For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழை இலையின் நடுவில் ராமன் ஏன் அவ்வளவு பெரிய கோடு போட்டார் தெரியுமா?

வாழை இலைக்கு நடுவே இருக்கும் பற்றிய கதையை ராமாயணத்தில் இருந்து இங்கே எடுத்துக் கூறியுள்ளோம்.

|

மற்ற இலைகளில் இல்லாத, வாழை இலையினுடைய நடுவில் மட்டும் ஒரு பெரிய கோடு போட்டது யார்?

இப்படியெல்லாம் யாராவது நம்மிடம் வந்து கேள்வி கேட்டால் சிரிப்பு தான் வரும். போடா பைத்தியக்கார பயலே என்று பெரியவர்கள் திட்டிவிடுவார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? இலையில் கோடு இருப்பதற்கெல்லாம் ஒரு காரணமா என்று நீங்கள் நினைக்கலாம்.

intresting story behind ramayana

ஆனால் அணிலின் மேல் உள்ள மூன்று கோடுகளுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும்பொழுது, வாழை இலைக்கு நடுவில் இருக்கும்பொழுது, பெரிய கோடு உருவாகி இருக்க காரணம் இருக்காதா? ஆம். அதன் பின்னால் அப்படியொரு சுவாரஸ்ய கதை இந்த கோட்டுக்குப் பின்னால் இருக்கிறது. படிச்சு என்ஜாய் பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழை இலை

வாழை இலை

தலை வாழை இலையைப் போட்டு, அதில் சுடச்சுட சாதம், அவியல், பொரியல் என வகைவகையாக வைத்து சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் சிலருக்கு சுடசுட பாயசத்தை போட்டு, முழங்கையில் வழிந்து வர வர எடுத்து சாப்பிடுவது மிகப் பிடிக்கும். பொதுவாக நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இலையில் பரிமாறும் பொழுது, வலது புறத்தின் மூலையில் உப்பு மற்றும் ஊறுகாய் வைப்பார்கள். நடுவில் இருக்கும் கோட்டுக்கு மேல் சாதத்தை தவிர, மற்ற வகைகளை வரிசையாக வைப்பார்கள். அப்படி என்ன பாகுபாடு எப்படி வந்தது

புராண காலம்

புராண காலம்

புராண காலத்தில் வாழை இலையில் நடுவினில் இதுபோன்ற பெரிய கோடு எதுவும் இல்லை. ராமாயணக் காலத்துக்குப் பிறகு தான் வாழை இலையில் கோடு வந்ததாம்.

ராமாயணம்

ராமாயணம்

ஒருமுறை ராமன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அந்த சமயம் அனுமானும் அங்கிருந்தாராம். உடனே ராமன் அனுமனிடம் நீங்களும் இந்த ஒரே இலையில், என்னுடன் அமர்ந்து சாப்பிடுங்கள் என்று சொன்னாராம். அப்போது தான் அனுமன் சாப்பிடுவதற்காக, தன்னுடைய இலையில் பாதியை அணில் மேல் கோடு போட்டது போல, அந்த வாழையிலும் பாதியாக தன்னுடைய விரல்களால் கோடு போட்டாராம் ராமன்.

இரண்டு பிரிவுகள்

இரண்டு பிரிவுகள்

அப்படி கோடு கிழிக்கப்பட்ட இரண்டு பிரிவுகளில், ராமன் உட்கார்ந்திருந்த பக்கத்தில் இலையில், எப்போதும் மனிதர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவையும் எதிர்ப்புறத்தில் அனுமன் இருந்த பக்கத்தில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடுகின்ற காய்கறிகளும் பழங்களும் பரிமாறப்பட்டன.

வாழை பற்றிய சில விஷயங்கள்

வாழை பற்றிய சில விஷயங்கள்

வாழை இலையில் நாம் தினமும் உட்கார்ந்து சாப்பிடுவது கிடையாது. அதனால் எப்போது வாழை இலையில் உட்கார்ந்து சாப்பிடும்போதும் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். இலையை எப்படி திருப்பிப் போட வேண்டும் என்று.

நுனிப்பகுதியை வலப்புறமாக போட வேண்டுமா இல்லை இடது புறமாகப் போட வேண்டுமா என்று குழம்புவோம். அது ரொம்ப சிம்பிளான விஷயம்.

இலையின் நுனிப்பகுதியை சாப்பிடுகிறவருக்கு இடது புறமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் வலது கையில் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் என்பதனால், வலதுபுறம் நமக்கு சற்று அகலமாக பகுதி தேவைப்படும்.

உப்பும் ஊறுகாயும்

உப்பும் ஊறுகாயும்

உப்பு, ஊறுகாயை மட்டும் ஏன் நுனிப்பகுதியின் ஓரத்தில் கொண்டு வைக்கிறோம் என்று யாரும் யோசித்திருக்க மாட்டோம். ஏனென்றால், உப்பு மற்றும் ஊறுகாய் இரண்டுமே நாம் அதிகமாக சாப்பிடக்கூடாது. அது உடம்புக்குக் கெடுதல் என்பதால், அதை நம்முடைய கைகள் கஷ்டப்பட்டு எட்டி எடுக்கும் தூரத்தில் நுனியில் வைக்கிறார்கள்.

காய்கறிகள்

காய்கறிகள்

சாதமும் காய்கறிகளும் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனால் அதை வலது புறம் அகலமான பகுதிகளில் பரிமாறுகிறோம். அதேபோல் முதலில் இலையில் இனிப்பு பதார்த்தம் பரிமாறுவதற்கும் நல்ல விஷயத்தை தொடங்கும்போது இனிப்பில் தொடங்க வேண்டும் என்று எல்லோரும் சொன்னால் கூட, அறிவியல் ரீதியான காரணமும் அதில் உண்டு.

இனிப்பை எடுத்து நாம் வாயில் போட்டதும், இனிப்பு நேரடியாகச் சென்று உமிழ்நீரில் கலந்து ரத்தத்தில் கலந்து, மூளைக்கு நேரடியாகச் சென்று ஜீரண சக்திக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்க மூளை உத்தரவிடுகிறது. அதனால் ஜீரணம் வேகமாக நடக்கிறது.

முன்னோர் மரபு

முன்னோர் மரபு

வாழை இலை போடுவதில் இருந்து அதில் பரிமாறப்படும் முறை வரையில், எத்தளை அறிவியல், எத்தனை ஆரோக்கியம் நம்முடைய முன்னோர்களின் மரபில் இருந்திருக்கிறது. ஆனால் இன்றோம் நாம் ஃபாஸ்ட்ஃபுட் கலாச்சாரத்துக்கு மாறி, நம்முடைய மரபுகைளையும் அதில் உள்ள உண்மைகளையும் புறந்தள்ளி விட்டோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

intresting story behind rama draw line on banana leaf's

intresting story behind rama draw line on banana leaf's
Story first published: Thursday, August 30, 2018, 12:57 [IST]
Desktop Bottom Promotion