For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா?

காசியில் ஏன் பல்லியும் கருடனும் இல்லை என்பது பற்றிய புராண ஆன்மீகக் காரணம் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் காணலாம்.

|

ஏழு ஜென்மத்துக்கும் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது என்பது நமக்குத் தெரியும். அந்த காசியைப் பற்றிய நிறைய கதைகள் நாம் கேட்டிருப்போம்.

why garud donot fly and lizard donot make noise in kasi

அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம். ஆனால் அங்கு இருக்கின்ற சில அதிசயமான விஷயங்கள் பற்றி இங்கு பார்க்கலாம். கேட்டால் வியந்து போவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாரணாசி

வாரணாசி

காசியைச் சுற்றிப் பார்த்தீர்கள் என்றால், எங்கும் கருடன் சுற்றுவதைப் பார்க்கவே முடியாது. அதேபோல் காசியில் எங்குமே பல்லியை உங்களால் பார்க்கவே முடியாது. ஏன் என்ற கேள்வியை உங்களுடைய மனதில் கேட்டுப் பாருங்கள். இதை நாம் சாதாரணதமாக எடுத்துக் கொள்ள முடியாது.

நம்முடைய வீடுகளில் கூட சாதாரணமாக திரிகின்ற பல்லி மோட்ச ஸ்தலமான வாரணாசியில் மட்டும் ஏன் இல்லை என்று யோசிக்க வேண்டியது மிக அவசியம்.

 ராவண வதம்

ராவண வதம்

இந்த விஷயம் நடந்தது பல யுகங்களுக்கு முன்பு ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், ஹனுமனிடம் ராமேஷ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத் நிறுவ வேண்டும். அதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வரும்படி கட்டளையிடுகிறார். அப்படி அனுப்புகிற பொழுது, காசிய நோக்கி ஹனுமான் பயணம் செய்கிறார்.

இன்றைய அதிர்ஷ்ட ராசிகள் மூன்று பேர் யார் யாரென்று இதை பார்த்து கண்டுபிடிங்க பார்க்கலாம்...

ஹனுமான் காசிக்கு வருதல்

ஹனுமான் காசிக்கு வருதல்

அப்படி காசியை நோக்கி ஹனுமான் வரும்பொழுது, அவருடைய கண்களில் அங்கிருக்கும் பல ஆயிரக்கணக்கான லிங்கங்களும் அங்கு தென்படுகின்றன. அதைப் பார்த்ததும் ஹனுமான் குழம்பிப் போகிறார். அங்கிருக்கும் லிங்கங்களில் எது சுயம்பு லிங்கம் என்பது அவருக்குத் தெரியவில்லை. சுய லிங்கத்தைக் கொண்டு சென்றால் அதற்குரிய பலன் என்பது மிகமிக அதிகம். அதற்குரிய சக்தியும் அதிகம். அதனுடைய சக்திப் பிரவாகம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சுயம்பு லிங்கத்தை காசி முழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் ஹனுமன். ஆனால் கிடைக்கவில்லை.

வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து வழிபட வேண்டுமென்றால் செய்ய வேண்டிய விதிமுறைகள் என்ன?

கருடனின் உதவி

கருடனின் உதவி

அப்பொழுது கருடன் அவருக்கு உதவி செய்ய முன்வருகிறார். இதுதான் நீங்கள் தேடுகின்ற சுயம்பு லிங்கம் என்று ஹனுமனுக்குப் புரிய வைப்பதற்கான ஒரு சுயம்பு லிங்கத்துக்கும் மேலாக மேல்நோக்கி, வட்டமடித்து கத்திக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தது கருடன். அதை ஹனுமன் கண்டுபிடித்துவிட்டார்.

பல்லியின் உதவி

பல்லியின் உதவி

அதேபோல் பல்லியும் அந்த சுயம்பு லிங்கம் இருக்கின்ற திசையைப் பார்த்து, கத்தி காட்டிக் கொடுத்தது. இவ்வாறு கருடனும் பல்லியும் சுயம்பு லிங்கம் இருப்பதை ஹனுமன் கண்டுபிடிப்பதற்காக உதவி செய்தது.

மனிதன் இறக்கும்போது வலிக்குமா?... இன்னும் பல மர்மங்களுக்கு விடை இதோ...

ஹனுமான் புறப்பாடு

ஹனுமான் புறப்பாடு

இதன்பின்பு, கருடன், பல்லி இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, அந்த சுயம்பு லிங்கத்தை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தார். அப்படி கிளம்புகிற பொழுதுதான் அங்கே ஒரு பெரிய பிரச்சினை வெடித்தது.

இந்த 10 வேலை செய்றவங்கதான் குண்டாகிட்டே போவாங்களாம்... நீங்களும் இதான் செய்றீங்களா?

கால பைரவர்

கால பைரவர்

காசியில் காவல் தெய்வமாக இருப்பவர் யார் தெரியுமா? காசிக்கு காவல் தெய்வமாக இருப்பவர் கால பைரவர். அந்த கால பைரவரைத் தாண்டி, யாரும் காசியை விட்டு எதுவும் வெளியில் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது. ஆனால் ஹனுமனோ தன்னுடைய எஜமானர் ஹீராமருடைய கட்டளைப்படி சுயம்பு லிங்கத்தை எப்படியாவது கொண்டு சென்று விட வேண்டும் என்று எடுத்துச் செல்கிறார். அப்போது கால பைரவர் ஹனுமனை தடுத்து நிறுத்துகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற ஆரம்பித்து, சண்டை வலுக்க ஆரம்பிக்கிறது. இருவருக்குமே கோபமும் ரௌத்திரமும் கட்டுக்கடங்காமல் போய்விட்டது.

நட்புக்காக உயிரையே கொடுக்கும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? தெரிஞ்சி பழகுங்க...

தேவர்கள் வேண்டுதல்

தேவர்கள் வேண்டுதல்

இதைப் பார்த்த தேவலோகத்தினர் இப்படியே தொடர்ந்தால், இந்த மண்ணுலகில் பிரளயமே வெடிக்குமே என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே அதிக பலசாலிகளாக இருப்பதால் இருவருக்கும் இடையே இருக்கின்ற சண்டையை எப்படியாவது பெரிதாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யோசித்து கால பைரவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். சுயம்பு லிங்கத்தை எடுத்துச் செல்லவும் வழிவகுக்க வேண்டும் என்று கூறினார்.

இன்னைக்கு இந்த ராசிக்காரர் மட்டும் வாயைத் திறக்காம இருக்கிறது நல்லது... திறந்தா நஷ்டந்தான்

ஹனுமானும் சுயம்பு லிங்கமும்

ஹனுமானும் சுயம்பு லிங்கமும்

ஹனுமானின் விசுவாசத்தைப் புரிந்து கொண்ட அவர், லிங்கத்தை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைக் கொடுத்தார். தன்னுடைய அனுமதியின்றி எடுத்துச் சென்றதற்காக மட்டுமே தான் சண்டையிட்டதாகத் தெரிவித்தார். அதோடு சுயலிங்கத்தை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகவும் ஹனுமனை அனுப்பி வைத்தார்.

எப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா?... அதுக்கு நீங்க பண்ற இந்த 5 விஷயம் தான் காரணம்...

காலபைரவர் சாபம்

காலபைரவர் சாபம்

ஆனால் அதேசமயம் ஹனுமனுக்கு தன்னுடைய அனுமதியின்றி லிங்கத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக கருடனுக்கும் பல்லிக்கும் சாபத்தை வழங்கினார் கால பைரவர். இந்த வாரணாசியில் (காசியில்) எங்கும் நீங்கள் இருவரும் இருக்கக்கூடாது என்று சாபம் கொடுத்தார். எப்போதும் காசிக்கு வரைக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் வாரணாசியில் எப்போதும் கருடனும் பல்லியும் இருப்பதில்லை.

கோக் குடிக்கிறதுக்கு மட்டும்னு நெனச்சீங்களா? வேற என்னலாம் பண்ணலாம்னு வாயை பிளந்து பாருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why garud donot fly and lizard donot make noise in kasi

here we are talking about why garud donot fly and lizard donot make noise in kasi.
Story first published: Friday, December 14, 2018, 17:10 [IST]
Desktop Bottom Promotion