம்மரின் கோபம்

நரசிம்மரின் கோபம் மூவுலகத்தினரையும் அஞ்சி நடுங்கும்படி செய்தது. அவரின் கோபம் அனைவரையும் அழிக்க கூடியதாக இருந்தது. இதனால் உலகத்தை காப்பாற்ற அனைவரும் சிவபெருமானை வேண்டினர். எனவே சிவபெருமான் வீரபத்ரன் மற்றும் பத்ரகாளியை நரசிம்மமரை அமைதிப்படுத்த அனுப்பிவைத்தார்.

MOST READ: நீங்கள் செய்யும் இந்த செயல்களால்தான் ஆணுறுப்பில் முறிவு ஏற்படுகிறது

பத்ரகாளியின் தோல்வி

பத்ரகாளியின் தோல்வி

வீரபத்ரன் மற்றும் பத்ரகாளி இருவரும் எவ்வளவோ முயற்சித்தும் நரசிம்மரை வீழ்த்தவோ, அமைதிப்படுத்தவோ இயலவில்லை. இறுதியில் அவர்கள் நரசிம்மரிடம் சரணடைந்தனர். ஆனால் நரசிம்மர் அவர்களையும் வதைக்க துணிந்தார். எனவே சிவபெருமான் அவர்களை காப்பாற்றும் பொருட்டு நேரடியாக வந்தார்.

சரப உருவம்

சரப உருவம்

நரசிம்மரை கட்டுப்படுத்த தன் பேரழிவு உருவமான ஷரபா உருவத்தில் தோன்றினார் சிவபெருமான். சரப உருவம் என்பது மிகப்பெரிய அசுர உருவமாகவும், நிறைய கைகளுடனும், பறக்க இறக்கைகளுடனும் இருந்தது. இந்த பயங்கர உருவத்தில் தோன்றிய சிவபெருமான் நரசிம்மரை அந்த இடத்தில் இருந்து தூக்கிக்கொண்டு பறந்து சென்று மயக்கமடைய செய்தார்.

நரசிம்மமரின் மரணம்

நரசிம்மமரின் மரணம்

மயக்கம் தெளிந்த நரசிம்மர் தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் சரணடைந்தார். திருமாலின் ஒவ்வொரு அவதாரமும் மரணத்தை தழுவ வேண்டியது கட்டாயம். எனவே நரசிம்மர் தன்னை வதைக்கும்படி சிவபெருமானிடம் வினவினார். எனவே சிவபெருமான் நரசிம்மரை வதைத்து அவரின் மண்டை ஓட்டை தன் மாலையில் அணிந்துகொண்டார்.

MOST READ: உங்களுக்கு மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கு இந்த ஒரு பழமே போதும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Lord Shiva killed Lord Vishnu's avatar Narasimha

Do you know why Lord Shiva had to intervene and his avatar was sent to kill Lord Vishnu’s avatar Narasimha?
Desktop Bottom Promotion