Just In
- 3 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 15 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 17 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 18 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது.. உடலில் கொழுப்பு குறையும்.. பாஜக எம்பி
- Movies
இதுக்குத்தானா...? மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.
- Automobiles
புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது ரஜினி ஃபேன்ஸ்காக மட்டுமில்ல, ஹேட்டர்ஸ்க்குமான பதிவு!
இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது பெயரில் மட்டுமின்றி., பார்வை, பேச்சு, ஸ்டைல், நடை, உடை, பாவனை என அனைத்திலும் காந்தம் உண்டு. இல்லையேல், ஒரு நடிகனால் நாற்பது ஆண்டுகளாக நான்கு தலைமுறை ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டாராக இருக்க முடியாது.
ரஜினி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவரது ஸ்டைல், ஸ்பீடாக வசனம் பேசுவது, அதிலும் முக்கியமாக அவரது பஞ்ச் வசனங்கள். ஒரு கட்டத்தில் ரஜினியின் ஒவ்வொரு படத்திலும் ஒரு ஐகானிக் பஞ்ச் வசனம் இடம் பெரும். அது ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பரவும் சூழல் இருந்தது.
எத்தனையோ நடிகர்கள் பஞ்ச் வசனங்கள் பேசி நடித்திருக்கிறார்கள். ஆனால், அதை மக்கள் மத்தியில் வைரலாக கொண்டு சேர்த்த, அனைவரையும் உச்சரிக்க வைத்த நடிகர் ரஜினி மட்டுமே. அவரது பஞ்ச் வசனங்கள் பவர் பேக்குடாக மட்டும் இல்லாமல், சிலவன நாம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும்படியாகவும் இருந்தன.
அப்படி நம் வாழ்க்கையோடு பொருத்தி பார்க்க கூடிய டாப் 10 ரஜினி வசனங்களை தான் இந்த தொகுப்பில் பார்க்கவிருக்கிறோம்...

#1
நீ விரும்புறவள கட்டிக்கிறத விட, உன்ன விரும்புறவள கட்டிக்கிட்டா வாழ்க்கை சந்தோசமா இருக்கும்... - வள்ளி
நாம விரும்புறவங்க நம்மள அதே அளவு விரும்புவாங்களான்னு ஊர்ஜிதமா சொல்லிட முடியாது. ஆனா, நல்ல அதிகமா விரும்புறவங்கள நாம நிச்சயம் அதே அளவு விரும்ப முடியும். அப்படியான காதல் நிச்சயமா உங்களுக்கு ஒரு சந்தோசமான வாழ்க்கைய ஏற்படுத்திக் கொடுக்கும்.

#2
நல்லவனா இருக்கலாம்.. ஆனா, ரொம்ப நல்லவனா இருக்க கூடாது - தர்மதுரை
இந்த உலகம் நல்லவனா ஏமாளினும், பித்தலாட்டம் பண்றவன பிழைக்க தெரிஞ்சவனும் சொல்லும். அதனால, முடிஞ்ச வரைக்கும் யாருக்கும் தீங்கு நினைக்காம நல்லவனா இருக்கலாம். ஆனா, மத்தவன் கிட்ட ஏமார்ந்து போகுற அளவுக்கு ரொம்ப நல்லவனா இருக்க கூடாது.

#3
என் வழி, தனி வழி... - படையப்பா
ஈஸியா இருக்கே, தடைகள் எதுவுமே இல்லையேன்னு மத்தவங்க உருவாக்கி வெச்ச வழியில போன, உங்களுக்கான இலக்கு அடைய முடியாது. கஷ்டமா இருந்தாலும், உங்களுக்கான தனி வழியில பயணம் பண்ணாம் தான் சாதனையாளன் ஆக முடியும்.

#4
நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் - பாட்ஷா
சொல்றத மட்டுமே செஞ்சுட்டு இருந்தா, வாழ்க்கை புரோக்ராம் பண்ண சாப்ட்வேர் மாதிரி ஆயிடும். வாழ்க்க சுவாரஸ்யமா இருக்கணும், நம்மள வாழு பேரு அண்ணாந்து பார்க்குற அளவுக்கு உயர்ந்து நிக்கணும்னா சொல்றதையும் செய்யணும், சொல்லாததையும் செய்யணும். அது வாழ்க்கையா இருந்தாலும் சரி, அரசியலா இருந்தாலும் சரி!

#5
கதம், கதம்.... முடிஞ்சுது முடிஞ்சுப் போச்சு... - பாபா
முடிஞ்சதையே நினைச்சுட்டு இருந்தா, நிகழ காலத்த இழந்துடுவோம். நிகழ காலத்த இழந்துட்டா கடைசி வரைக்கும் கடந்த காலத்துலேயே தான் வாழ்ந்துட்டு இருக்கணும். வாழ்க்கை வானத்துல கடந்து போகுற மேகம் மாதிரி. வர மேகத்த நிறுத்த முடியாது, நின்னு மழை பெய்யிற மேகத்த விரட்ட முடியாது. முடிஞ்சது மறந்துட்டு, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சு வாழ கத்துக்கங்க.

#6
வாய்ப்புகள் அமையாது, நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும் - கோச்சடையான்
வாய்ப்புகள் லக் மாதிரி, அதுக்காக காத்துக்கிட்டு இருக்குற காலத்துல நீங்களா அந்த வாய்ப்ப உருவக்கிக்கிட்டா வாழ்க்கையில சீக்கிரம் ஜெயிச்சிடலாம்.

#7
நான் லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன்... - பாபா
நாமா லேட்டா வரது முக்கியம் இல்ல, எல்லாத்தையும் கத்துக்கிட்டு லேட்டஸ்டா, அப்டேட்டடா வரோமாங்கிறது தான் முக்கியம்.

#8
லேட்டா வரோமாங்கிறத விட, வந்தா கரக்டா வரணும்... வந்தா அடிக்கணும்... - 2.O இடை வெளியீட்டு விழா
யார்ர முதல்ல வராங்கிறது முக்கியம் இல்ல. வந்து யாரு ஜெயிக்கிறாங்ககிறது தான் முக்கியம். வரணும், வந்தா ஜெயிக்கணும்.

#9
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்கும் நிலைக்காது - அண்ணாமலை
நாமளா உழைச்சு ஒரு பொருள வாங்குனாதா அதோட மதிப்பு தெரியும். இல்லாட்டி அசால்டா அத ஹேண்டில் பண்ணி உடைச்சிடுவோம் இல்ல, தொலைச்சிடுவோம். உழைச்சு, கஷடப்பட்டு சம்பாதிக்கிற பெயர், புகழ், பொருள், செல்வாக்கு தான் என்னைக்குமே நிலைக்கும்.

#10
முகத்துல வியர்வை அப்படியே முத்து, முத்தா வந்து தரையில சிந்தனும். அது தான் உழைப்பாளிக்கு அழகு - உழைப்பாளி
உட்கார்ந்தே சம்பாதிக்கிற யுகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம். நாம இப்ப சம்பாதிக்கிறது நிறையா பணம் மட்டுமில்ல, நோயும் தான். வியக்குற அளவுக்கு உழைக்க முடியாட்டி, விளையாடியாவது அந்த வியர்வைய வெளிய கொண்டு வந்திடனும்.