Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
தமிழ் நடிகர்கள் ஒரு பிடிப்பிடிக்கும் ருசியான உணவுகள்...
தமிழ் நடிகர்கள் ஒரு பிடிப்பிடிக்கும் ருசியான உணவுகள்...
சிலருக்கு சாப்பாடு என்று எதையேனும் கண்ணில் காட்டினால் போதும், அதை சாப்பிட்டுவிட்டு உயிர் வாழ்வார்கள். சிலர் உணவை தேடித் பிடித்து ருசிக்கவே வாழ்கிறோம் என்று மார்தட்டிக் கொள்வார்கள். நாம எதுக்கு பாஸ் உழைக்கிறோம்... மூணு வேல அந்த மூணு ஜான் வயிறுக்காக தானே... அதுக்கு வஞ்சனை வைக்கலாமா... என்று வசனம் பேசுபவர்களை எல்லா நட்பு வட்டாரத்திலும் காணலாம்.
உணவு பிடிக்காது என்று சொல்லும் உயிரினத்தை நாம் எங்கும் காண இயலாது. சரி! நமக்கு பிடித்த நடிகர்களுக்கு என்ன உணவுப் பிடிக்கும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்...

ரஜினிகாந்த!
சூப்பர்ஸ்டாருக்கும் அசைவம் தான் பிரியம். ஆனால், ஆன்மீகம் மற்றும் சில உடல்நலக் கோளாறுகள் காரணமாக இப்போது அசைவத்திற்கு டாட்டா சொல்லிவிட்டு, சைவத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார். குருமார்கள் சிலரின் அறிவுரைப்படி இப்போது ரஜினி நெய், பால் உணவுகளுக்கும் தடை போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அசைவம் சாப்பிட்டு வந்த காலத்தில் மீன் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தாராம் சூப்பர்ஸ்டார்.

கமல்!
ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை சாலக் காத்திருக்குமாம் கொக்கு என்பார்களே அது போல தான் கமலும். கண்ணில் படுவதை எல்லாம் சாப்பிடும் பழக்கம் கமலுக்கு இல்லை. எதுவாக இருந்தாலும் தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே ருசிபார். இல்லையேல் ஸ்ட்ரிக்ட் நோ தான். பாலை தவிர்த்து பிளாக்டீ தான் குடிக்கிறார். அயிரை மீனும், காடை ரோஸ்டும் மிகவும் பிடிக்குமாம் கமலுக்கு.

விஜய்!
விஜய் எப்போதுமே அளவாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர். எவ்வளவு பிடித்தமான உணவாக இருந்தாலும், தட்டில் ஒருமுறை மட்டும் தான் போட்டு சாப்பிடுவார். இரண்டு, மூன்று முறை ரவுண்டு கட்டி அடிக்கும் பழக்கம் தளபதிக்கு இல்லையாம். அதனால் தான் மனுஷன் நாற்பதை தாண்டியும் இன்னும் இருபதுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார் போல.
விஜய்க்கு அம்மா மற்றும் மனைவி சங்கீதா சமைக்கும் மட்டன் மிகவும் பிடித்தமான உணவு. தோசை - மட்டன் காம்பினேஷன் என்றால் மனுஷனுக்கு அம்புட்டு பிரியமாம்.

தல!
இது சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன? தல என்றாலே பலருக்கு அவரது தன்னம்பிக்கை, பைக் ரேஸ் உடன் சேர்ந்து பிரியாணியும் தான் நினைவிற்கு வரும். மங்காத்தா காலத்தில் இருந்து தனது யூனிட்டுக்கு என்றாவது ஒருநாள் நேரம் கிடைத்தால் பிரியாணி சமைத்து போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அஜித்.

விக்ரம்!
எந்த கெட்டப் என்றாலும் அது இந்த நடிப்பு அரக்கனுக்கு மட்டும் தான் பொருந்தும். தான் ஏற்கும் வேடங்களை போலவே உணவுகளையும் அதிகம் தேடுகிறார், விரும்பி தேர்வு செய்து விரும்புகிறார் விக்ரம். ஆழ்கடல் ஜீவராசிகளை விரும்பி வறுத்து உண்ணும் பழக்கம் கொண்டிருக்கிறார் விக்ரம். ஆனால் ஒரு கண்டீஷன், எந்த உணவாக இருந்தாலும் வீண் செய்யாதீர்கள் முழுவதுமாக சாப்பிடுங்கள் என்கிறார் விக்ரம்.

ரவி!
ரவிக்கு மீனும் கீரையும் என்றால் மிகவும் பிரியம். தினமும் கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறார். பலவகை மீன்களை தேடிப்பிடித்து ருசிக்கிறார். எவ்வளவு சாப்பிடுகிறாரோ, அந்த அளவுக்கு ஜிம்மில் வர்க்கவுட் செய்து உண்டதற்கு ஈடுகட்டி விடுகிறார் ரவி. தான் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக் என்பதால் இதில் கறாராக இருக்கிறார் ரவி.

தனுஷ்!
அசைவம் ஓரம்கட்டி சைவம் மட்டுமே போதும் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். எப்போதாவது முட்டை மட்டும் சேர்த்துக் கொள்வாராம். வெளிநாட்டு உணவுகள் மீது மனிதருக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை. தென்னிந்திய உணவுகள் என்றால் கொஞ்சம் கூடுதல் பிரியம் காட்டுவார்.

மாதவன்!
மகாராஸ்டிராவில் பிறந்து தமிழ்நாட்டு பெண்களை காதலிக்க வைத்து இன்று இந்தியாவின் பெயர்பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் மாதவம். மேடி மாதவனுக்கு சைவம் தான் சாய்ஸ். அதிலும் தயிர் சாதத்தில் மாதுளை மற்றும் முந்திரி சேர்ந்து அளித்தால் ஆஹா ஓஹோ என ரசித்து சாப்பிடும் ரகம் நம்ம மாதவன்.

சிம்பு!
பல காதல் தோல்வி, பிரேக்அப் கண்ட சிம்புவிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்று இருக்கிறது என்றால் அது பிரியாணி தான். யாராவது அங்க ஒரு இடத்துல ஒரு பிரியாணி செம்மையா இருக்கு அண்ணா என்று கூறிவிட்டால் போதும், உடனே அங்கே ஆளை அனுப்பி அந்த பிரியாணியை ருசித்துப் பார்த்துவிடுவார் சிலம்பரசன். சிக்கனை காட்டிலும் மட்டன் என்றால் கொஞ்சம் கூடுதல் விருப்பம் சிம்புவிற்கு.

விஷ்ணு விஷால்!
உங்களுக்கு பிரியாணி பிடிக்கும் என்றால், நீயும் என் இனமே என்று பஞ்ச் வசனம் பேசும் அளவிற்கு பிரியாணி என்றால் விஷ்ணு விஷாலுக்கு மிகவும் பிடிக்குமாம். நடிப்பு, கிரிக்கெட்டை தாண்டி தான் மிகவும் நேசிக்கும் ஒருவிஷயம் இருக்கிறது என்றால் அது பிரியாணி தான் என்கிறார். பாஸ் இது உங்க மனைவிக்கு தெரியுமா?



Click it and Unblock the Notifications











