For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கற்பழிக்க முயன்ற ஆண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற பெண்... - (வீடியோ)

  By Staff
  |

  கற்பழிப்பு இந்தியாவில் அன்றாடம் நாம் நாளிதழ்களில் படிக்கும், செய்தி சேனல்களில் காணும் விஷயமாக மாறிவிட்டது. சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் இந்திய தலைநகரான டெல்லியில் மட்டுமே தினமும் ஐந்த பெண்கள் வீதம் கற்பழிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

  சிறிய குழந்தையில் இருந்து, வேலை சென்று திரும்பும் மகளிர், வயதான பாட்டி முதல் வயது வித்தியாசம் இன்றி இந்தியாவில் இந்த கொடூரம் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் ஒரு பாடம் புகட்டும் விதமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் ஒருசில வாரங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

  17 வயது பெண்ணை கற்பழித்த இரண்டு ஆண்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் கைகளை பின்னாடி கட்டி சாலையில் நடத்தி அழைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  வைரல்!

  வைரல்!

  இந்த பரபரப்பு சம்பவத்தை அருணாச்சல பிரதேசத்தின் யிங்கியோங் நகரின் சாலையில் இருந்த உள்ளூர் மக்கள் பலர் தங்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் படம் பிடித்து சமூக தளங்களில் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.

  இளம்பெண்ணை கற்பழித்ததாக கூறப்படும் அந்த இரண்டு இளைஞர்களை மக்கள் அடித்து இழுத்து வரும் காட்சிகள் அந்த காணொளிப்பதிவில் பதிவாகியுள்ளது.

  Image Source: CEN

  காவல் நிலையம்!

  காவல் நிலையம்!

  நிர்வாணமாக கைகளை கட்டி இழுத்து வரப்பட்ட அந்த இரண்டு காமுகன்களை லோக்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் பொது மக்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜான் நெயஹ்லியா கூறியுள்ளார்.

  பாதிக்கப்பட்ட அந்த கற்பழித்ததாக கூறப்பட்டு இழுத்துவரப்பட்ட இருவரில் ஒருவருடன் தான் வெளியே வந்துள்ளார். அந்த ஒருவன் சமீப காலமாக பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமூக தளம் மூலமாக நட்பாக பழகி வந்துள்ளான்.

  ஆன்லைனில் பழகிய நபரை நண்பன் என்று நம்பி சென்ற அந்த பெண்ணை, அந்த ஆணும், அவரது வேறு மூன்று நண்பர்களும் சேர்ந்து கற்பழித்துள்ளனர்.

  இந்த கற்பழிப்பு வழக்கில் சிக்கிய நால்வருமே இருபது வயது நிரம்பிய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Image Source: CEN

  உறவினர்கள்!

  உறவினர்கள்!

  இந்த சம்பவம் அறிந்தவுடன் அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த பெண்ணின் உறவினர்கள் தான் கற்பழித்த நால்வரில் இருவரை கையும், களவுமாக பிடித்து இழுத்து வந்துள்ளனர்.

  கற்பழிக்கப்பட்ட அந்த பெண் சம்பவத்தின் பிறகு மறுநாள் அதிகாலை இரண்டு மணியளவில் தான் தனது வீட்டை அடைந்தார் என்றும் அறியப்படுகிறது.

  Image Source: CEN

  தேடுதல்!

  பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், மீதி இருவரை தேடி வருவதால் போலீஸார் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தங்கள் வீட்டு பெண் இது போன்ற குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டால் மூடி, மறைக்க நினைக்கும் உறவினர்கள் மத்தியில் தவறு செய்தவனை தேடி பிடித்து அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இவர்கள் ஒரு முன்னுதாரணமாக மாறி இருக்கின்றன.

  மாற்றம்!

  மாற்றம்!

  நாம் யார் ஒருவரும் எந்த ஒரு கொலை குற்றங்களையும் மறைப்பது இல்லை. நம் வீட்டில் பொருட்கள் கொள்ளை போனாலே உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறோம். ஆனால், நம் நாட்டின் கண்கள் என்று புகழப்படும் பெண்களுக்கு ஒரு கொடுமை நேர்ந்தால் மட்டும் அதை மூடி மறைக்க முற்படுவது ஒரு கொடுமையான செயல்.

  கற்பழிப்பு குற்றங்களில் மட்டுமே தவறு செய்தவன் சுதந்திரமாகவும், பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டுக்குள் சிறைப்பட்டும் போய்விடுகிறார்கள். இதற்கு சமூகமும் ஒரு காரணம். கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு மன தைரியம் அளிப்பதற்கு பதிலாக, நமது சமூகம் அவர்களை ஒதுக்க துவங்குகிறது.

  பாதிக்கப்பட்ட குடும்பத்தாரும், இதுகுறித்து பிறர் அறிந்தால் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும். அதற்கு இந்த நிகழ்வு ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் என்று நம்புவோம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Two men who have been accused of raping a 17-year-old girl have been stripped naked!

  Two men who have been accused of raping a 17-year-old girl have been stripped naked and paraded through the street with their hands tied behind their backs.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more