For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் இருக்க நீங்கள் இருக்க வேண்டிய "ஜீவ்புத்ரிகா விரதம்" - என்ன செய்யணும்

நம்முடைய வீட்டில் உள்ள குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு பெற்றோர்கள் இருக்க வேண்டிய விரதங்களும் பரிகாரங்களும் என்ன என்பதை இங்கே விளக்கியுள்ளோம்.

|

"ஜீவ்புத்ரிகா விரதம்" என்பது தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பெண்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு விரதமாகும். இந்த விரதம், ஒருவரின் குழந்தையின் நீண்ட கால வாழ்க்கை, நல்ல ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றில் அனுகூலமான விரைவான முடிவுகளைத் தருவதாக கூறப்படுகிறது. எனவே, அஷ்வின் மாதத்தில் கிருஷ்ணா பக்ஷத்தில் சப்தமித் திதி முதல் நவமித் திதி வரை இந்த விரதத்தை பெண்கள் கடைபிடிக்கிறார்கள்.

Jivitputrika Vrat For The Long And Happy Life Of Children

இந்த வருடம், இவ்விரதம் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 4, 2018 வரை கடைபிடிக்கப்படும். இந்த விரதத்தை ஜியுடியா பர்வா எனவும் அழைக்கலாம். ஜியுடியா திதி, அக்டோபர் 2 ம் தேதி காலை 4 மணியளவில் தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதி 2:17 மணி வரை தொடரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விரதத்தின் முதல் நாள்

விரதத்தின் முதல் நாள்

முதல் நாள் விரதம் அக்டோபர் 2 ம் தேதி கடைபிடிக்கப்படும். முதல் நாள் நஹயா கா என அழைக்கப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் எழுந்து, குளித்து, பூஜை செய்து, ஏதாவது சாப்பிடுவார்கள். அதன் பிறகு நாள் முழுவதும் எதுவும் சாப்பிடுவதில்லை. பிரம்ம முகூர்த்த (சூரிய உதயத்திற்கு முன்) நேரத்தில் இந்தச் சடங்குகளை பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

MOST READ: எந்த ரெண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை பிரச்னை இல்லாம இருக்கும்?

விரதத்தின் இரண்டாம் நாள்

விரதத்தின் இரண்டாம் நாள்

விரதத்தின் இரண்டாவது நாள் மிக முக்கியமான ஒன்றாகும். இது குர் ஜியுதியா என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது நாள் மூன்று நாட்களில் மிக முக்கியமானதாகும். ஒரு நிர்ஜலா விரதம் இந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது, அதாவது விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் எதுவும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது என்பதாகும்.

MOST READ: பித்ருக்களின் அடையாளமாக ஏன் காகத்தை குறிப்பிடுகிறோம்?

விரதத்தின் மூன்றாம் நாள்

விரதத்தின் மூன்றாம் நாள்

மூன்றாவது நாள் பரண நாளாகக் கருதப்படுகிறது. பரண நாள் விரதம் உடையும் நாளாகும். விரதத்தை உடைக்க எதையாவது சாப்பிடலாம் என்றாலும் ஜொர் பாட், நொனி சாக், மடுவா ரோட்டி, முதலியவை அந்நாளில் தயாரிக்கப்படும் சிறப்பு உணவுகளாகும்.

MOST READ: நீங்க மேஷ ராசியா? அப்போ திருமண உறவில் கட்டாயம் இந்த 5 பிரச்னைய சந்திச்சே ஆகணும்

வ்ரத் விதி

வ்ரத் விதி

அஷ்வின் மாதத்தில் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த விரதத்தை கடை பிடிக்க வேண்டும். இந்த நாளில் பெண்கள் சிவனை வணங்குகின்றனர். சிலர் ஜும்முத்வாகனாவையும் பிரார்த்தனை செய்கின்றனர். தூபம், விளக்கு, அரிசி, மலர்கள், முதலியவை கடவுளின் உருவத்தின் முன் வைக்கப்படும். சில பெண்கள் குஷா புல்லைப் பயன்படுத்தி ஜும்முத்வாகனா சிலைகளை உருவாக்குக்கின்றனர். சிலர் இந்தப் புல்லை இறைவனின் முன் வைக்கிறார்கள்.

தெய்வத்தின் இருப்பை அடையாளப்படுத்தி பிரார்த்தனை செய்கிறார்கள். இது மட்டுமல்லாமல், கழுகுகள் மற்றும் குள்ள நரிகளின் படங்கள் களிமண் மற்றும் மாட்டு சாணத்தைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. செந்தூரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது மற்றும் பிரார்த்தனையும் வழங்கப்படுகிறது. இதன்பிறகு, ஜீவ்புத்ரிகா விரத கதைகள் விவரிக்கப்படுகிறது.

MOST READ: இந்த ஆறில் உங்க உள்ளங்கை எந்த கலர்னு சொல்லுங்க... உங்க விதி எப்படினு தெரிஞ்சிக்கோங்க...

விரதம் குறித்து முக்கிய விதிகள்

விரதம் குறித்து முக்கிய விதிகள்

முதல் நாள் சூரிய உதயத்திற்கு முன் உணவு சாப்பிட வேண்டும். சூரிய உதயத்திற்குப் பிறகு எதையும் சாப்பிடுவது பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. விரதம் தொடங்கும் முன் ஒருவர் இனிப்பு உணவை மட்டுமே உண்ண வேண்டும். உப்பு உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எனினும், Parana விற்குப் பிறகு எதையும் சாப்பிடலாம். மூன்றாவது நாளின் காலையில் பரணா செய்யப்பட வேண்டும். பூசாரிகளுக்கு நன்கொடை கொடுக்கும் ஒரு பாரம்பரியமும் உள்ளது. ஒவ்வொரு விரதத்தின் போதும் நன்கொடை வழங்குவது அவ்விரதம் வெற்றிகரமாக அமைய முக்கியம் என்பது ஐதீகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Jivitputrika Vrat For The Long And Happy Life Of Children

here we are giving some useful and spiritual aspect Jivitputrika Vrat For The Long And Happy Life Of Children.
Desktop Bottom Promotion