For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  திருட்டுத்தனம் பண்ணி வசமா கேமராவுல மாட்டிக்கிட்டவங்க - புகைப்படத் தொகுப்பு!

  By Staff
  |

  சில சமயம் நாம யாருக்குமே தெரியாதுன்னு நெனச்சு ஒரு விஷயம் பண்ணுவோம். ஆனா, பிக்பாஸ் வீட்டு கேமராவவிட அதிகமான கண்கள் நம்மள நோட்டம் விட்டுக்கிட்டு இருப்பாங்க.

  அப்படி யாருக்குமே தெரியாதுன்னு நெனச்சு சிலர் செஞ்ச ஏடாகூடமான விஷயங்கள் வசமா கேமரா கண்ணுல மாட்டி வேற லெவல்ல வைரல் ஆன போட்டோஸ் தான் நாம இந்த தொகுப்புல பார்க்க போறோம்.

  When You’re Caught Red-Handed

  இதுல மனுஷங்க மட்டுமில்ல, மிருகங்களும் வசமா மாட்டியிருக்கு....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  யார் பண்ணாலும் தப்பு தப்பு தான்ம்ல... ஏதோ வாய் பேச தெரியாதவனாச்சேன்னு செல்லம் கொடுத்து வளர்த்தா... இப்படியா நட்டநடு ரூம்ல உட்கார்ந்து பிட்டு படம் பார்ப்ப... போட்டோஷாப் பண்ண போட்டோவா இருந்தாலும்.. கொஞ்சம் நக்கலா தான் இருக்கு...

  #2

  #2

  நைட்டு நேரம் எல்லாரும் தூங்குனதுக்கு அப்பறம் திருட்டு வேலையில இருங்கியிருக்காரு நம்ம கிரிமினல். ஆனா, திருட வந்த பொருள் அவரோட உசரத்துக்கு எட்டாம போனதால, பவுல் எல்லாம் இழுத்து கீழ போட்டு மாட்டிக்கிட்டாப்புல...

  MOST READ: மஞ்சளை வைத்தே நம் பற்களை எப்படி வெள்ளையாக்குவது வாங்க பார்க்கலாம்

  #3

  #3

  அச்சச்சோ! இதெல்லாம் படம் புடிக்கலாமா... சரி! முதல்ல இதெல்லாம் வகுப்புல உட்கார்ந்து பண்ற வேலையா... இதுக்கு தான் சொல்றது இட்ச் கார்டு யூஸ் பண்ணுங்க... இப்ப மக்கள் தப்பா நினைக்கிறாங்களா இல்லையா... என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா...

  #4

  #4

  அடேய்! என்னடா பாக்குற... அந்த பொண்ணோட பாய் பிரெண்ட் பக்கத்துல இருக்கும் போதே இப்படி பண்றியே இதெல்லாம் தகுமா... இதுக்கு தான் கண்ட பார்ட்டிக்கு கண்ட நேரத்துல போகக் கூடாது. கூட இருக்கவனே ஏடாகூடமா ஏதாவது பண்ணிடுவான்.

  #5

  #5

  திருட்டு பயலே! எவ்வளோ பெரிய மனுஷன் ஆஞ்சு ஓஞ்சு பார்க் பெஞ்சுல வந்து உட்கார்ந்துட்டு இருக்காரு. நீ சங்கடமே இல்லாம அவரோட பாக்கெட்டுல தலையவிட்டு ஏதாவது கிடைக்குமான்னு நோட்டம் விட்டுக்கிட்டு இருக்க. அங்க என்ன கொய்யா பழமா கிடைக்கும்....

  #6

  #6

  சோ டாஞ்சுரஸ் பாட்டி! பாட்டி முன்னாள் தில்லாலங்கடியா இருந்திருக்கும் போல. யப்பா சாமி கிலோ கணக்குல கொள்ளையடிச்சு வெச்சிருக்கு. உடம்பு முழுக்க மூளைன்னு சொல்லுவாங்களே அது இதுதான் போல. என்ன பிரயோசனம் வசமா மாட்டிக்கிட்டியே...

  MOST READ: மருத்துவமனைகள் உங்களிடம் சொல்லாமல் மறைக்கும் அந்த 10 கருப்பு ரகசியங்கள் இதோ...!

  #7

  #7

  நான் தான் எனக்கு படிப்பு வரலன்னு சொல்றேன் திரும்ப, திரும்ப எல்.கே.ஜி போக சொன்னா எப்படி. 12 வருஷம் கஷ்டப்பட்டு பின்ன நாலு வருஷம் என்ஜினியரிங் படிச்சு.. லோலோன்னு வேலை கிடக்காம அல்லோல் படுறதுக்கு... நான் இப்பவே வேலைக்கு போறேன் என்ன விடுங்க...

  #8

  #8

  இந்த கூகிள் மேப், ஸ்ட்ரீட் வந்தாலும் வந்துச்சு.. சில பேரோட வாழ்க்கை நாசமா போச்சு. நீங்க வேணும்னா சும்மா கூகிள்ல இந்த தலைப்புல தேடி பாருங்களேன். பலரோட மானம், மரியாதையை போயிருக்கும். இந்த பய என்ன பாவம் பண்ணானோ... சிக்க கூடாதது எல்லாம் சிக்கியிருக்கு. நல்லவேளையா முகம் தெரியல.

  #9

  #9

  யாரா இருக்கும்.... பாடி கெட்டப் எல்லாம் பார்த்தா ஆம்பள மாதிரி தான் இருக்கு. ஆனால், உள்ளார போட்டிருக்க உள்ளாடை லேடீஸ் விஷயமால இருக்கு... என்னப்பா சரக்கு அடிக்கிறதுக்கு முன்னவே செம போதையில இருந்திருப்பாரு போல. இதுல அடுத்த ரவுண்டு வேற.

  #10

  #10

  பொதுவாவே, நிறைய பேரோட போட்டோ திருட்டு போகும். உதாரணமா சொல்லனும்னா மயக்கம் என்ன படத்துல தனுஷ் போட்டோ திருட்டு போறது போல. ஆனால், இந்த போட்டோகிராபர் கேமரா பையில கை விட்டு திருடுறது எல்லாம் நியாயமா சாரே!

  MOST READ: சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கேலியான இந்திய திருமண புகைப்படங்களின் தொகுப்பு!

  #11

  #11

  இதே எங்க ஊரா இருந்தா... போலீஸ் காரரும் சேர்ந்து நின்னு உச்சா போயிருப்பாரு. சும்மா சுதந்திரம் இல்லன்னு போராட வேண்டியது. இப்படி போலீஸ் தொல்லை இல்லாம நம்ம ஊர்ல மட்டும் தான் சுதந்திரமா உச்சா போக முடியும். இதோ அவங்க ஊருல அதுக்கு கூட வசதி இல்ல, உரிமை இல்ல.

  #12

  #12

  ப்ளே ஸ்கூல் போற வயசுல ப்ளே பாய் மேகஸின். உன்ன சொல்லி தப்பில்ல தம்பி. வூட்டுல இருக்க பெரியவங்கள சொல்லனும். இப்படியா சிரிசுங்க கையில கிடைக்கிற மாதிரி இந்த மாதிரியான புத்தகம் எல்லாம் போட்டு வைக்கிறது. இல்ல இதுவும் உங்க ஊரு கலாச்சாரமான்னு தெரியலையே...

  #13

  #13

  நிஜமாவே, இந்த பூனை, நாய், ஆடு, மாடுங்க எல்லாம் ரொம்ப பாவம்ங்க. அதுங்க ஜாலியா ஏதாவது பண்ண விட்டுரான்களா... போய் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல ஒட்டு அவங்க மானத்த வாங்கிறாங்க. அவங்களுக்கு ஒரு ப்ரைவசி இல்லாம போச்சு. இதுக்கெல்லாம் இந்த மனுஷ பயலுக தான் காரணம்.

  #14

  #14

  மாட்டிக்கிட்டான், மாட்டிக்கிட்டான் காட்டெரும மாட்டிக்கிட்டானு நம்ம மணி அண்ணன் காமெடியா ஒரு ராகம் பாடுவாப்புல. அது இவங்களுக்கு நல்லாவே பொருந்தும். உலகம் முழுக்க உங்க ரெண்டு பேர பார்த்து சிரிக்கிதே... இது உங்க வூட்டாளுங்களுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க...

  MOST READ: சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  When You’re Caught Red-Handed

  The worst thing for someone doing something wrong? When they are caught red-handed. Check out this hilarious list of caught red-handed images.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more