For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலி பிள்ளையாருக்கு வாகனமாக மாறிய சுவாரஸ்ய கதை உங்களுக்குத் தெரியுமா?

இங்கே உங்களுக்கு ஒரு கதை சொல்கிறோம். அது என்ன தெரியுமா? விநாயகரைப் பற்றியும் அவருடைய எலி வாகனத்தைப் பற்றியும் தான்.

|

இறைவன் கணபதி, முழுமையின் ஒரு வடிவமாக உள்ளார் .அவர் தனது பக்தர்களின் இடர் / வினைகளை நீக்குவது மட்டுமல்லாமல் சரியான வழிகாட்டியாகவும் விளங்குகிறார் . லக்ஷ்மி தேவி, தன் உடலில் பூசிய சந்தனப் பொடியில் இருந்து தோன்றியவர் அவர் என்று நமக்குத் தெரியும்.

Incredible things about Lord Ganesha

அவர் சிவபெருமானின் மகன் என்பதையும் நாம் அறிவோம். இங்கே விநாயகர் பற்றி உங்களுக்கு தெரியாத மேலும் சில சில சுவாரஸ்யமான உண்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதை அறிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரிபூரணத்தின் பரிபூரணம்

பரிபூரணத்தின் பரிபூரணம்

ஒரு சமயம் பார்வதி தேவி குளிக்கும்போது கணேசன் அவருக்கு காவலிருந்தார் . சிவபெருமான் வந்து தனது வீட்டிற்குள் செல்ல விரும்பியபோது, ​​விநாயகர் அவரை அறியவில்லை, எனவே அவரை தன் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. சிவன், இந்த புதிய பையன் யார் என்று தெரியாத கோபத்துடன், விநாயகர் தலையை வெட்டினார்.

சிவன் தனது தவறை உணர்ந்தபோது, ​​யானையின் தலையை கணபதிக்கு அளித்து , அந்த சிறுவனை மீண்டும் உயிருடன் கொண்டுவந்தார்.

அப்போது, ​​யானைத் தலை கொண்ட ஒரு மனித உடலின் அமைப்பைக் காணும்போது எதோ ஒரு முழுமையற்ற அமைப்பாகத் தோன்றியது. எனினும், இந்த தெய்வம், கணேஷனுக்கு , மேலும் அவரது தந்தை சிவபெருமான் "இந்த பரிபூரணமற்ற உருவத்தை வழிபடும் பக்தர்களின் அனைத்து தடைகளையும் அகற்றி அவர்களுக்கு பரிபூரணத்தை அளிப்பார்" என்ற ஒரு வரம் அளித்தார். எனவே, அவர் பரிபூரணத்தின் பரிபூரண உருவமாகவும் அறியப்படுகிறார்.

மகாபாரதம்

மகாபாரதம்

மகாபாரதத்தை உண்மையில் விநாயகர் எழுதியதாக நம்பப்படுகிறது. மகாபாரதத்தை இயற்றிய ஆசிரியர் வேதவியாஸர் , ​​அதை எழுதியவர் கணேஷ் என்று கூறுகிறார். இதை எழுதும்போது விநாயகர் மற்றும் வேதவியாஸருக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அது , வியாசர் தடையின்றி ஆரம்பம் முதல் முடிவு வரை தடையின்றி நிறுத்தாமல் ஓத ஓத விநாயகப்பெருமான் அனைத்தையும் புரிந்து மகாபாரதம் எனும் மாபெரும் காவியத்தை எழுதி முடிக்கவேண்டும் என்பதேயாகும்.

இந்தோனேஷியா நாணயக் குறிப்புகளில்

இந்தோனேஷியா நாணயக் குறிப்புகளில்

Image Courtesy

இந்தோனேசியாவின் 20,000 ருபியா தாள்களில் கணேசாவின் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் இந்துக்கள் உள்ளனர்.

பௌத்தத்திலும்

பௌத்தத்திலும்

புத்த மதத்திலுள்ள மஹாயான பிரிவில் ஒரு தெய்வமாக விநாயகர் கருதப்படும் பெருமையும் கொண்டவர். அவர் அங்கு நடனமாடும் தெய்வமாகக் காணப்படுகிறார்.

கணபதி குடும்பம்:

கணபதி குடும்பம்:

விநாயகருக்கு ரித்தி மற்றும் சித்தி என்று இரண்டு மனைவிகள் உள்ளதாக நம்பப்படுகிறது. ரித்தி என்பது செழிப்பு, சித்தி என்பது வெற்றி. சுப் மற்றும் லப் என்று அவருக்கு இரண்டு மகன்களும் உண்டு. மங்களம் என்று பொருள்படும் "சுப்" ரித்தி மற்றும் கணபதியின் மகன் என்று நம்பப்படுகிறார், அதே நேரத்தில் லப் சித்தியின் மற்றும் கணேஷனின் மகனாகவும் நம்பப்படுகிறார்.

அதனால்தான், அவர் செழிப்பு, வெற்றி, நற்செய்தி மற்றும் அனைவருக்கும் இலாபம் என்ற அனைத்தையும் ஒருசேர வழங்குபவர் என்று கூறப்படுகிறது. எனவேதான், ஒவ்வொரு பணி மற்றும் நிகழ்வின் ஆரம்பத்தில் நாம் விநாயகரை வழிபட்டு வேண்டி அழைக்கிறோம்.

கணபதியின் உடைந்த தந்தம்

கணபதியின் உடைந்த தந்தம்

விநாயகர் ஒரு யானைத் தலையைக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவருடைய ஒரு தந்தமும் உடைந்துவிட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏப்படி, படியுங்கள்,

ஒருமுறை கணேசன் ஒரு காவலாளியாக கயிலாயத்தில் நின்று கொண்டிருந்தார். சிவபெருமானைப் பார்க்க போர்வீரன் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் வந்தார்.பரசுராமர் விஷ்ணுவின் வடிவம், மற்றும் அவரது உயர்ந்த கோபகுணநலனுக்காக அறியப்பட்டவர். கணேசன் அவரை உள்ளே வர அனுமதிக்காத போது, ​​இறைவன் பரசுராமர் தனது கோடாரியை அவர் மீது எறிந்தார். அந்தக் கோடாரியை பரசுராமருக்கு வழங்கியது தன் தந்தை சிவபெருமான் என்பது விநாயகருக்குத் தெரிந்திருந்ததால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். எனவே, அந்தக் கோடாரி அவரின் தந்தத்தை உடைத்து விட்டது.

ஏன் ஒரு எலி அவரது வாகனம்?

ஏன் ஒரு எலி அவரது வாகனம்?

விநாயகர் மற்றும் அவரது சகோதரர் கார்த்திகேயனுக்கும் இடையே ஒரு நாள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இருவரில் சிறந்தவர் யார் என்று தீர்மானிக்க, பிரபஞ்சத்தினை முதலில் யார் ஒரு சுற்று சுற்றிவருகிறார்கள் என்ற ஒரு பந்தயத்தை மேற்கொண்டார்கள். போட்டி ஆரம்பித்தவுடன், கார்த்திகேயர் தனது மயில் வாகனத்தின் மீது ஏறி சவாரி செய்தார். அது அவருக்கு மிக எளிது.

விநாயகர், சவாரி செய்வதற்கு வாகனம் ஏதும் இல்லாததால், அவரது தந்தை சிவனிடம் சென்று தனக்கு ஒரு வாகனத்தை வழங்கவும், ஒரு நியாயமான விளையாட்டை உருவாக்கவும் கேட்டார். உடனே சிவ பெருமான் ஒரு எலியை வாகனமாகக் கொடுத்தார். எலி மீதேறி இந்தப் பிரபஞ்சத்தை சுற்றி வந்து கார்த்திகேயனை வெற்றி கொள்வது கடினம் என்பதையறிந்த கணேசன் புத்திசாலித்தனமாக யோசித்தார் .பெற்றோரே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பிரபஞ்சம் என்பதால் பெற்றோர்களை ஒரு சுற்று சுற்றி வந்தால் அது நிச்சயமாக பிரபஞ்சத்தை சுற்றி வந்ததாகவே அர்த்தம் என்பதை உணர்ந்து அவ்வாறே தன் எலி வாகனத்தோடு செய்து முடித்தார். தன் எலி வாகனத்தோடு அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்றார்.

கஜானன்

கஜானன்

வட மொழியில் கஜா என்றால் யானை என்று பொருள். அனன் என்பது தலை என்று பொருள் . இதனாலேயே அவர் கஜானன் என்றும் அழைக்கப்படுகிறார். கஜானன் என்றால் யானைத் தலையைக் கொண்ட கடவுள் என்று பொருள்.

இன்னொரு விளக்கம் என்னவென்றால், கா என்பது காடி என்றால், ஜா என்பது ஜனா என்ற வடமொழி வார்த்தையிலிருந்து வருகிறது. இது எல்லாம் அவரிடமிருந்து உருவாகிறது என்பதோடு, அவரை இறுதியாக இணைத்துக் கொள்ளவும் விதிக்கப்படுகிறது என்று பொருள்படுகிறது.

கணபதி நாமம்

கணபதி நாமம்

அவர் கணபதி என்றும் அழைக்கப்படுகிறார். வார்த்தை வகைக்கான மற்றொரு பெயர் "கண " என்னும் சொல். அவர் வகைகளுக்கான கடவுளாவார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும், ஐந்து புத்திசாலித்தனங்களால் உணரப்படக்கூடியவை அனைத்தும் அந்த அர்த்தத்தின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. இந்த அனைத்து வகைகளுக்குமான கடவுள்களுக்கெல்லாம் கடவுளானவன் கடவுள் கணேசன். அனைத்தும் அவரிடமிருந்தே தொடங்குவதாக அறியப்படுகிறது.

மேலும், பார்வதி தம்பதியினரைக் காக்க அமர்த்தப்பட்ட காவலாளிகள் "கணங்களாக" அறியப்பட்டனர். எனினும், அவர்கள் சிவபெருமானுடன் போருக்குப் புறப்பட்டபோது, ​​வீட்டிற்கு காவலராக விநாயகர் இருந்தார். சிவபெருமான் இதை அறிந்த போது, ​​அவருக்கு கணபதி என்ற பெயரிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Incredible Lord Ganesha

here we are giving one intresting story about lord ganesha and his mouse vechicle story.
Desktop Bottom Promotion