Latest Updates
-
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
துர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...
துர்கா தேவி ஒன்பது திருவுருவங்களாக உருவாகி அவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் அன்பையும் காப்பாற்றினார். இங்கே அந்த அற்புதமான கதையை பற்றி இப்பொழுது நாம் காணலாம்.
நவராத்திரி திருவிழா என்பது அரக்கன் மகிசாசுரனின் அட்டூழியங்களில் இருந்து இவ்வுலகைக் காப்பாற்றிய நாளாக கொண்டாடப்படுகிறது. அன்னை துர்கா தேவி அவனை அழித்து வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக இந்த ஒன்பது நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாளும் அன்னையின் பக்தர்கள் மனமுவந்து விரதம் புரிந்து வழிபடுவர்.

மகிசாசுரன் ஒரு கொடிய அரக்கன். அவனுக்கு மரணம் என்பதே கிடையாது. அவன் இரத்தம் விழும் துளியெல்லாம் மறுபடியும் மறுபடியும் உருவெடுத்தான். அன்னை துர்கா தேவி ஒன்பது திருவுருவங்களாக உருவாகி அவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் அன்பையும் காப்பாற்றினார்.
இங்கே அந்த அற்புதமான கதையை பற்றி இப்பொழுது நாம் காணலாம்.

மகிசாசுரன் யார்? அவன் பிறந்த கதை
அரக்கர்களின் ராஜா தான் ரம்பன். அவனுக்கு பிரம்மனின் பூர்ண ஆசிர்வாதம் இருந்ததால் எல்லா மக்களையும் தேவர்களையும் அடக்கி ஆள ஆரம்பித்தான். ஒரு நாள் அவன் அழகான ஒரு பெண்ணை கண்டு காதலில் விழுந்தார். அந்த பெண் ஒரு எருமை உருவம் உடையவள். அவள் மகிஷினி என்ற பெயரை பெற்றாள். ரம்பனும் ஒரு ஆண் எருமையாக மாறி அவளையே மணந்து கொண்டான். ஆனால் அவன் விலங்காக இருக்கும்போதே மற்றொரு எருமை தாக்கி அவன் இறந்து போனான்.
மகிஷினி தன் கணவர் இறந்த பிறகு தானும் இறந்து விட வேண்டும் என்ற முடிவை எடுத்தாள். அந்த சமயத்தில் அவள் கர்ப்பமாக வேறு இருந்தாள். நெருப்பில் குதித்து அவளை மாய்த்து கொள்ள முடிவெடுத்தாள். அப்பொழுது தான் நெருப்பிலிருந்து ஒரு மனிதனின் உடலும் எருமை தலை உடைய அரக்கன் மகிசாசுரன் என்ற மகனாக எழுந்து வந்தான். அவன் வந்ததும் அரக்கர் குலத்திற்கு தலைமை ஏற்றினான்.

பிரம்மனின் வரம்
மகிசாசுரன் தன்னுடைய சக்தியை அதிகரிக்க பிரம்ம தேவனை நோக்கி பதினாயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். இந்த பதினாயிரம் ஆண்டுகளும் உணவு ஏதும் அருந்தாமல் ஒற்றை காலில் நின்றே தவம் செய்து வந்தார். ஒரே இடத்தில் அசையாமல் தவம் புரிய புரிய அவனை சுற்றி ஒரு எறும்பு புற்றே உருவாகி இருந்தது. ஆனால் மகிசாசுரன் அதை சிறுதளவும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய கடும் தவத்தை பார்த்து மூன்று உலகமும் வியந்து இருந்தது. அவனுடைய தவத்தில் மெய் மறந்த பிரம்ம தேவர் அவனது முன் தோன்றி அவன் கேட்ட வரத்தை கொடுத்து அருள் புரிந்தார். கடவுள், இவ்வுலக ஆண்கள் இப்படி யாராலும் தன்னை அழிக்க முடியாத ஒரு பயங்கரமான வரத்தை பெற்று விட்டான் மகிசாசுரன்.
அதற்கு பிறகு அவன் ஆட்டம் அதிகமாக ஆரம்பித்தது. அவனுடைய வரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதை தவிர்த்து அழிவுப் பூர்வமாக பயன்படுத்த தொடங்கினான். மூன்று உலக மக்களையும் அடிமை படுத்தி கொடுமை படுத்த ஆரம்பித்தான். தேவர்கள், மக்கள் என்று எல்லாரையும் ஈவு இரக்கமின்றி கொன்று துன்புறுத்தி அடிமையாக்கினான். அவனுடைய அட்டகாசம் எல்லை தாண்டி போகலானது.

துர்கா தேவி தோன்றுதல்
அவனுடைய அட்டகாசத்தை தாங்க முடியாமல் மூன்று உலக மக்களும் தேவர்களும் சிவனிடம் சென்று முறையிட்டனர். மூன்று கடவுளாலும் அழிக்க முடியாத வரத்தை அவன் பெற்று இருந்தான். எனவே மூன்று கடவுள்களும் தங்கள் சக்தியை எல்லாம் சேர்த்து ஒரு பெண்ணை அதாவது அன்னை பராசக்தி தேவியை உருவாக்கினர்.

போருக்கு அழைத்தல்
அன்னை சக்தி தேவி சிம்ம வாகனத்தில் கயிலாயத்திற்கு ஆகாயம் வழியாக சென்றார். அப்பொழுது அவரின் அழகில் மயங்கிய மகிசாசுரன் அன்னை சக்தியை மணந்து கொள்ள ஆசைப்பட்டான். அப்பொழுது அவன் தன் பணியாளனை அனுப்பி செய்தியை சக்தி தேவியிடம் தெரிவித்தான். இதான் சரியான நேரம் என்பதை உணர்ந்த சக்தி மகிசாசுரனை போருக்கு அழைத்தார். போரில் எவர் தன்னை வீழ்த்துகிறாரோ அவர் என்னை மணந்து கொள்ளலாம் என்று கூறி அனுப்பினார்.

துர்கா தேவி மற்றும் மகிசாசுரனின் கடும் போர்
அன்னை சக்திக்கும் மகிசாசுனுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. அன்னை சக்தி அவனை வீழ்த்த வீழ்த்த அவன் இரத்தம் விழும் இடமெல்லாம் மறுபடியும் மறுபடியும் உயிர்த்தெழுந்தான். உடனே அன்னை சக்தி தன்னுடைய திருவுருவமான மகா காளியை உருவாக்கி அவன் இரத்தம் விழாமல் குடிக்க செய்தார். இது மாதிரி ஒன்பது திருவுருவங்களை எடுத்து அந்த கொடிய அரக்கனின் உருவங்களை அழித்து கொண்டே வந்தார். இறுதியில் 10 ஆம் நாளில் மகிசாசுரனை அழித்து இவ்வுலக மக்களை காப்பாற்றினார்.

நவராத்திரி தொடக்கம்
இந்த ஒன்பது நாட்களை நவராத்திரி தினமாக கொண்டாடி பத்தாம் நாள் விஜய தசமியாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பது போர் புரிந்த ஒன்பது நாள் இரவுகளையும், பத்தாம் நாள் அம்மன் பெற்ற வெற்றியையும் குறிக்கிறது. அன்றிலிருந்து மகிசாசுரனை வீழ்த்தியதால் சக்தி மகிசாசுரவர்த்தினி என்று அழைக்கப்பட்டார். ஒவ்வொரு வருடமும் சக்தி தேவியின் பக்தர்கள் நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து அவரின் அருமை பெருமை கதைகளை மனமுவர்ந்து படித்து அவரின் அருளை பெற்று வருகின்றனர்.

ஒன்பது நாள் அத்தியாயங்கள்
1 வது நாள் - மதுகைதபா சங்கரா
2 வது நாள் - மகிசாசுரா சங்கரா(அத்தியாயங்கள் 2,3&4).
3 வது நாள் - துமராலோச்சன் வதம் (அத்தியாயங்கள் 5&6)
4 வது நாள் - சன்டா முண்டா வதம் (அத்தியாயங்கள் 7)
5 வது நாள்-ரக்தாஸ் பீஜ் சங்கரா (அத்தியாயம் 8)
6 வது நாள்-சுப நிசும்ப வதம் (அத்தியாயங்கள் 9&10)
7 வது நாள்-நாராயணி மகிமை (அத்தியாயம் 11).
8 வது நாள்-ஃபலா ஸ்தி (அத்தியாயம் -12)
9 வது நாள் -சுரதா (அத்தியாயம் 13)
10 வது நாள் - ஷமா பிரார்த்தனை (அத்தியாயம் -14)



Click it and Unblock the Notifications