For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும் சர்ச்சைக்குள்ளான மற்றும் தடை செய்யப்பட்ட இந்திய விளம்பரங்கள்!

பெரும் சர்ச்சைக்குள்ளான மற்றும் தடை செய்யப்பட்ட இந்திய விளம்பரங்கள்!

By Staff
|

ஒரு பொருள் அல்லது பிராண்டை பெரித்துப்படத்த, லாபகரமாக்க அதிக பயனாளிகளை ஈர்க்க உதவும் ஒரு கருவி தான் விளம்பரம். ஆரம்பக் காலத்தில் வெறும் படங்களாக இருந்து பிறகு காட்சிகளாக மாறிய விளம்பரம். கொஞ்ச காலத்தில் புதிய புதிய யுக்திகள் மற்றும் கிரியேட்டிவ் ஐடியாக்களுடன் உருமாறின. இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

ஆனால், அதே சமயத்தில் மறுபுறம் கவர்ச்சிகரமான விளம்பரங்களும் அதிகரிக்க துவங்கின காண்டம் விளம்பரங்களில் இருந்து டியோடிரென்ட், சோப்பு, காபி, தண்ணீர் என எது, எதற்கு எல்லாம் கவர்ச்சி சேர்க்க வேண்டும் என்ற எல்லையே இல்லாமல் போனது.

இப்படி வெளியான சில விளம்பரங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி, இந்தியாவில் ஒளிப்பரப்ப தடையும் செய்யப்பட்டன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேன்ஃபோர்ஸ் காண்டம்!

மேன்ஃபோர்ஸ் காண்டம்!

இந்த கவர்ச்சிகரமான காண்டம் விளம்பரத்தில் சன்னி லியோனி நடித்திருந்தார். இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டிருந்து வார்த்தைகள் மற்றும் காட்சிகள் மிக கவர்ச்சிகரமானதாக அமைந்திருந்தது. இதை எதிர்த்து இந்தியாவின் பல அரசியல்வாதிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தினார்கள். இந்த விளம்பரம் கற்பழிப்பு சம்பவங்களை அதிகரிக்கும் என்றும் கண்டனம் தெரிவித்தனர்.

டியூரெக்ஸ் காண்டம்!

டியூரெக்ஸ் காண்டம்!

இந்த டியூரெக்ஸ் காண்டம் விளம்பரத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஒரு மாடல் அழகியுடன் மிகவும் போல்டான காட்சிகளில் நடித்திருந்தார். இந்த விளம்பரத்தில் வக்கிரம் தலைத்தூக்கி காணப்பட்டதால் தொலைகாட்சிகள், திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் இதை ஒளிபரப்ப தடை செய்யப்பட்டது.

கலிடா உள்ளாடை!

கலிடா உள்ளாடை!

இந்த உள்ளாடை விளம்பரத்தில் டினோ மோரே, பிபாஷா பாசுவின் உள்ளாடையை தனது பற்களால் இழுப்பது போன்ற காட்சிகள் அமைந்திருந்தன. பல பெண்கள் அமைப்புகள் இந்த விளம்பரத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார்கள். பிறகு, இந்த விளம்பரம் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என தடை செய்தனர்.

டஃப் ஷூ

டஃப் ஷூ

மிலிந்த் சோமன் மற்றும் மது சாப்ரே டஃப் ஷூ என்ற விளம்பரத்தில் நடித்திருந்தனர். அந்த விளம்பரத்தின் போது அவர்கள் வேறு எதுவும் அங்கத்தில் அணிந்திருக்க வில்லை. இருவரும் ஒரு பைதான் பாம்பு ஏந்தி நின்றுக் கொண்டிருப்பது போல விளம்பரம் அமைந்திருந்தது. பைதான் பாம்பினை தவறாக பயன்படுத்திய காரணத்திற்காக வன வாழ்க்கை சட்டத்தின் பிரிவில் கீழ் இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டது.

மிஸ்டர் இன்ஸ்டன்ட் காபி

மிஸ்டர் இன்ஸ்டன்ட் காபி

இந்த விளம்பரத்தில் மல்லிகா மற்றும் அர்பாஸ் நடித்திருந்தனர். காமசூத்ரா சார்ந்து இந்த விளம்பரம் அமைந்திருந்தது. இந்த விளம்பரத்தின் டேக்லைன் உண்மையான இன்பம் இன்ஸ்டண்டாக கிடைப்பதில்லை என்று எழுதியிருந்தனர். இது தவறான அர்த்தம் கொண்டிருப்பதால், இந்த விளம்பரத்தை தடை செய்தனர்.

அமுல் மாச்சோ

அமுல் மாச்சோ

இந்த விளம்பரத்தில் துணி துவைக்கும் பெண் ஒருவர் அவரது கணவரின் உள்ளாடை துவைக்கும் போது வேறு விதமான எண்ணங்கள் கொள்வது போல உருவாக்கப்பட்டிருந்தது. இது வக்கிரமான முறையில் அமைந்திருந்ததால் இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டது.

காமசூத்ரா காண்டம்!

காமசூத்ரா காண்டம்!

பூஜா பட் மற்றும் மார்க் ராபின்சன் நடித்திருந்த இந்த காண்டம் விளம்பரம் மிகவும் சென்சேஷனலானது. ஓர் அருவியில் உடலுறவில் ஈடுபடுவது போல இந்த விளம்பரம் அமைந்திருந்தது. முதலில் இந்த விளம்பரம் தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை செய்யப்பட்டது. பிறகு எந்த இடத்திலும் பொதுவெளியில் ஒளிப்பரப்ப கூடாது என இதை தடை செய்தனர்.

பிஸ்லேரி!

பிஸ்லேரி!

இந்த விளம்பரத்தில் கடற்கரையில் ஒரு குடிசைக்கு வெளியே தம்பதிகள் பிஸ்லேரி நீர் குடிப்பது போல அமைந்திருந்தது. அவர்கள் பிகினி உடையில் தோன்றி இருந்தனர். இந்த விளம்பரம் மூலமாக பாதுகாப்பான வாழ்க்கை, பாதுகாப்பான செக்ஸ் என்ற செய்தி கொண்டிருந்தது. இதனால் இந்த விளம்பரத்தை தடை செய்தனர்.

செட் வெட்!

செட் வெட்!

இந்த விளம்பரத்தில் பெண் ஒருவர் இந்த டியோடிரன்டை ஓர் ஆண் பயன்படுத்தியவுடன் அவர் மீது ஈர்ப்பு கொள்வது போல அமைந்திருந்தது. இது இந்திய விளம்பர அமைப்பின் கோட்பாடுகளுக்கு எதிராக இருந்த காரணத்தால் மக்கள் முன்னிலையில் ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டது.

லக்ஸ் கோஷி

லக்ஸ் கோஷி

இந்த விளம்பரத்தில் நாய் ஒன்று நீச்சல் குளத்தின் அருகே இருந்த ஆணின் டவலை இழுத்துக் கொண்டு தரமறுப்பது போவும், ஆணின் பின்னாடி இருந்து வரும் பெண் ஒருவர், அந்த ஆணி கன்னத்தில் முத்தமிட்டு நாயை எடுத்து கொண்டு, டவலை திருப்பி கொடுத்து செல்வார். பின்னே சென்றவுடன் அந்த பெண் உற்சாகம் அடைவது போலவும் காட்சி படுத்தி இருந்தனர். இதனால் இந்த விளம்பரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

சஹாரா கியூ ஷாப்!

சஹாரா கியூ ஷாப்!

சச்சின் இறுதி சடங்கு செய்வது போலவும், யுவராஜ் குழி தோண்டுவது போலவும். அருகே கோலி, தோணி சேவாக் போன்றவர்கள் அதற்கு உதவுவது போலவும் இந்த விளம்பரம் அமைந்திருந்தது. இந்த விளம்பரத்தில் கியூ ஷாப்பில் பொருட்கள் வாங்கவில்லை எனில் முன்கூட்டியே இறந்துவிடுவார்கள் என்பது போன்ற கருத்து பகிரப்பட்டிருன்தது.

ஃபாஸ்ட் டிராக் வாட்ச்!

ஃபாஸ்ட் டிராக் வாட்ச்!

இந்த விளம்பரத்தில் விராத் கோலி பைலட்டாகவும், ஜெனிலியா ஏர் ஹோஸ்டஸாகவும் நடித்திருந்தனர். விமானம் பறந்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காக்பிட்டில் இருந்து வெளியே வருவது போல காட்சிகள் இருந்தன. பல விமான நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டது.

மோட்டோரோலா!

மோட்டோரோலா!

மோட்டோரோலா சி 550 என்ற மொபைல் விளம்பரத்தில் அந்த போன் கொண்டு சர்ச்சையான படங்கள் எடுப்பது போல காட்சி அமைந்திருந்தது இந்த காரணத்தால் இவ்விளம்பரத்தை இந்தியாவில் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.

வைல்டு ஸ்டோன் டியோடிரன்ட்!

வைல்டு ஸ்டோன் டியோடிரன்ட்!

இந்த விளம்பரத்தில் துர்கா பூஜை செய்து வந்த பெண் ஒருவர் இந்த டியோடிரென்ட் பயன்படுத்தி வந்த ஆணை கண்டதும் பூஜையை மறந்து அவர் மீது ஈர்ப்பு கொள்வது போல காட்சிகள் அமைந்திருந்தது. இது பெங்காலி கலாச்சாரத்தை புண்படுத்துவது போல இருந்ததால் தடை செய்யப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Most Controversial and Banned Ads Advertisements in India!

The Most Controversial and Banned Ads Advertisements in India!
Desktop Bottom Promotion