15 வயதிலேயே அம்மா ஆனாரா ஐஸ்வர்யாராய்? 29 வயது இளைஞன் பகீர் புகார்!

Posted By:
Subscribe to Boldsky
15 வயதிலேயே அம்மா ஆனாரா ஐஸ்வர்யா ராய்?- வீடியோ
People Who Claimed Indian Celebs as Their Relation for Fake Popularity!

Image Courtest: Deccan Chronicle

கொஞ்ச மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் இப்படி ஒரு வழக்கு, புகார் சில மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டது. இப்போது அந்த செய்து ஒரு பிரபல நடிகரை, தங்கள் மகன் என்றும், அவருக்கு மரபணு சோதனை எடுத்தே ஆகவேண்டும் என கூறி முதிய தம்பதி நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்தனர்.

இதோ! இப்போது மீண்டும் இதுப் போன்ற ஒரு புகார் முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நாயகியுமான ஐஸ்வர்யா ராய் மீது தொடுக்கப்பட்டுள்ளது. சங்கீத் குமார் என்ற 29 வயதுமிக்க ஆந்திர இளைஞன், ஐஸ்வர்யா ராய் தான் எனது அம்மா என்றும், அவருக்கு நான் IVF முறையில் பிறந்தேன் என்றும் கூறி பரபரப்பை எகிற வைத்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
15 வயதிலா?

15 வயதிலா?

ஆந்திராவை சேர்ந்த இந்த இளைஞன் கூறுவதன் படி பார்த்தால், ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதி ஆனபோதே இந்நபர் பிறந்திருக்க வேண்டும். ஏனெனில், ஐஸ்வர்யா ராயின் தற்போதைய வயது 44. இவரது வயது 29. அப்போது, ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதான போதேவா பிறந்தார் இவர்?

லண்டனில்!

லண்டனில்!

மேலும், 1988ல் லண்டனில் IVF முறையில் ஐஸ்வர்யா ராய் தன்னைப் பெற்றெடுத்தார் என்கிறார் சங்கீத் குமார் எனும் இந்த இளைஞர். மேலும், அபிஷேக் பச்சனைவிட்டு ஐஸ்வர்யா ராய் பிரிந்து விட்டார் என்றும், தனது அம்மாவுடன் (ஐஸ்வர்யா ராயுடன்) தான் வாழ விரும்புகிறேன் என்றும் சங்கீத் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். இதெல்லாம் அபிஷேக் பச்சனுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

ஆதாரம்!

ஆதாரம்!

இப்படி ஐஸ்வர்யா ராய் தனது தாய் என கூறும் சந்கீத்திடம் ஆதாரம் என்ற பெயரில் ஒரு துண்டு காகிதம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திரைப் பிரபலங்களை தங்கை, தாய், கணவர், குழந்தை என கூறிக் கொண்டு கிளம்புவது இதுவே முதல் முறை இல்லை.

இதற்கு முன் ஒருசில இந்திய பிரபலங்கள் இத்தகைய புகார்களில் சிக்கியுள்ளனர்.

அபிஷேக் பச்சன்!

அபிஷேக் பச்சன்!

2007ல் அபிஷேக் பச்சன் தான் எனது கணவர் என ஜான்வி கபூர் என்ற பெண் கிளம்பினார். இவர் சரியாக அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணமாக இருந்த நேரம் பார்த்துக் கிளம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அபிஷேக் பச்சனின் வீட்டின் முன் ஊடகவியலாளர்கள் முன் கூடி கத்தி போராடினார்.

நகரம் முழுக்க!

நகரம் முழுக்க!

அபிஷேக் ஐஸ்வர்யாவின் திருமணம் இந்தியா மட்டுமின்றி, உலக பிரபலங்கள் பங்குபெற்ற நிகழ்வாகும். இத்தகைய நேரத்தில் தான் ஜான்வி கபூர் அவர்கள் வீட்டின் முன் போராடினார். இதனால் மும்பை நகர் முழுவதும் அன்று டாக் ஆப் தி டவுனாக மாறினார் ஜான்வி கபூர். கடைசியில் அவர் கூறியது அனைத்தும் பொய் என அறியப்பட்டது.

கங்கனாவின் காதலன்...

கங்கனாவின் காதலன்...

2010ல் ஆகாஷ் பரத்வாஜ் என்ற இளைஞர் கங்கனா ரனாவத்துக்கு நிறைய கடிதங்கள் எழுதினார். மேலும், தான் ஏற்கனவே கங்கணாவுடன் காதல் உறவில் இருந்தேன் என்றும் இவர் கூறிக்கொண்டார். கங்கனா ஜிம், ஷூட்டிங் என செல்லும் இடத்திற்கு எல்லாம் சென்று வந்தார் ஆகாஷ். கடைசியாக இவரது தொல்லை தாங்காமல் போலீஸில் புகார் அளித்தார் கங்கனா. போலீஸ் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தது.

தனுஷ் எங்கள் மகன்...

தனுஷ் எங்கள் மகன்...

கதிரேசன் மற்றும் மீனாக்ஷி எனும் முதிய தம்பதி நடிகர் தனுஷ் எங்கள் மகன் என கூறி வந்தனர். இவர்கள் 2016ல் இதுக்குறித்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீண்ட நாளாக விசாரணை செய்யபட்டு வந்தது. அவர்கள் தனுஷ் எங்களுக்கு மாதாமாதாம் உதவி தொகை வழங்க வேண்டும் என கோரியிருந்தனர்.

மதுரை பெஞ்ச் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஷாயித் கபூரின் மனைவி!

ஷாயித் கபூரின் மனைவி!

பிரபல நடிகரின் மகளான வஸ்தவிக்தா பண்டிட் என்ற பெண் ஷாயித் கபூரை திருமணம் செய்துக் கொள்ள போவதாக கூறி வந்தார். ஒரு கட்டத்தில், அவரது வீட்டின் அருகே சென்று, அவரை பார்த்துக் கொண்டே இருந்தார். இதுகுறித்து போலீஸ் புகார் எல்லாம் அளிக்கப்பட்டது. இது மொத்தமும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட் என கூறப்பட்டது.

ஷாருக்கானின் அம்மா...

ஷாருக்கானின் அம்மா...

1996ல் மும்பை நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்சில் ஒரு பெண் வழக்கு தொடர்ந்தார். அதில், கிங்கான் என புகழப்படும் ஷாருக் தனது மகன் என்றும், நான் தான் அவரது உண்மையான அம்மா என்றும் புகார் அளித்தார். நீண்டகாலம் வாய்தா, வாய்தா என இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கை 2017ம் ஆண்டு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய்!

இப்போது இதே வகையில் தான் ஐஸ்வர்யா ராய் மீதும் புகார் எழுந்துள்ளது. ஆனால், சங்கீத் பற்றியும், அவர் கூறியுள்ள புகார் பற்றியும் ஐஸ்வர்யா ராய் இப்போது வரை எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் என்ன கூறப் போகிறார், இந்த வழக்கு எத்தனை நாட்கள் நீதிமன்றத்தில் இருக்கும் என்பது தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

People Who Claimed Indian Celebs as Their Relation for Fake Popularity!

People Who Claimed Indian Celebs as Their Relation for Fake Popularity!