For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானும், அர்ஜுனனும் ஏன் போரில் ஈடுபட்டார்கள் தெரியுமா?

காண்டீவதாரியான அர்ஜுனனை வெல்வோர் மூவுலகத்திலும் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் அர்ஜுனனை தோற்கடித்தவர்களும் மகாபாரதத்தில் உண்டு.

|

இந்தியாவின் ஆகச்சிறந்த நூல்களில் ஒன்று மகாபாரதம் ஆகும். அதன் சிறப்புகளால்தான் அது இதிகாசமாக மாறி இருக்கிறது. இந்துக்களின் மிகஉயரிய புனித நூலாக மகாபாரதம் கருதப்படுகிறது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையில் ராஜ்ஜியத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தலைமையில் நடைபெற்ற போரே மகாபாரதம் ஆகும். இதில் பல சூழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு பாண்டவர்கள் வெற்றிபெற்றனர்.

Arjuna

பாண்டவர்களின் வெற்றிக்கு கிருஷ்ணருடைய புத்திகூர்மை எப்படி முக்கிய காரணமாக இருந்ததோ அதே அளவிற்கு மற்றொரு முக்கிய காரணம் அர்ஜுனனின் வீரம் ஆகும். காண்டீவதாரியான அர்ஜுனனை வெல்வோர் மூவுலகத்திலும் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் அர்ஜுனனை தோற்கடித்தவர்களும் மகாபாரதத்தில் உண்டு. யாரெல்லாம் அர்ஜுனனை தோற்கடித்தித்திருக்கிறார்கள் என்றும் மேலும் அர்ஜுனன் பற்றி தெரியாத தகல்வல்களையும் பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிருஷ்ணரின் உறவு

கிருஷ்ணரின் உறவு

கிருஷ்ணரும், அர்ஜுனனும் உறவினர்கள் ஆவர். குருஷேத்திர போரில் மட்டுமின்றி பல சூழ்நிலைகளில் அர்ஜுனனின் உயிரை கிருஷ்ணரே காப்பாற்றினார். கிருஷ்ணர் மட்டும் இல்லையெனில் அர்ஜுனன் எப்பொழுதோ கொல்லப்பட்டிருப்பார். பாண்டவர்களில் அர்ஜுனனே கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தவராவார் அதனால்தான் தன் சகோதரி சுபத்ரையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து வைத்தார்.

அர்ஜுனன் - காதல் மன்னன்

அர்ஜுனன் - காதல் மன்னன்

அர்ஜுனன் பெண்களின் கனவு கண்ணனாகவும், காதல் மன்னனாகவும் இருந்தார். அர்ஜுனனுடைய வசீகரமான தோற்றமும், வீரமும் அர்ஜுனன் மீது அனைவரும் காதலில் விழ காரணமாக அமைந்தது. அர்ஜுனனை திருமணம் செய்து கொள்ள பல பெண்களும், இளவரசிகளும் தவமிருந்தனர். ஆனால் அதில் திரௌபதி, உலூபி, சித்ராங்கதா மற்றும் சுபத்ரை ஆகியோர்க்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைத்தது.

அர்ஜுனனின் மறைமுக திறமை

அர்ஜுனனின் மறைமுக திறமை

அர்ஜுனனின் வில்லாற்றலையும், வீரத்தையும் உலகமே அறியும். ஆனால் பலரும் அறியாத அர்ஜுனனின் மறைமுக திறமை என்னவெனில் இசையும், நடனமும். அர்ஜுனன் வீணை வாசிப்பதில் இராவணனுக்கு இணையானவன் என்று பலரும் கூறுவார்கள். அதேபோல அவனின் நடன திறமை அர்ஜுனின் அஞ்ஞாதவாசத்தில் உதவியாய் இருந்தது. உத்திரைக்கு நடனம் கற்றுத்தரும் வேலையைதான் தன் அஞ்ஞாதவாசத்தில் செய்துவந்தான். அர்ஜுனனின் நடனம் காண்பவர்களை இமைகொட்டமால் பார்க்கச்செய்யும் என்று குறிப்புகள் உள்ளது.

ஏகலைவன்

ஏகலைவன்

அர்ஜுனன் செய்த மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகலைவனின் விரலை வெட்டியதாகும். அர்ஜுனன் நேரடியாக அதனை செய்யாவிட்டாலும் அந்த கொடுஞ்செயல் அர்ஜுனனை காரணமாக கொண்டே செய்யப்பட்டது. ஏகலைவனின் விரலை துரோணாச்சாரியார் ஏகலைவனின் விரலை கேட்க காரணம் அவன் அர்ஜுனனை விட வில்லாற்றாலில் சிறந்து விளங்கிவிடுவானோ என்ற அச்சம்தான். ஒருவேளை ஏகலைவனின் விரல் துண்டிக்கமால் இருந்தால் அர்ஜுனனை வெற்றிபெறக்கூடியவராக ஏகலைவன் இருந்திருப்பார்.

MOST READ: 'அந்த' இடத்தில் அரிப்பும் தொற்றும் அடிக்கடி வருதா? நீங்க செய்ய வேண்டிய கை வைத்தியம் இதுதான்...

கர்ணன்

கர்ணன்

அர்ஜுனனின் மூத்த சகோதரனான கர்ணன் தன் இறுதிமூச்சு வரை அர்ஜுனனை வீழ்த்துவதையே தன் வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருந்தார். அதற்கான வீரத்தையும், ஞானத்தையும் கூட கர்ணன் பெற்றிருந்தார். ஆனால் கிருஷ்ணர் உடன் இருந்ததால் அர்ஜுனனின் கை மேலோங்கிவிட்டது. வீரத்திலும், தானத்திலும் கர்ணனை மிஞ்ச யாருமில்லை என்று கிருஷ்ணரே அர்ஜுனனிடம் கூறியிருக்கிறார். கிருஷ்ணரின் துணையும், கர்ணணின் சாபங்களும் இல்லையெனில் நிச்சயம் குருஷேத்ர போரின் முடிவு வேறாக இருந்திருக்கும்.

அனுமன்

அனுமன்

பலரும் அர்ஜுனனை வெல்ல கூடிய திறமை இருந்தாலும் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஆஞ்சநேயருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அர்ஜுனன் வனத்திற்குள் சென்ற போது அங்கிருந்த வானரத்திடம் தான் இராமரை விட வில்லாற்றலில் சிறந்தவர் என்றும் வானரங்களின் துணை இல்லாமலேயே தன்னால் உறுதியான பாலத்தை அமைக்க முடியும் என்று சவால் விட்டார். அதை ஒப்புக்கொள்ளாத ஆஞ்சநேயரிடம் ஒருவேளை தான் இந்த சவாலில் தோற்றுவிட்டால் அங்கேயே தீக்குளிப்பதாக கூறினான். தான் காண்டீவத்தை கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்தை அமைத்தான் அர்ஜுனன். ஆனால் ஆஞ்சநேயர் நொடியில் அந்த பாலத்தை உடைத்தார். தன் தோல்வியை ஒப்புக்கொண்ட அர்ஜுனன் உடனே தீ மூட்டி தன் உயிரை விட துணிந்தான். ஆனால் அந்த சமயத்திலும் அர்ஜுனனை காப்பாற்றியது கிருஷ்ணர்தான்.

சிவபெருமான்

சிவபெருமான்

அர்ஜுனனை போர்புரிந்து தோற்கடித்த ஒருவர் உண்டெனில் அது சிவபெருமான்தான். வனவாசத்தில் இருந்த அர்ஜுனனிடம் பாசுபத அஸ்திரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றுவரும்படி அனுப்பி வைத்தார் கிருஷ்ணர். அர்ஜுனனும் இமயத்திற்கு சென்று சிவபெருமானை நோக்கி கடும் தவத்தில் ஈடுபட்டார், அர்ஜுனனின் வீரத்தை சோதிக்க வேடன் உருவெடுத்து அவனை சோதிக்க எண்ணினார் சிவபெருமான்

சிவபெருமானுடன் போர்

சிவபெருமானுடன் போர்

ஒரு பன்றியை நோக்கி அர்ஜுனன் அம்பு விட அதேசமயம் வேடனும் அம்பு விட பன்றி இறந்தது. ஆனால் யார் எய்த அம்பினால் பன்றி இருந்தது என்பதில் சிவபெருமானுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்தது. இறுதியில் இருவரும் வாள் சண்டையிட்டு முடிவை அறிந்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இருவரும் வாள் போரை தொடங்கினர், இருவரின் வீரமும் அளப்பரியதாக இருந்தது. ஆனால் எவ்வளவுதான் முயற்சித்தும் அர்ஜுனனால் சிவபெருமானை வீழ்த்த இயலவில்லை. இறுதியில் அர்ஜுனன் வீழ்த்தப்பட்டான். தன்னை வீழ்த்தியது யார் என்பதை உணர்ந்த அர்ஜுனன் சிவபெருமானின் கால்களில் வீழ்ந்தான். அர்ஜுனனை ஆசீர்வதித்த சிவன் அவனின் வீரத்தை பாராட்டி பாசுபத அஸ்திரத்திற்கான ஞானத்தை வழங்கினார். இந்த பாசுபத அஸ்திரத்தை கொண்டுதான் பின்னாளில் அர்ஜுனன் ஜயத்ரதனை வதைத்தான்.

MOST READ: சிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ..! சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Arjuna fought with Lord Shiva

Arjuna is the greatest warrior of Mahabharata. But when he fought with Lord Shiva, he lost the battle.
Desktop Bottom Promotion