For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவனுக்கும் முருகனுக்கும் இடையில் மாட்டியதால் பிரம்மா சிறைசென்ற கதை தெரியுமா?

ஈசனுக்கும், கந்தனுக்கும் இடையே இருந்த உறவு சுவாரஸ்யமானதாக இருந்தது.அதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றுதான் முருகன் சிவனுக்கு குருவாகி " சிவகுரு " என்னும் பெயர் வாங்கியது. இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொ

|

இன்று ஆசிரியர் தினம். எனவே உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். இன்று நாம் வாழ்த்து சொல்ல வேண்டிய மற்றோரு பெரிய ஆசிரியர் உள்ளார்.அவர் வேறுயாருமல்ல அப்பாவான ஈசனுக்கு பாடம் சொன்ன முருகன்தான். இந்து புராணங்களில் பெரும்பாலும் அப்பா - மகன் உறவு மிகவும் உணர்ச்சிபூர்வமானதாக இருக்கும். ஆனால் சிவனுக்கும் - கார்த்திகேயனுக்கும் இடையே இருந்த உறவு சற்று வித்தியாசமானது.

ஆம். ஈசனுக்கும், கந்தனுக்கும் இடையே இருந்த உறவு சுவாரஸ்யமானதாக இருந்தது.அதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றுதான் முருகன் சிவனுக்கு குருவாகி " சிவகுரு " என்னும் பெயர் வாங்கியது. இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டது பாவம் பிரம்மதேவர்தான். ஏனென்றால் முருகன் பிரம்மாவை சிறைபிடித்து வைத்ததால்தான் சிவன் முருகனுக்கு சீடராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி இங்கே பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிராம்மாவை தடுத்த முருகன்

பிராம்மாவை தடுத்த முருகன்

பிரம்மதேவர் கைலாயம் வந்து சிவபெருமானை சந்தித்து விட்டு திரும்பிய போது சிறுவனாக இருந்த கார்த்திகேயன் அங்கே விளையாடிக்கொண்டிருந்தார். பிரம்மா திரும்ப எத்தனித்த போது அவரை தடுத்தி நிறுத்தினார் முருகன். சிவபெருமானின் மகனான தனக்கு உரிய மரியாதையை பிரம்மா தரவில்லை என்ற கோபம் அவருக்கு. தன்னை தடுத்து நிறுத்திய பாலகனை அதிர்ச்சியாய் பார்த்தார் பிரம்மா. முருகன் பிரம்மாவிடம் உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினார். இதனால் மேலும் குழப்பமடைந்த பிரம்மா தன்னை படைப்பின் கடவுள் எனவும், வேதங்களின் அதிபதி எனவும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

முருகப்பெருமானின் கேள்வி

முருகப்பெருமானின் கேள்வி

பிரமமாவின் பதிலை கேட்ட முருகன், அவருக்கு எங்கிருந்து படைக்கும் ஆற்றல் வந்தது என்று மீண்டும் கேள்வி கேட்டார். அதற்கு பிரம்மதேவர் தான் படித்த வேதங்களில் இருந்து என்று பதில் கூறினார். நீங்கள் உண்மையிலேயே வேதங்களில் நிபுணர் என்றால் " ஓம் " என்பதன் அர்த்தத்தை கூறிவிட்டு இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறினார் முருகன். இதனால் கோபமுற்ற பிரம்மதேவர் " ஓம் " மந்திரத்தின் அர்த்தத்தை கூறிவிட்டு அங்கிருந்து நகர முயன்றார்.

பிரம்மாவை சிறைபிடித்த முருகன்

பிரம்மாவை சிறைபிடித்த முருகன்

பிரம்மா கூறிய பதிலில் திருப்தி அடையாத முருகன் அவரை சிறையில் அடைக்க முடிவு செய்தார். எனவே தன் நண்பர்களுடன் சேர்ந்து பிரம்மாவை சிறையில் தள்ளினார் பார்வதி மைந்தன் கார்த்திகேயன். இதனால் உலகில் பல ஆபத்தில் உண்டானது. படைப்பு தொழில் முற்றிலும் நின்றதால் பூமியே உறைந்தது போல மாறிவிட்டது.

சிவனிடம் உதவி

சிவனிடம் உதவி

படைப்பு தொழில் நின்றதால் அதிர்ச்சியடைந்த தேவர்கள் பிரம்மாவை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தன் சிறிய மகன் எப்படி பிரம்மதேவரையே சிறைபிடித்தான் என்பது சிவபெருமானுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து பிரம்மாவை மீட்பதாக ஈசன் வாக்களித்தார்.

சிவனின் கோபம்

சிவனின் கோபம்

சிவபெருமான் முருகனை அழைத்தார். அவரை கட்டியணைத்து கொஞ்சி தன் மடியில் அமரவைத்து பிரம்மாவை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். முருகனோ ஒரே வார்த்தையில் முடியாது என்று கூறிவிட்டார். தன் மென்மையான வழி தோல்வியடைந்ததை உணர்ந்து கோபப்பட்ட ஈசன் பிரம்மதேவரை உடனே விடுதலை செய்யும்படி முருகனுக்கு உத்தரவிட்டார்.

முருகனின் விளக்கம்

முருகனின் விளக்கம்

கோபமுற்ற தன் தந்தையை சமாதானப்படுத்தும் பொருட்டு பிரம்மாவை விடுவிக்க ஒப்புக்கொண்டார் முருகன். ஆனால் அதற்கு முன் " ஓம் " மந்திரத்தின் விளக்கத்தை கூறும்படி கேட்டார். அனைத்திற்கும் மூலமான " ஓம் " மந்திரத்தை புறக்கணிப்பது மன்னிக்கமுடியாதது என்று முருகன் வாதிட்டார். இது படைப்பின் கடவுளுடைய அறியாமையை காண்பிப்பதாக கூறினார் முருகன்.

சிவபெருமானின் விருப்பம்

சிவபெருமானின் விருப்பம்

தன் மகனுடைய வாதத்தில் நியாயம் இருப்பதையும், தன் மகனுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருப்பதை கண்டும் மகிழ்ந்தார் சிவபெருமான். மேலும் தன் மகனிடம் " ஓம் ' மந்திரத்தின் அர்த்தத்தை தனக்கு விளக்கும் படி கேட்டார் சிவபெருமான். அதற்கு முருகன் தாங்கள் என்னிடம் மாணவன் போல நடந்துகொண்டால் கற்றுத்தருகிறேன் என்று கூறினார்.

மாணவனான ஈசன்

மாணவனான ஈசன்

சிவபெருமான் தன் மகனை தூக்கி மடியில் அமரவைத்து தன் கைகளை பவ்யமாக வைத்துக்கொண்டு தன் மகன் கூறிய பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை கேட்டுக்கொண்டார். சில நூல்களில் முருகன் அமர்ந்திருக்க ஈசன் தலைகுனிந்து கைகளை பவ்யமாக வைத்துக்கொண்டு பாடம் கற்றதாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பாடம் கற்கும்போது மாணவர்கள் கற்பிப்பவர்களை விட கீழே இருந்தால்தான் அதன் அறிவு அவர்களின் செவிகளை சென்று அடையும் என்று பிரம்ம உபதேச நூலில் கூறப்பட்டுள்ளது.

சுவாமிமலை

சுவாமிமலை

கந்தபுராணத்தின் படி முருகன் ஈசனுக்கு உபதேசித்த இடம் தான் பின்னாளில் சுவாமிமலை என்று முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக மாறியதாக கூறப்பட்டுள்ளது. முருகன் சுவாமிநாத சுவாமியாக எழுந்தருளியுள்ள இந்த கோவிலில் சிவபெருமான் சுந்தரேஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Lord Shiva became a student of Lord Muruga?

According to Kanda Puranam Lord Muruga became a teacher to Lord Shiva. Because Lord Shiva wanted to learn about " Aum " mantra.
Desktop Bottom Promotion