தோழியிடம் சில்மிஷம் செய்த தயாரிப்பாளருக்கு நாக்கை வெட்டி டிப்பன் பாக்ஸில் பார்சல் அனுப்பிய நடிகை....

Posted By:
Subscribe to Boldsky

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #009ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

  • குண்டு பல்பு மட்டுமில்ல, இளைஞர் அதிகம் விரும்பும் இந்த பொருளையும் தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுப்பிடிச்சாராம்...
  • அமெரிக்காவில் துப்பாக்கி சூடு காரணமாக போலீஸாரை காட்டிலும் அதிகமாக மரணிக்கும் நபர்கள் யார் தெரியுமா?
  • நியூயார்க்கின் இந்த பகுதியில் தினமும் ஒருசிலநிமிடங்கள் நீங்கள் கழித்து வந்தால் போதும், காது செவிடாவது நிச்சயமாம்...
  • ஞாயிறுகளில் சரச்சுகளை காட்டிலும் இரட்டிப்பு மடங்கு கூட்டம் நிரம்பி வழிகிறதாம் இந்த ஸ்ட்ரிப் கிளப்பில்
  • பெண் பாலினத்தை குறிக்கும் இந்த இலட்சினை எங்கிருந்த எடுக்கப்பட்டது தெரியுமா?
  • உலகமே ரசித்து பாராட்டி மகிழும் ஸ்டார் வார்ஸ் படத்தை, அந்த படத்தில் பணியாற்றிய இவர் ஒருமுறை கூட பார்த்ததே இல்லையாம்...
  • தோழியிடம் சில்மிஷம் செய்த தயாரிப்பாளருக்கு நாக்கை வெட்டி டிப்பன் பாக்ஸில் பார்சல் அனுப்பிய நடிகை....
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாட்டூ பேனா!

டாட்டூ பேனா!

பெரும்பாலும் தாமஸ் ஆல்வா எடிசன் என்ன கண்டுபிடித்தார் என்றால், உடனே எல்லாரும் குண்டு பல்பை தான் கூறுவார்கள். இதற்கு காரணம் அவரது விடா முயற்சியும், அதன்பால் அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றியும் தான்.

ஆனால், குண்டு பல்பு தவிர, கார்பன் மைக்ரோ போன், திரைப்படம் எடுக்க உதவும் கேமரா, போனோகிராப் என பலவற்றை கண்டுபிடித்துள்ளார் எடிசன்.

இவர் தனது வாழ்நாளில் 1093 மூன்று கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்று சாதனை செய்துள்ளார் என்று பலருக்கும் தெரியாது.

இளைஞர் மத்தியில் பரவலாக பெரிய ஈர்ப்பாக காணப்படும் டாட்டூ குத்தும் எலக்ட்ரிக் பேனாவையும் எடிசன் தான் கண்டுபிடித்துள்ளார்.

துப்பாக்கி சூடு!

துப்பாக்கி சூடு!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு மூலம் இறப்பவர்கள் எண்ணிக்கையானது, போலீஸாரை காட்டிலும் குழந்தைகள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஆம்! துப்பாக்கி சூடு சம்பவங்களில் காவலர்களை காட்டிலும் 0-4 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் மரணிக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை மூலம் அறியப்படுகிறது.

நியூயார்க்கை சேர்ந்த எழுத்தாளர் நிகோலஸ், குழந்தைகள் கையில் கிடைக்கும் வகையில் துப்பாக்கியை எளிய இடத்தில் வைக்க கூடாது என்றும். டொமஸ்டிக் வயலன்ஸ்ல் ஈடுபடும் நபர்களுக்கு பத்தாண்டு காலம் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்கு ஒரு ஆதாரமாக, கடந்த 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதில், அவ்வாண்டில் குழந்தைகள் 82 பேரும், போலீஸார் 27 பேரும் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்ததை குறிப்பிட்டு கூறியிருந்தார்.

சுரங்கப்பாதை!

சுரங்கப்பாதை!

ஓர் ஆய்வில், நியூயார்க் சுரங்கப்பாதையில் சில நிமிடங்கள் தினமும் நீங்கள் செலவழித்தால் போதும், உங்களுக்கு காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்பட துவங்கிவிடும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அந்த அளவுக்கு நியூயார்க் சுரங்கப்பாதையில் அதிகளவில் இரைச்சலாக இருக்குமாம்.

ஸ்ட்ரிப் கிளப்!

ஸ்ட்ரிப் கிளப்!

கிழக்கு கனடாவில் இருக்கிறது ஒன்டாரியோ எனும் பகுதி. இந்த ஊரில் இருக்கும் ஒரு ஸ்ட்ரிப் கிளப்பில் (பெண்கள் ஆடைகளை கழற்றி ஆடும் கிளப்) ஒவ்வொரு ஞாயிறுகளிலும் சர்ச்சில் கூடும் கூட்டத்தை விட இரண்டு மடங்கு அதிக கூட்டம் கூடுகிறது என்று கூறப்படுகிறது.

மனோர் எனப்படும் எந்த ஸ்ட்ரிப் கிளப் ஒன்டாரியோவின் குயல்ஃப் (Guelph) எனும் இடத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஞாயிறு மதியமும் இங்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது.

பெண் குறி இலட்சினை!

பெண் குறி இலட்சினை!

பெண் பாலை குறிக்கும் இலட்சினையானது (Female Sex Sign)கைக்கண்ணாடி போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இது அப்ரோடைட் எனப்படும் கிரேக்க பெண் கடவுளின் கையில் இருக்கும் பொருளாக கருதப்படுகிறது.

அப்ரோடைட் எனும் பெண் கடவுளானவர், அழகு, பெண்மை, காதல் போன்றவற்றின் கடவுளாக கருதப்படுகிறார்.

கவண்!

கவண்!

பண்டையக் காலத்து ரோமாபுரியில் வாழ்ந்து பெண்கள், தங்களது கூந்தலை இராணுவத்தில் பணிபுரிந்து வந்த வீரர்களுக்கு கவண் தயாரிக்க தேவைப்படும் எலாஸ்டிக் பொருள் உருவாக்க தானமாக கொடுத்து வந்தனராம்.

87 இலட்சம்!

87 இலட்சம்!

நம்மை (மனிதர்களை) பொறுத்தவரை இந்த உலகில் ஒவ்வொரு விஷயத்தை புதியதாக காணும் போதும், ஏதோ பெரிதாக கண்டுப்பிடித்துவிட்டதாக கருதி... அதை ஆராய்கிறோம் என கூறி பல சமயங்களில் அவற்றி அழிப்பதையே வேலையாக கொண்டிருக்கிறோம்.

காடு, நிலம், கடல், ஆகாயம் என நாம் அழிக்காத இடமே இல்லை.

உங்களுக்கு தெரியுமா? மனித இனத்தையும் சேர்ந்து நமது உலகில் 87 இலட்ச வித்தியாசமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

ஆனால், நாமோ... நாம் மட்டுமே இங்கே வாழ்வதாகவும், பூமி என்பது மனிதர்களுக்கு மட்டுமே வாழ்வுரிமை வழங்கப்பட்ட இடம் போலவும் எண்ணி அழித்து வருகிறோம்.

ஜான் வில்லியம்ஸ்!

ஜான் வில்லியம்ஸ்!

ஸ்டார் வார்ஸ் உலக அளவில் மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம். இது பல பாகங்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தை வெளியிட இயக்குனர் மிகவும் சிரமப்பட்டார். அந்த சிரமத்திற்கு ஈடாக, அதை காட்டிலும் பல மடங்கு அதிக புகழும், வெற்றியும் அடைந்தார் என்றாலும், ஸ்டார் வார்ஸ் படங்களுக்கு இசை அமைத்துக் கொடுத்த ஜான் வில்லியம்ஸ் என்பவர் அந்த படத்தை ஒருமுறை கூட பார்த்ததே இல்லை என கூறப்படுகிறது.

விரை உணவு திருவிழா...?!

விரை உணவு திருவிழா...?!

தென்கிழக்கு ஐரோப்பிய பகுதியில் இருக்கும் செர்பியா. இந்த நாட்டின் அடர்ந்த கிராம பகுதி ஒன்றில் விரைகளை சமைக்கும் திருவிழா ஒன்று நடந்து வருவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த திருவிழாவை ஒரு சாம்பியன்ஷிப் போட்டி போல நடத்தி வருகிறார்கள்.

அந்த ஊரை சேர்ந்த சமையல் கலை வல்லுனர்கள் காளை, ஒட்டகம், வான்கோழி போன்ற விலங்குகளை கொன்று, அதன் விரைகளை சமைத்து உண்கிறார்கள். இதில் யார் கமகமவென்று நல்ல நறுமணத்துடன் ருசியாக சமைக்கிறாரோ அவருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படுகிறது.

கலிபோர்னியா!

கலிபோர்னியா!

உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் சென்று வர ஆசைப்படும், வாழ விரும்பும் இடங்களில் ஒன்றாக விளங்குகிறது கலிபோர்னியா. இடத்தைப் போலவே இந்த ஊரின் பெயரும் அழகாக தான் இருக்கும். ஆனால், இந்த மாகாணத்திற்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?

16ம் நூற்றாண்டில் வெளிவந்த ஒரு ரொமான்ஸ் நாவலில் இருந்து தான் இந்த மாகாணத்திற்கு கலிபோர்னியா என்ற இந்த பெயரை வைத்துள்ளனர்.

நாக்கு!

நாக்கு!

ஸ்டார் வார்ஸ் படத்தின் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகை கேரி ஃபிஷர் என்பவர் தனது தோழியின் வாழ்கையை சீரழித்த ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு மாட்டின் நாக்கை பாக்ஸில் அடைத்து அனுப்பி அதிர்ச்சியளித்தார் என கூறப்படுகிறது. அந்த தயாரிப்பாளர் பெயர் குறிப்பிடப்படவில்லை எனிலும், அவர் ஆஸ்கார் வென்ற தயாரிப்பாளர் என்ற குறிப்பு மட்டும் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Random Facts to Know #009!

Random Facts to Know #009!
Story first published: Wednesday, January 31, 2018, 15:23 [IST]
Subscribe Newsletter