19ம் நூற்றாண்டில் பிறந்து, 21ம் நூற்றாண்டில் இறந்த அதிசய பெண்மணி!

Subscribe to Boldsky
Random Facts to Know #006

Image Source: Commons Wikimedia

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #006ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

சீன குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் கண் குறைபாடு ஏற்பட காரணம் என்ன?

மூன்றே நிமிடத்தில் ஃபேஷன் இளைஞிகள் மனதில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது?

யூடியூப் என்ற தளத்தை உருவாக்கலாம் என்று அதன் நிறுவனர்களுக்கு யோசனை தோன்ற காரணமாக அமைந்த நிகழ்வு என்ன?

உலக மக்களால் சம்பாதிக்கப்படும் பணத்தின் 82% லாபம் எங்கே போகிறது தெரியுமா?

பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் அதிபர் ட்ரம்ப் எத்தனை முறை புருடாவிட்டுள்ளார் என்று தெரியுமா?

டியூமர் என்று மருத்துவ மொழியில் அழைக்கப்படும் புற்றுநோயை ஏன் கேன்சர் என்று அழைக்கிறார்கள்?

வடக்கொரியாவின் அதிமேதாவி தனத்தால் உண்டான சேதம்...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீன இளைஞர்கள்!

சீன இளைஞர்கள்!

90 சதவீத சீன பதின்வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு மையோஃப்யா (Myopia) கிட்டத்துப் பார்வை குறைபாடு இருக்கிறதாம்.

சீனாவின் தென் மாகான நகரான குவாங்ஸோவில் இருந்து பெரிய கண் மருத்துவமனை ஐந்தாண்டுகளாக நடத்திய ஆய்வில், சீனாவின் 90% சிறார்களுக்கும், இளம் வயது பருவத்தினருக்கும் கண் பார்வை குறைபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஷன்!

ஃபேஷன்!

ஃபேஷன் பத்திரிகைகளை படிக்கும் பதின் வயதினர்களில் நான்கில் மூன்று பேர், அதில் இருக்கும் படங்களை கண்டு தாங்கள் எப்படி இல்லையே என மன அழுத்தம் கொள்கிறார்கள் என ஒரு ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.

ஃபேஷன் பத்திரிகைகளை படிக்க துவங்கிய மூன்று நிமிடங்களிலேயே, அதில் இருக்கும் மாடல் அழகிகளுடன் தங்கள் உடலமைப்பு மற்றும் அழகுடன் ஒப்பிட்டுக்கொண்டு மனவருத்தம் கொள்கிறார்கள்.

யூடியூப்!

யூடியூப்!

யூடியூப் உருவாக்க ஐடியா பிறந்தது எப்படி? என கூறப்படும் இரண்டு முக்கிய காரணங்கள்...

காரணம் ஒன்று:

ஒருமுறை யூடியூப் நிறுவனர்கள் தாங்கள் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துக் கொள்ள சிரமப்பட்டதாகவும். அந்த சமயத்தில் தான் இப்படி ஒரு இணையத்தளம் துவக்கலாம் என்ற யோசனை பிறந்தது என்றும் கூறப்படுகிறது.

காரணம் இரண்டு:

ஒருமுறை பார்ட்டியில் கலந்துக் கொண்டிருந்த போது, இவர்களது நண்பர்கள், வீடியோக்கள் தேட சரியான இணையத்தளம் இல்லை என்றும், 2004ம் ஆண்டு ஆசியாவில் உண்டான சுனாமி வீடியோ, ஜனத் ஜாக்ஸனின் வார்ட்ரோப் மால்ஃபன்க்ஷன் வீடியோக்கள் பற்றி பேசிக் கொண்டிருந்ததை கேட்டு, இப்படி ஒரு இணையத்தை துவக்க யோசனை பிறந்தது என்றும் கூறப்படுகிறது.

மொத்த லாபம்!

மொத்த லாபம்!

கடந்த 2017ம் ஆண்டு மட்டும் உலக மக்களால் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் நூறு டாலர்களில் என்பது டாலர்கள் உலகின் ஒரு சதவீத பணக்காரர்களிடம் தஞ்சமடைந்துள்ளது.

ஆக்ஸ்ஃபம் இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கைப்படி உலகின் ஐம்பது சதவீதமான அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வில் எந்தவித பொருளாதார உயர்வும் காண்பதில்லை என்று கூறுகிறது. அனைத்து லாபங்களும் உலகின் ஓரிரு சதவீதமான பணக்கார மக்களையே சென்றடைகிறது என்றும். அவர்கள் மட்டுமே பொருளாதார ரீதியாக பலமடங்கு உயர்ந்துள்ளனர் என்றும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

2,140:

2,140:

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் வெளியான செய்தியில், அதிபர் பொறுப்பேற்ற முதல் வருடத்தில் மட்டுமே 2,140 போலி தகவல்களை டொனால்ட் ட்ரம்ப் பரப்பியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நாளுக்கு 5.9 என்ற விகிதத்தில் போலியான தகவல்கள் கூறி மக்களை தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார் என்றும் ட்ரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு உண்மை தகவல் ஆராயும் நிறுவனம் ஒன்று, ட்ரம்ப் பதவியேற்ற நூறாவது நாளில் இருந்து ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் அறிக்கையில் இருந்து தான் இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

கேன்சர்!

கேன்சர்!

நாம் ஏன் புற்றுநோயை கேன்சர் என்று அழைக்கிறோம் என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா. கேன்சர் என்றால் ராசிகளில் நாம் கடகம் என்று கூறும் நண்டு உருவத்தை கொண்டது தானே. அதற்கும் புற்று நோய்க்கும் என்ன சம்மந்தம்?

ஹிப்போக்ரட்டீஸ் (Hippocrates) என்றழைக்கப்பட்ட பண்டைய கிரேக்க மருத்துவர்கள் உடலில் இருக்கும் புற்று நண்டு வடிவத்தில் இருக்கும் என்று கருதினார்கள். அதனாலேயே டியூமர் என்று மருத்துவ மொழியில் அழைக்கப்படும் புற்றுநோயை அவர்கள் கேன்சர் என பெயரிட்டு அழைத்து வந்தனர்.

போல் டான்ஸிங்!

போல் டான்ஸிங்!

போல் டான்ஸ் என்றால் பெரும்பாலும் அனைவரும் அறிவார்கள். பெண்கள் கிளபில் அரைகுறை ஆடை அணிந்து, ஆடிக் கொண்டே ஆடைகளை அவிழ்க்கும் விதமான நிகழ்வுகள் நடக்கும் நடனமே போல் டான்ஸ் என்று நாம் அறிவோம்.

ஆனால், இந்த போல் டான்ஸ் 1135 ADயிலேயே வந்துவிட்டது என்று உங்களுக்கு தெரியுமா? அதிலும், ஆரம்பக்கட்டத்தில் ஆண்கள் தான் போல் டான்ஸ் ஆடினார்கள் என்பதை அறிவீர்களா?

இப்போது போல் டான்ஸ் என்பது ஒருவகை உடற்பயிற்சியாகவும் பின்பற்றப்படுகிறது.

அய்யய்யோ!

அய்யய்யோ!

வடகொரியா என்றாலே ஒன்று அச்சம் வரும், இல்லை கோபம் வரும். காரணம் அவர்கள் செய்யும் அதிமேதாவித்தனம் தான். மூன்று உலக போருக்கு பிள்ளையார் சுழிப்போட நீண்ட காலமாக காத்திருக்கிறது வடக்கொரிய அரசு. இதற்காக அவ்வப்போது அணு ஆயுத சோதனைகள் நடத்தியும் வருகிறது.

இப்படி தான் சென்ற ஆண்டு நடத்திய ஒரு தொலைதூரம் சென்று தாக்கும் அணு ஆயுத பரிசோதனை தோல்வியில் முடிந்து, தனது நாட்டை சேர்ந்த ஒரு நகரத்தையே பதம்பார்த்தது வடகொரியா.

அடேயப்பா!

அடேயப்பா!

ஜியார்ஜ் டபிள்யூ புஷ்ன் அப்பாவும், அமெரிக்காவின் 41வது அதிபருமான ஜியார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் நீண்ட வயது வாழ்ந்து வரும் அமெரிக்க அதிபர் பொறுப்பு வகித்த நபர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். இவருக்கு தற்போது வயது 93.

இவரது மகனான ஜியார்ஜ் டபிள்யூ புஷ்க்கு வயது 71 என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்ஃபிளிக்ஸ்!

நெட்ஃபிளிக்ஸ்!

நெட்ஃபிளிக்ஸ் என்பது ஆன்லைனில், மொபைல் அல்லது ஸ்மார்ட் டிவிகளில் பணம் செலுத்தி படங்கள், சீரியல்கள் காணும் ஒரு ஊடகம் ஆகும்.

ஒரு ஆண், தனது உடலில் நெட்ஃபிளிக்ஸ் என்று பச்சைக் குத்திக் கொண்டு, அதை அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அக்காவுண்டுக்கு ட்விட்டர் செய்தியில் படமாக அனுப்பி ஒரு வருட சந்தாவை இலவசமாக பெற்றுள்ளார்.

சீனா!

சீனா!

ஒவ்வொரு ஐந்து நாட்களிலும் சீனாவில் ஒரு புதிய பில்லியனர் உருவாகிறார் என்று 2016ம் ஆண்டில் பிஸ்னஸ் இன்சைடர் இணையத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே ஆசிய கண்டத்தில் தான் ஒவ்வொரு வாரமும் அதிக பில்லியனர்கள் உருவாகிறார்கள் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

மேலும் ஆசியாவில் உருவாகும் பில்லியனர்களில் 71% பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும். 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35% இவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகின.

புலம்பல்கள்: பிட்டடுச்சு பாஸ் ஆகுற மாதிரி, இவங்க காபியடிச்சே பணக்காரங்க ஆயிடுறாங்க போல்!

எம்மா மோரனோ!

எம்மா மோரனோ!

19நூற்றாண்டில் (1800களில்) பிறந்து உயிர் வாழ்ந்து வந்த கடைசி நபரான எம்மா மோரனோ என்ற நபர் 2017ம் ஆண்டில் தனது 117வது வயதில் மரணம் அடைந்தார்.

இவர் 1899 நவம்பர் 29ம் தேதி இத்தாலியில் பிறந்தவர் ஆவார். 21ம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்து வந்த 19ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே நபர் என்ற புகழை இவர் பெற்றிருந்தார்.

இவர் தினமும் வெறும் மூன்று முட்டைகள் மட்டுமே உண்டு வந்தார். அதிலும் இரண்டு முட்டைகளை பச்சையாக உண்டு வந்துள்ளார். இதுவே தனது ஆரோக்கியத்தின் இரகசியம் என்றும் இவர் கூறியிருந்தார்.

பலே சிறுவன்!

பலே சிறுவன்!

கடந்த 2017ம் ஆண்டு சீனாவை சேர்ந்த பத்து வயது சிறுவன் இரண்டு ஆண்டுகளாக 1,60,000 பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து அதை $2,700களுக்கு விற்று அந்த பணத்தை ஆதரவற்ற எய்ட்ஸ் நோயாளிகளின் மருத்துவத்திற்கு நன்கொடையாக அளித்து அசத்தினான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Random Facts to Know #006

    Random Facts to Know #006
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more