For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு தெரியுமா? இந்த 12 விஷயங்கள் 2050ல் அழிந்துப் போகலாம்!

உங்களுக்கு தெரியுமா? இந்த 12 விஷயங்கள் 2050ல் அழிந்துப் போகலாம்!

|
Who Knows? These 12 Things May Go Useless in the Future!

Image Courtesy

ஒவ்வொரு ஆண்டும் ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது என புலம்பிக் கொண்டே இருக்கிறோம். ஒரே ஒரு நாள் மொபைல் மற்றும் இன்டர்நெட், கணினி இல்லாமல் கழித்து பாருங்களேன். 24 மணிநேரம் எவ்வளவு நீளமானது, அதில் நாம் எத்தனை நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமென உட்கார்ந்திருப்போம் என்பது தெரியவரும்.

வெறும் ஐந்தங்குல திரை நம்மளை அடிமையாக்கி, பொன் என்று பெருமைப்பட்ட நேரத்தை விரயம் ஆக்கிவருகிறது. ஒரு நாளில் நாம் செய்யும் வேலைகளை விட, நமக்காக ஒதுக்கும் நேரத்தை விட, அநாவசியமாக ஃபேஸ்புக் திரையை ஸ்க்ரால் செய்வதிலும், யார் என்ன ஸ்டேட்ஸ் வைத்திருக்கிறார் என படங்களை காண்பதிலும் தான் கழிக்கிறோம்.

இப்படியாக வேகமாக சழன்று கொண்டிருக்கிறது என நாம் கருதும் உலகில்... நாம் இன்று மிக சாதாரணமாக காணும் சில விஷயங்கள் 2050களில் இல்லாமலே போகும் நிலை வரலாம் என கூறப்படுகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லேட்!

சாக்லேட்!

ஆம்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைக்கும் சாக்லேட்கள் எதிர்காலத்தில் ஒரு நாள் இல்லாமல் போகலாம். சாக்லேட் தயாரிக்க தேவையான கொக்கோ உற்பத்தி இப்போது குறைந்து வருகிறது. இந்த உற்பத்தி குறைவு வரும் நாட்களில் மெல்ல, மெல்ல குறைந்து ஒரு நாளில் உண்மையான சாக்லேட் கிடைக்காமேலே போக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மாற்றாக ஏதேனும் உணவு இதே சுவையில் கண்டுபிடிக்கப்படலாமே தவிர, உண்மையான சாக்லேட் 2050-களில் கிடைப்பது அரிதான நிலையாக மாறலாம்.

தங்கம்!

தங்கம்!

தங்கத்தை பிடிக்காத நபர்கள் இருப்பார்களா என்ன? தங்கத்தின் மீது அலாதியான பிரியம் கொண்டிருக்கும் நபர்களுக்கு இதுவொரு கெட்ட செய்தியாக அமையலாம். ஏற்கனவே உலகில் இருந்த பெரும்பாலான தங்கத்தை வர்த்தகம் செய்கிறோம் என கூறி எடுத்துவிட்டனர். இதனால் பூமியில் இருந்து கிடைக்கும் தங்கத்தின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. மேலும், தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளும் குறைய துவங்கி வருகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். வரும் ஆண்டுகளில் இதன் வீழ்ச்சி 15 - 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாம்.

பணம்!

பணம்!

இனிமேல் கையில் தொட்டு, தடவிப் பார்ப்பதும், புது பணத் தாளை நுகர்ந்து மகிழ்வதும் அழிந்துப் போகலாம். ஏற்கனவே டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உபயோகம் அதிகரித்து வருகிறது. மேலும், பேட்டிக் கடைக்கு சென்றாலும் கூட கார்டு யூஸ் பண்ணுவீங்களா? பே டி.எம் இருக்கா? என்று ஆன்லைன் மணி டிரான்ஸ்வர் தான் நடந்துக் கொண்டு வருகிறது. ஆகையால், எதிர்காலத்தில் பணத்தை கையால் தொட்டு பார்க்கும் நிலை அழிந்து போகலாம்.

கையொப்பம்!

கையொப்பம்!

இன்று பலரது சாதாரண கையெழுத்து கூட ஏதோ ஆட்டோகிராப் போடுவது போல கிறுக்கலாக தான் இருக்கிறது. கையொப்பம் என்பது ஒரு அத்தாச்சியாக இருந்து வந்தது. ஆனால், இப்போது இதற்கு மாற்றாக பாஸ்வேர்ட், கைரேகை பதிவு, குரல் அங்கீகாரம் மூலம் லாக் செய்வது, ஃபேஸ் லாக் என பல வழிகள் வந்துவிட்டன. இதனால், கையொப்பம் இடுவது எல்லாம் மறைந்து போகலாம்.

ரிமோட் கண்ட்ரோல்!

ரிமோட் கண்ட்ரோல்!

மனிதர்களின் கண்டுபிடிப்பில் பெரிய இடத்தைப் பிடித்தது இந்த ரிமோட் கண்ட்ரோல். உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை செய்ய இது உதவியது. ஆனால், இனிமேல் இது இல்லாமலும் இனிமேல் இயக்கலாம். சென்சார் வளர்ச்சி காரணமாக உங்கள் குரலை வைத்து வாய்ஸ் மூலமாக டிவி, இதர எலக்ட்ரானிக் உபகரணங்களை இயக்கம் வசதிகள் வரும். கேட்டத்தட்ட இப்போது நாம் மொபைலில் குரல் மூலம் கால் செய்வது, செய்தி அனுப்புவது மற்றும் எழுதுவது போல வைத்துக் கொள்ளுங்களேன்.

ட்ராபிக் ஜாம்!

ட்ராபிக் ஜாம்!

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோபபிய நாடுகளில் ஆட்டோமேட்டிக் கார்கள் வருகை துவங்கிவிட்டது. இதன் மூலமாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்தை ஜி.பி.எஸ்-ல் பதிவு செய்துவிட்டால் கார் தானாக சென்றுவிடும். இந்த கார்கள் எங்க வேகமாக செல்ல வேண்டும், எப்போது வேகத்தை குறைக்க வேண்டும். ஒரு வாகனத்திற்கு பின் எவ்வளவு இடைவேளை விட வேண்டும் என அனைத்து பாதுகாப்பு மற்றும் சரியான விதிமுறைகளை பின்பற்றும் இதன் மூலமாக அதிக ட்ராபிக் ஏற்படாது. விபத்துக்களும் தடுக்கப்படும்.

மேலும், ஆகாயத்தில் பறக்கும் வசதி கொண்ட ஏர் கார்களின் வருகையும் இன்னும் 10 - 15 வருடங்களில் வந்துவிடும் என்பதால் சாலைகளில் டிராபிக் ஜாம் ஏற்படும் விகிதம் கணிசமாக குறையும்.

உணவாக பணியாளர்கள்!

உணவாக பணியாளர்கள்!

உணவு துறை என்று மட்டுமல்ல, அனைத்து உற்பத்தி துறைகளில் / தொழிற்சாலைகளில் மனிதர்களின் வெளிபாடு குறைய வாய்ப்புகள் உள்ளது. அதாவது வேலை இழப்பு உண்டாகும். ரோபோக்களின் வருகை மனிதர்களை ரீபிளேஸ் செய்யும். இதன் மூலமாக இனிமேல் நீங்கள் எதிர்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் வந்து டெலிவரி செய்யும். டிப்ஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

என்ன உணவில் கைப்பக்குவம் இருப்பதற்கு பதிலாக மெட்டல் பக்குவம் தான் இருக்கும்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள்!

அறுவை சிகிச்சை நிபுணர்கள்!

அடிமட்ட வேலை செய்வோர்கள் மட்டுமல்ல, நிபுணத்துவம் பெற்ற ஆறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்ற பெரிய வேலைகள் செய்வோரும் வேலை இழக்கும் நிலை உண்டாகும். அதற்கும் காரணம் ரோபோக்கள் தான். ரோபோடிக் தொழில்நுட்பம் சரியான நிலையில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் அனைவரும் பெட்டியைக் கட்டிக் கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டிய சூழல் உண்டாகும். முக்கியமான, சிக்கலான அறுவை சிகிச்சைகளை எல்லாம் ரோபோக்கள் பிசிறு தட்டாமல் செய்துவிடும் நிலை எதிர்காலத்தில் பிறக்கலாம்.

நீரிழிவு நோய்!

நீரிழிவு நோய்!

சர்க்கரையை குளோன் செய்யும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். இது நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் என அறியப்படுகிறது. இதனால், மக்கள் சர்க்கரை ஏற்படும் என்ற அச்சம் இல்லாமல் வாழலாம். உண்மையான சர்க்கரைக்கு பதிலாக செயற்கையான ஒன்று சந்தைக்கு வந்தும். ஆனால், அந்த செயற்கை உடலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பயன்பாட்டுக்கு வந்த பிறகு தான் ஆராயா முடியும்.

இரகசியங்கள்!

இரகசியங்கள்!

ஏற்கனவே நீங்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நபராக இருந்தால், கூகுள் நீங்கள் எந்த நாளில், எங்கே எல்லாம் சென்றீர்கள், எந்த வழித்தடத்தில் சென்றீர்கள் என அனைத்தையும் பதிவு செய்து வருகிறது. போதாகுறைக்கு நாமும் செல்லும் இடத்தில் எல்லாம் பெருமையாக செக்-இன் செய்துவிடுகிறோம். இது எதிர்காலத்தில் இன்னும் பெருகும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என எல்லாமும் ரெகார்ட் செய்யப்படும். நீங்கள் கிட்டத்தட்ட உலகம் எனும் பெரியளவிலான சிறையில் அடைப்படுவீர்கள்.

பூட்டு சாவி!

பூட்டு சாவி!

வரும் இருபது ஆண்டுகளில் பூட்டுகளும், சாவிகளும் மறைந்து போகலாம். அதாவது பயன்பாட்டில் மிகவும் குறைந்து போகலாம். இதற்கு மாற்றாக புஷ் பட்டன்கள், பயோமெட்ரிக் லாக், ஃபிங்கர்பிரின்ட் லாக். ஐரிஸ் லாக், பாஸ்வேர்ட் லாக்குகள் அதிகமாக பயன்பாட்டுக்கு வரலாம்.

சார்ஜர்!

சார்ஜர்!

ஏற்கனவே சாம்சங், ஐ-போன் மற்றும் இதர சில உயர்ரக மொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் சமீபத்திய மற்றும் இனி வெளிவரவிருக்கும் மாடல்களில் ஒயர்லஸ் சார்ஜர் அறிமுகம் செய்யவிருப்பதை கூறிவிட்டனர். இது எதிர்காலத்தில் முற்றிலும் மாறும். ப்ளூடூத் சார்ஜிங் மற்றும் ஒயர்லஸ் சார்ஜிங் முறைகள் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who Knows? These 12 Things May Go Useless in the Future!

Who Knows? These 12 Things May Go Useless in the Future!
Story first published: Tuesday, January 16, 2018, 10:29 [IST]
Desktop Bottom Promotion