For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகன் பிறந்த நாளில் கோரமான மனித மூளை கேக் வெட்டி கொண்டாடிய தாய்!

மகன் பிறந்த நாளில் கோரமான மனித மூளை கேக் வெட்டி கொண்டாடிய தாய்!

|

லிஸ் (30), இவர் ஆஸ்திரேலியாவின் மெல்பார்ன் பகுதியில் வசித்து வரும் பெண்மணி. இவருக்கு சென்ற வருடம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அலக்சாண்டர் என பெயர் சூட்டி மகிழ்ந்ததை காட்டிலும், அலக்சாண்டரரின் முதல் பிறந்த நாளில் மனித மூலம் கேக் வெட்டி கொண்டாடியதில் தான் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார் லிஸ்.

மகனின் முதல் பிறந்த நாள் விழா என்பது அனைவரும் பெரிதாக கொண்டாட விரும்பும் நிகழ்வு. எந்தவொரு விஷயத்தையும் முதன்முறையாக செய்யும் போது விமர்சையாக செய்து பார்த்திட வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். ஆனால், லிஸ் மட்டும் அலக்சாண்டர் ஹாலோவீன் (Halloween) தினத்தில் பிறந்த காரணத்தால், அவன் பயமுறுத்துதலை தான் விரும்புவான் என்று கருதி மனித மூலம் கேக்கை அமைத்திருக்கிறார்.

Mom Made a Gory Human Brain for Her Baby Who Born on Halloween!

All Image Source and Courtesy: Dailymail / Amanda Queen Photography

லிஸ்சின் மகன் சென்ற வருடம் ஹாலோவீன் நாளில் பிறந்தான். அதனால், ஹாலோவீன் போலவே தன் மகனின் முதல் பிறந்த நாள் விழாவை கொஞ்சம் அச்சுறுத்தும் வகையில் கொண்டாட தீர்மானித்திருக்கிறார் லிஸ். மகனின் முதல் பிறந்தாளுக்கான போட்டோஷூட் முதல் கேக் வரை அனைத்திலும் ஹாலோவீன் தீம் கருவாக கொண்டிருக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடும் போது, தற்சமயம் கேக் ஸ்மாஷ் தான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இது மிகுதியான க்ரீம் கொண்டு தயாரிக்கப்படும் கேக் ஆகும். எனவே, மெல்பார்ன் சேர்ந்த லிஸ் எனும் இந்த பெண், ஹாலோவீன் தினத்தில் பிறந்த தன் மகன் மனித மூளை வடிவிலான கேக் ஸ்மாஷ் செய்து பிறந்தநாள் கொண்டாடினால் தான் திட்டமிட்ட தீமிற்கு ஏற்றவாறு இருக்கும் என்று கருதினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐடியா!

ஐடியா!

முதலில் ஹாலோவீன் தீம் என்று திட்டமிட்ட லிஸ்சிற்கு, கேக் எந்த தீமில் அமைக்க வேண்டும் என்பதில் குழப்பம் இருந்தது. எனவே, அவர் கூகுள், பின்ட்ரஸ்ட் போன்ற தளங்களில் தேடி உலாவி இருக்கிறார். அப்போது தான் கேக் ஸ்மாஷ் செய்து கொண்டாடும் ஐடியா பிறந்துள்ளது. அதன் பிறகு தான், இந்த மனித மூளை கேக் ஸ்மாஷ் ஐடியா கொண்டிருக்கிறார் லிஸ்.

கேக் வகை!

கேக் வகை!

மனித மூளை கேக் செய்வதற்காக, முதலில் வூல்வர்த்ஸ் என்ற கடைக்கு சென்று ஸ்பாஞ் கேக் வாங்கி, அதனுடன் க்ரீம் சீஸும் வாங்கி இருக்கிறார். இந்த சீஸ் மூலம் தான் மனித மூலம் போன்ற வடிவத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதன் மீது ராஸ்பெர்ரி பயன்படுத்தி கோரமான இரத்த தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார் லிஸ். இந்த மனித மூளை கேக் செய்ய லிஸ் செலவளித்து 40 டாலர்கள் ஆகும். இரத்தம் போன்ற பதம் வருவதற்கு ஜாமையும் சேர்த்துக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார் லிஸ்.

ரியாலிட்டி!

ரியாலிட்டி!

ஸ்பாஞ் கேக் மீது சீஸ் க்ரீம் கொண்டு மனித மூளை வடிவம் ஏற்படுத்திய பிறகு, ராஸ்பெர்ரி ஜூஸ் தெளித்த பிறகு, சீஸ் உடன் சேர்ந்து அது மெல்ல உருக,உருக மனித மூளை மற்றும் இரத்தத்திற்கான பதம் சரியாக உருவானது. பார்க்க நிஜமாகவே ஏதோ மனித மூளையை எடுத்து வைத்தது போன்று ரியலாக தெரிந்தது என்று கூறி இருக்கிறார் லிஸ்.

வினோத அழைப்பு!

வினோத அழைப்பு!

வெறும் கேக்குடன் நிறுத்தாமல், அலக்சாண்டரின் புகைப்படங்கள் மற்றும், மனித மூளை கேக் வெட்டி மகிழ்ந்த புகைப்படங்கள் அனைத்தையும் சேர்ந்து ஒரு ஹாரர் பட டீசர் போல வீடியோ ஒன்றை வடிவமைத்து, அதை நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி அலசாண்டரின் முதலாவது பிறந்தநாளுக்கு வினோத அழைப்பு விடுத்திருக்கிறார் லிஸ்.

லிஸ் தனது முகநூலில் இந்த மனித மூளை கேக்குடனான தன் மகனின் படத்தை பகிர, அது ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்டுகளுடன் வைரலாக பரவ துவங்கியது.

இதுவே முதல் முறை அல்ல.!

இதுவே முதல் முறை அல்ல.!

ஆனால், லிஸ் செய்த இந்த கோரமான மனித மூளை கேக் என்பது இதுவே முதல் முறையல்ல. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் என்ற பகுதியை சேர்ந்த எமி லூயிஸ் என்ற பெண்மணி, இதை விட கொடூரமாக தன் மகனின் பிறந்தநாளுக்கு ஒரு மனித மூளை கேக் செய்து, அதனுடன் போட்டோஷூட், எடிட்டிங் எல்லாம் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

2015

2015

லூயிஸின் மகன் 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தான். பிறந்த போது, அவனுக்கு இதய துடிப்பு இருக்கவில்லை. இதனால், லூயிஸ் மற்றும் அவரது கணவர் மிகுந்த வருத்தம் அடைந்தனர். மருத்துவர் பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்ட அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மூச்சும் இல்லை, இதயத்துடிப்பும் இல்லை... கிட்டத்தட்ட அவன் இறந்துவிட்டான் என்றே மருத்துவர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால், மருத்துவர்கள் தங்களால் முடிந்த முயற்சியை செய்து கொண்டிருந்தனர்.

போராட்டம்!

போராட்டம்!

பிறக்கும் போதே போராடி தன் உயிர் பெற்றான் பீனிக்ஸ். நான்கு நாட்கள் பீனிக்ஸ்-க்கு மருத்துவ சிகிச்சைகள் அளித்த பிறகே, லூயிஸ் தன் மகனை முதல் முறையாக முழுதாக காண முடிந்தது. எனவே, பிறக்கும் போது இறப்பு பயத்தை காட்டிய தங்கள் மகனின் முதல் பிறந்தநாளை ஜோம்பி தீமில் கொண்டாட வேண்டும் என்று லூயிஸ் தம்பதியினர் கருதினர். எனவே, அதற்கு ஏற்ப மனித மூளை கேக் வடிவமைக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mom Made a Gory Human Brain for Her Baby Who Born on Halloween!

Mom Made a Gory Human Brain for Her Baby Who Born on Halloween!
Desktop Bottom Promotion