Latest Updates
-
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
துர்க்கையை எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்க வேண்டும்?
நவராத்திரிக்கு துர்க்கையை வணங்கும்போது எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்க வேண்டும் என கீழே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
துர்கா தேவி சக்தியின் வடிவம். தன்னை மனப்பூர்வமாக வணங்கும் பக்தர்ககளை பாதுகாத்து வழிநடத்தும் தெய்வமாக விளங்குபவள் துர்கை அம்மன். பக்தர்களின் மனதில் உள்ள மாயையை விலக்கி அறிவு மற்றும் ஞானம் என்னும் வெளிச்சத்தை தந்து அவர்களை உயர்த்துபவள் தான் துர்கை தேவி.
அசுரர்களை அழிக்க பார்வதி தேவியில் இருந்து பிறந்தவள் துர்கை என்று நம்பப்படுகிறது. சிவபெருமான் மகிஷாசுரனை அழிக்க துர்கை தேவியை அழைத்தபோது அவளது மற்ற ஒன்பது வடிவங்கள் உதவியதாக கூறப்படுகிறது. இந்த வடிவங்களை நவ துர்கை என்றும் கூறி வணங்கி வருவது நமது வழக்கம்.

துர்கா தேவியை வழிபட சரியான தருணம் நவராத்திரி. குறிப்பாக ஒன்பது வடிவ துர்கையையும் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் ஒவ்வொருவரின் ராசிகேற்பவும் இந்த தேவியரை வழிபடலாம். ஒவ்வொரு ராசியினரும் வணங்க வேண்டிய துர்கை வடிவங்களைப் பற்றி இந்த பதிவில் தொடர்ந்து காணலாம்.

மேஷம்
மேஷ ராசியினர் சைலபுத்ரி வடிவ துர்கையை வணங்கலாம். நவராத்திரியின் முதல் நாளில் இந்த தேவியை வணங்குவது சிறப்பு வாய்ந்ததாகும். சப்தசதி பதம் அல்லது துர்கா சாலிசா போன்றவற்றை மேஷ ராசியினர் ஜெபிக்கலாம்.

ரிஷபம்
துர்கையின் மகாகெளரி வடிவத்தை ரிஷப ராசியினர் வணங்கலாம். லலிதா என்று அழைக்கப்படுவதும் துர்கா தேவி என்பதால் லலிதா சஹஸ்ரநாமம் உச்சரிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். துர்கையின் பரிபூரண ஆசிர்வாதமும் கிடைக்கும். மன அமைதியை தந்து தன் பக்தர்களுக்கு ஆசி வழங்குபவள் துர்கா தேவி. திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல கணவனைத் தருபவளும் இவளே.

மிதுனம்:
மிதுன ராசியினர் பிரம்மச்சாரிணி வடிவ துர்கையை வணங்குவது நல்ல பலனைத் தரும். கல்வி தொடர்பான எல்லாவித பிரச்சனைகளும் விலகும். மிதுன ராசி பக்தர்கள் தாரா கவசம் உச்சரித்து வழிபடலாம்.

கடகம் :
கடக ராசியினர் சைலபுத்ரி வடிவ துர்கையை வணங்க வேண்டும். லக்ஷ்மி சஹஸ்ரநாமம் ஜெபிப்பதால் தேவியின் ஆசிகள் கிடைக்கும். பல வளங்கள் தந்து ஆசிர்வாதம் வழங்குவதுடன் பயத்தையும் போக்குவாள் துர்கா தேவி.

சிம்மம் :
கூஷ்மாண்டா வடிவ துர்கையை சிம்ம ராசியினர் வழிபடலாம். இவளின் மந்திரங்களை தினமும் 505 முறை ஜெபிப்பதால் பக்தர்களுக்கு பல வளங்களை வாரி வழங்குகிறாள் அன்னை கூஷ்மாண்டா . மேலும் எல்லா வித வெற்றிகளும் பெற இந்த அன்னையை வழிபடலாம்.

கன்னி :
பிரம்மச்சாரிணி தேவியை வணங்குவதால் கன்னி ராசியினர் மிகுந்த ஆசிர்வாதம் அடைகின்றனர். சரஸ்வதி தேவியைப் போல் பக்தர்களுக்கு அளவு கடந்த ஞானத்தை வழங்கி ஆசிகள் வழங்குகிறாள் அன்னை பிரம்மச்சாரிணி. கன்னி ராசியினர் லக்ஷ்மி மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்கலாம்.

துலாம்:
துலாம் ராசியினர் மகாகௌரியை வழிபடலாம். பெண்களின் விருப்பத்திற்கேற்ற கணவனைத் தந்து ஆனந்தமயமான திருமண வாழ்க்கையைத் தந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குபவள் அன்னை மஹா கெளரி. துர்கா சப்தசதியின் முதல் ஸ்தோத்திரத்தை இந்த ராசியினர் ஜெபிக்கலாம். காளி சாலிசா அல்லது மகாகாளி ஸ்தோத்திரம் ஜெபிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம் :
விருச்சிக ராசியினர் ஸ்கந்த மாதா வடிவ துர்கையை வணங்கி வழிபடலாம். பொதுவாக இந்த அன்னையை குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் துதிப்பார்கள். ஆனால் இந்த தேவியை வழிபடுவதால் உங்கள் இதர விருப்பங்களும் நிறைவேறும். துர்கா சப்தசதியை ஜெபிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு :
துர்கையின் சந்திர காந்தா வடிவத்தை தனுசு ராசியினர் வழிபடலாம். துர்கா தேவி மந்திரங்களை ஜெபமாலையாக ஜெபிக்கலாம். மன அமைதிக்கும் எதிர்மறை ஆற்றலை விலக்கவும் தேவி சந்திர காந்தாவை வழிபடலாம்.

மகரம் :
மகர ராசியினர் காளராத்திரி தேவியை வழிபடலாம். அவளது பக்தர்களின் வாழ்வில் வரும் எல்லா வித துயரங்களையும் பயத்தையும் இவள் போக்குகிறாள். துஷ்ட ஆவியின் பாதிப்பு மற்றும் எதிர்மறை ஆற்றல் மற்றும் கண் தொடர்பான கோளாறுகள் ஆகியவற்றை இந்த தேவியை வழிபடுவதால் நீக்கி விடலாம்.

கும்பம்
கும்ப ராசியினர் காளராத்திரி தேவியை வழிபடலாம். துர்கா தேவி கவசம் ( துர்கா சப்தபதியின் ஒரு பகுதி ) மற்றும் துர்கா மந்திரங்களை இவர்கள் ஜெபிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

மீனம்:
துர்கையின் சந்திர காந்தா வடிவத்தை மீன ராசியினர் வழிபடலாம். இந்த தேவியை வழிபடுவதால் வாழ்க்கையில் இவர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் அகற்றி இவர்கள் கனவு நிஜமாக்குபவள் அன்னை சந்திர காந்தா . பகளமுகி மத்திரத்தை மீன ராயினர் ஜெபிக்கலாம்.



Click it and Unblock the Notifications











