For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரம்மாவின் ஐந்தாவது தலையை சிவபெருமான் வெட்டியதற்கான காரணம் என்ன?

பிரம்மாவிற்கு இருந்த ஐந்து தலைகளில் ஒரு தலையை வெட்டியதே சிவபெருமான்தான். அதற்கு காரணம் பிரம்மாவின் கர்வமும் அவர் செய்த தவறுகளும்தான்.

|

இந்துக்களின் கடவுள்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்கள் பிரம்மா, திருமால் மற்றும் சிவபெருமான் ஆவர். இதில் பிரம்மா படைத்தல் தொழிலையும், திருமால் காத்தல் தொழிலையும், சிவபெருமான் அழித்தல் தொழிலையும் செய்து வருகின்றனர். இப்படி இருக்கும்போது உலகம் முழுவதும் காக்கும் திருமாலுக்கும், அழிக்கும் சிவனுக்கும் இருக்கும் கோவில்களை கணக்கிடும்போது படைப்பின் கடவுளான பிரம்மாவுக்கு கோவில்கள் இல்லாதது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லையா? அதேபோல பிரம்மாவிற்கு மொத்தம் ஐந்து தலைகள் இருந்தது உங்களுக்கு தெரியுமா?

why Lord Shiva cut Brahmas head

பிரம்மாவிற்கு இருந்த ஐந்து தலைகளில் ஒரு தலையை வெட்டியதே சிவபெருமான்தான். அதற்கு காரணம் பிரம்மாவின் கர்வமும் அவர் செய்த தவறுகளும்தான். இந்து புராணங்களின் மிகமுக்கியமான இந்த நிகழ்வை பற்றி பல கதைகள் உள்ளது. இதனை பற்றி சத்குரு ஸ்ரீ ஸ்ரீ தாதாஜி மஹராஜ் என்ன கூறுகிறார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகாயோகி ஸ்ரீ ஸ்ரீ தாதாஜி மஹராஜ்

மகாயோகி ஸ்ரீ ஸ்ரீ தாதாஜி மஹராஜ்

நம் காலகட்டத்தில் வாழும் மிகவும் எளிமையான, புகழ்பெற்ற ஒரு புனிதர்தான் ஸ்ரீ ஸ்ரீ தாதாஜி மஹராஜ். இவரின் எளிமையான கடவுள் பற்றிய சிந்தனைகளும், சொற்பொழிவுகளும் ஆன்மீகத்தை நோக்கிய கதவுகளை யோகிகளுக்கும், சாதாரண மக்களுக்கும் திறந்து விட்டுள்ளது. அனைவரும் ஆன்மீகபுனிதத்துவதை அடைய பழங்கால வழிமுறைகளை பின்பற்றும்போது தாதாஜி மஹராஜ் சாதாரண மக்களும் ஆன்மீகத்தை புரிந்துகொண்டு அதன் புனிதத்துவதை அடைய எளிய நடைமுறையை வடிவமைத்துள்ளார்.இவருடைய ஒரே குறிக்கோள் அனைத்து மக்களின் மனதிலும் ஆன்மீகத்தின் விதையை விதைப்பதே.

பிரம்மா செய்த ஒப்பீடு

பிரம்மா செய்த ஒப்பீடு

ஒருமுறை பிரம்மா சிவபெருமானிடம் பேசிக்கொண்டிருந்த போது பிரம்மதேவர் சிவபெருமானிடம் " ஏன் அனைத்து மக்களும் என்னைவிட தங்களை அதிகமாக வணங்குகிறார்கள்? உங்களுக்கும் ஐந்து தலை இருக்கிறது எனக்கும் ஐந்து தலை இருக்கிறது , எந்த வகையில் நீங்கள் என்னை விட சிறந்தவர் " என்று ஆணவத்துடன் கேட்டார். பிரம்மாவின் அவமரியாதையும், அவரின் இகழ்ச்சியும் சிவபெருமானை கோபப்படுத்தியது. பொறுமையிழந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையை கொய்தார். உங்களுக்கு இப்பொழுது நான்கு தலைதான் இருக்கிறது ஆனால் எனக்கு ஐந்து தலை இருக்கிறது, இப்போது நான் உங்களைவிட சிறந்தவன்தானே என்று கூறினார்.

ரிஹாத் சிவபுராண கதை

ரிஹாத் சிவபுராண கதை

இதற்கு இன்னொரு கதையும் சிவபுராணத்தில் மற்றொரு கதையும் உள்ளது. இந்த சிவபுராணம் பிரம்மதேவரின் மூத்த மகனால் எழுதப்பட்டது. இதன்படி ஒருமுறை திருமால் யோகநித்திரையில் இருந்தபோது பிரம்மதேவர் அவரை பார்க்க அங்கு வந்தார். யோகநிலையில் இருந்ததால் திருமால் பிரம்மா வந்ததை கவனிக்காமல் நித்திரையை தொடர்ந்தார்.

சிவபெருமானின் யோசனை

சிவபெருமானின் யோசனை

திருமால் தன்னை கவனிக்காததால் அங்கேயே நின்றிருந்த பிரம்மா திருமால் விழித்ததும் அவரிடம் சண்டைக்கு சென்றார். நான் வந்தது கூட தெரியாமல் தூங்கி என்னை அவமதித்துவிட்டிர்கள் என்று கோபமுற்றார். அவர் இவ்வாறு கூறியதால் இருவருக்குள்ளும் யார் உலகில் மிகப்பெரியவர் என்ற வாக்குவாதம் நிகழ்ந்தது.அப்பொழுது அங்கு வந்த சிவபெருமான் அவர்களுக்குள் ஒரு பந்தயம் வைத்தார். அதன்படி தன் அதை அல்லது அந்தத்தை முதலில் கண்டுபிடிப்பவரே சிறந்தவர் என்று கூறினார்.

MOST READ: உங்கள் வாய்துர்நாற்றம் உடனடியாக குணமாக இந்த சாதாரண பொருட்கள் போதும்

பிரம்மாவின் பொய்

பிரம்மாவின் பொய்

சிவபெருமானின் போட்டியை பற்றி அறிந்ததும் திருமால் வராக மூர்த்தி உருவம் எடுத்து சிவபெருமானின் காலை பார்க்க கீழ்நோக்கி தோண்டி சென்றார். அதேபோல பிரம்மாவோ சிவபெருமானின் தலையை பார்க்க அன்னப்பறவையின் உருவம் எடுத்து பறந்து சென்றார். ஆனால் இருவராலுமே அவர்கள் நினைத்ததை செய்ய முடியவில்லை. இருவரும் 4000 ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தனர். திருமால் தான் தோல்வியை ஒப்புக்கொண்டார், ஆனால் பிரம்மா தான் சிவபெருமானின் தலையை பார்த்ததாக பொய் கூறினார்.

பிரம்மா - திருமால் போர்

பிரம்மா - திருமால் போர்

பிரம்மா கூறுவது பொய் என்று உணர்ந்த விஷ்ணு கோபமுற்றார். எனவே அவர்களுக்குள் கடும் போர் மூண்டது. இருவருக்குள்ளும் நடந்த போர் தேவலோகத்தையே நடுங்க செய்தது. எனவே அவர்கள் தங்களை காப்பாற்றும்படி சிவபெருமானிடம் வேண்டினர். அவர்களின் போரை நிறுத்திய சிவபெருமான் அதற்கான காரணத்தை வினவினார். முதலில் பேசிய விஷ்ணு நடந்த உண்மையை கூறினார். விஷ்ணு கூறிய உண்மையால் மகிழ்ந்த சிவருமான் அவருக்கு அருள்புரிந்தார். அதேசமயம் பிரம்மா கூறுவது பொய் என்பதையும் அவர் அறிந்தார்.

பைரவர்

பைரவர்

சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணால் பைரவரை உருவாக்கி பிரம்மா செய்த தவறுக்காக அவரின் அனைத்து தலைகளையும் வெட்டச்சொன்னார். பைரவ மூர்த்தி பிரம்மாவின் ஒரு தலையை வெட்டியவுடன் அதனை கண்டு அஞ்சிய பிரம்மா சிவபெருமான்தான் அனைத்து கடவுள்களையும் விட உயர்ந்தவர் என்பதை உணர்ந்தார். அதன்பின் சிவபெருமானிடம் தன் தவறை மன்னித்து தன்னை பைரவரிடம் இருந்து காப்பாற்றும்படி வேண்டினார். பிரம்மாவை காப்பாற்றிய சிவபெருமான் இனி உன்னை யாரும் வணங்கமாட்டார்கள் , உனக்கு எங்கும் கோவில்கள் இருக்காது என்று சாபமளித்தார்.

சிவபெருமானின் ரூபங்கள்

சிவபெருமானின் ரூபங்கள்

இந்து புராணங்களில் நாம் சிவபெருமானை நாம் பல ரூபங்களில் பார்க்கலாம். ஒரு தலையுடைய சிவபெருமான், இரண்டு தலையுடைய சரப உருவம், மூன்று தலைகளுடன் இருக்கும் திரியம்பகேஸ்வரர், நான்கு தலைகளுடன் காட்சியளிக்கும் தத்புருஷ சிவபெருமான், ஐந்து தலைகளுடன் இருக்கும் நீலகண்ட சிவபெருமான். சிவபெருமானின் விஸ்வரூபமான சதாசிவத்திற்கு ஆயிரக்கணக்கான கைகளும், கால்களும், நூற்றுக்கணக்கான தலைகளும் இருக்கும். இந்த சதாசிவ உருவத்தை தமிழ்நாட்டில் இருக்கும் சுசீந்திரத்தில் உலா கோவிலில் காணலாம்.

MOST READ: எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையாக இருக்கா..? சரிசெய்ய வழி இதோ..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why Lord Shiva cut Brahma's head answered by Sri Sri Dadaji Maharaj

There are many mythological stories around this epic incident where Lord Shiva had cut the fifth head of Lord Brahma.
Desktop Bottom Promotion