உங்கள் பிறந்த நாளின் கூட்டுத்தொகை ஒன்பதா?... அப்போ நீங்க இப்படிதான் இருப்பீங்க...

Subscribe to Boldsky

9 ம் எண்ணில் பிறந்தவர்கள் தங்களை எப்போதும் முன்னிறுத்திக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். தான் சுற்றியிருக்கும் வட்டத்துக்குள், அது குடும்பமாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும், வேலையிடமாக இருந்தாலும் அங்கு இவர்கள் தான் நாயகர்கள்.

numerology

இவர்களுக்கென தனி பாணியைக் கடைபிடிப்பார்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்வது 9 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மிகமிகப் பொருத்தமான ஒன்றாக இருக்கும். அதோடு மட்டுமல்லாது எண் 9 ல் பிறந்தவர்களின் குணங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பம்

குடும்பம்

பொதுவாக இவர்கள் வீட்டிற்கு மூத்த பிள்ளையாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களால், இவர்களுக்கு பெரியஅளவில் லாபம் இல்லையென்றாலும், இவரால் அவர்கள் அடையும் பயன்கள் ஏராளம். இவர்கள் குழந்தைகளைப் போல புதிய விஷயங்களை ஆராய்ந்து தெரிந்து கொள்ளவதில் அதிக ஆர்வமும், துணிவும் கொண்டு இருப்பார்கள். எதிலும் ஒரு உத்வேகத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் சற்று முன் கோபியாகவும் இருப்பார்கள். இவர்களை அன்பாலும், அக்கறையாலும் தான் கட்டுப்படுத்த வேண்டும். இவர்கள் திறந்த மனதுடன், எதையும் வெளிப்படையாக பேசுவிடுவார்கள்.

நட்பு வட்டம்

நட்பு வட்டம்

நண்பர் மத்தியில், இவர்கள் தான் நாயகர்கள். நண்பர்களுடன் இவர்கள் மிக நேர்மையாக பழகினாலும், இவர்களுடைய முன்கோபம், நட்புவட்டத்தில், ஒரு பிரச்சினையாகவே இருக்கும். இவர்களின் மணவாழ்க்கை முழுவதும் ஒரே ரணகளமாக தான் இருக்கும், அதுவும் குறிப்பாக 18ம் தேதி பிறந்தவர்களுக்கு. பொதுவாக மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்று முயற்சி செய்வர்கள். 9ல் பிறந்து பெண்கள் அடங்கிப் போக மாட்டார்கள். மேலும் இவர்கள் வாழ்க்கை மிகவும் குழப்பம் நிறைந்ததாக இருக்கும்.

கோபம்

கோபம்

9ல் பிறந்த, ஒரு சிலர் வாழ்க்கை துணையை கை நீட்டி அடித்து விடுவார்கள். அவ்வப்போது நண்பர்களும், குடும்பத்தாரும் அறிவுரை பஞ்சாயத்து பண்ண வேண்டும். அது அவர்களுக்கு பிடிக்காது என்றாலும் பஞ்சாயத்து செய்தாக வேண்டுமே. வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்தவுடன், சமூகத்திற்காக நிறைய செய்வார்கள்.

கல்வி

கல்வி

நன்றாக படிப்பதிலும், எதையும் வேகமாக கற்றுக்கொள்வதிலும் கெட்டிகாரர்கள். இவர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள். இயற்பியல், வேதியியல் மற்றும் கட்டமைப்பு துறையில் திறமையாக இருப்பார்கள். இவர்கள் கலை மற்றும் படைப்பாற்றல் நிறைய உள்ளவர்கள். விளையாட்டில் பிரகாசிப்பது மட்டுமில்லாமல் எவ்வித சவாலுக்கும் தயாராக இருப்பார்கள். 9ல் பிறந்த சிலர் இளமையிலேயே படிப்பை கைவிட நேரலாம். இவர்களுக்கு வாழ்க்கையில், எல்லாவற்றிக்கும் போராட்டம் என்பது தவிர்க்கமுடியாததாக இருக்கும். இவர்கள் மற்போரிலும், வீரவிளையாடுகளிலும் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை

இவர்களுக்கு எதிர்பாலினத்தவரின் மேல் எப்போதும் அதிகஈர்ப்பு இருக்கும். இவர்கள் புகழ்ச்சிக்கு மயங்கி, யோசிக்காமல் செயல்பட்டுவிடுவார்கள். இந்த விஷயத்தில் இவர்கள் கவனமாக இல்லாவிட்டால், கெளரவம் பாதிக்கப்படலாம். வாழ்க்கையில் ஒருமுறையாயினும் இந்த மாதிரி மாட்டிக்கொள்வார்கள். இவர்களுக்கு 3,6,9 மற்றும் 7 எண்காரர்களுடன் நல்ல உறவு முறை இருக்கும். 1,2,4 ம் எண்காரர்களுடன் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

உடல் நலம்

உடல் நலம்

இவர்களின் தலையிலோ, முகத்திலோ வெட்டுக்காயம் இருக்கலாம். இவர்களை உடற்பயிற்சி மையத்திலோ, கடுமையான உடற் உழைப்பு தேவைப்படும் இடங்களில் தான் காணமுடியும். இவர்களுக்கு பாலுணர்வு அதிகம் இருக்கும். வாழ்க்கையில் ஒருமுறையேனும் இவர்களுக்கு ஏதாவது ஒரு அறுவை சிகிச்சை நடக்கும். மேலும் சிறு நீரகத்தில் கல், கணையம் பாதிப்பு ஏற்படலாம். உடல் நலம் காக்க தண்ணீர் அதிகம் அருந்தவேண்டும். இவர்களுக்கு பித்தசரீரம் என்பதால் கடுமையான வியாதிகள் அவ்வப்போது தலைகாட்டும். தீ மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கையாளும் போது அதிககவனம் தேவை. 9ம் எண் காரர்களுக்கு அடிக்கடி ஜீரம், சீழ் கொப்புளங்கள் ஏற்படும். 9ம் எண் மூலதார சக்கரத்தை குறிப்பதால், இவர்கள் சில நேரங்களில் கொஞ்சம் பாதுகாப்பற்ற உணர்வும், சமனிலை இழந்தும் காணப்படுவார்கள். இதனால் அடிக்கடி கோபம் வந்து, இரத்த சம்மந்தப்பட்ட நோயினாலும், எலும்பு, தலைமுடி மற்றும் கழிவகற்று உறுப்புகளினாலும் நோய் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர். கண்கள் மற்றும் கணையமும் நெருப்பின் ஆளுகைக்கு உட்பட்டது. இவர்களுக்கு செவ்வாய் பலமற்று இருந்தால், கண் நோய் மற்றும் சர்க்கரை வியாதி ஏற்படலாம்.

வேலை மற்றும் நிதி நிலைமை

வேலை மற்றும் நிதி நிலைமை

இவர்கள் உணர்ச்சி வேகத்தில் தாறுமாறாக செலவு பண்ணிவிடுவார்கள் என்பதால் நன்றாக திட்டமிட்டு பணத்தை கையாள வேண்டும். இவர்கள் நல்ல பொறியாளர்களாகவோ, அறுவை சிகிச்சை நிபுணர்களாகவோ, மருந்தக நிபுணரகவோ பிரகாசிப்பார்கள். மேலும் விளையாட்டு துறை, குத்து சண்டை, துப்பாக்கி /வெடி பொருட்கள் கையாளுதல், உணவகங்கள், நடிப்பு, காவல்துறை, இராணுவம் போன்ற துறைகளும் இவர்களுக்கு சரியாக இருக்கும். சீன நியுமராலஜிபடி 9ம் எண் புகழ் சம்மந்தப்பட்டது.

அதனால் எப்போதும், தான் இருக்கும் துறையில்ம, புகழுக்காக கொஞ்சம் அலைவார்கள். ஆனால் தொழில் அல்லது வேலை என்று வந்து விட்டால் கடினமாகவும் கறாராகவும் நடந்து கொள்வதால், பல மறைமுக விரோதங்களை சம்பாதித்து கொள்வார்கள். மனதளவில் மென்மையாக இருப்பார்கள். இவர்கள் ஆற்றல் உற்பத்தி மற்றும்உள்கட்டமைப்பு சார்ந்த தொழிலகளை சிறப்பாக செய்வார்கள். இயந்திரம் சார்ந்த எந்த ஒன்றையும் சிறப்பாக செய்வார்கள். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் இவர்களுக்கு முன்னேற்றம் தரும். செப்டம்பர், அக்டோபர் அவ்வளவு சிறப்பு தராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync
  English summary

  NINE - The number of warrior

  There can be instances where the number 9 individual physically manhandle their spouses.
  Story first published: Tuesday, June 5, 2018, 12:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more