For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

13 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் போலீசாருக்கு இருந்த மிகப்பெரிய சவால்!

கொலை வழக்கின் குற்றவாளியை கண்டுபிடிக்கச் செல்லும் போலீசாருக்கு காத்திருக்கும் சவால்களும் அவை எல்லாவற்றையும் கடந்து எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்

|

பிறர் கண்களிலிருந்து மறைத்து விடுகிறேன் நான் செய்யும் இந்த யாருக்கும் தெரியாது என்று நினைப்பவை எல்லாம் யாருக்கோ தெரிந்தே இருக்கிறது என்பது தான் உண்மை.

அதை நீங்கள் வேண்டுமானால் உணராமல் இருக்கலம. இதைவிட இன்னொரு விஷயம் தவறு செய்து விட்டு நான் செய்யும் இந்த தவறினை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற தீவிரமான நம்பிக்கை இருக்கிறது. உண்மை ஒரு நாளும் வெளிப்படாமல் இருக்காது, காலம் தாழ்ந்தாலும் கூட அந்த உண்மை வெளிப்பட்டே தீரும்.

இங்கே சில வருடங்களுக்கு முன்னால் இத்தாலியில் நடந்த உண்மை சம்பவம். ஒரு கொலையும் அந்த கொலைக்குற்றாவளியை கண்டுபிடிப்பதற்குள் எதிர்பாராத திருப்பங்களுடன் போலீசாரையே உறைய வைத்த சில பின்னணி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

2010 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதே ஆண்டு நம்பவர் மாதம் 26 ஆம் நாள் யாரா கம்பிரசியோ என்ற பதிமூன்று வயது சிறுமி தன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கிறார்.

இவர் வசித்து வந்த இடம் இத்திலியில் உள்ள ப்ரிம்ப்பேட் டி சோப்ரா என்ற இடம். அன்றைய இரவு வரை யாரா வீட்டிற்கு வந்து சேரவில்லை. எங்கே பார்ட்டியில் இருப்பார் என்று நினைத்துக் கொண்டார்கள் யாரா வீட்டினர்.

Image Courtesy

#2

#2

மறுநாளும் வராததால் நண்பர்களிடம் கேட்கப்படுகிறது. அவள் நேற்று மாலையே கிளம்பிவிட்டால் நாங்கள் எந்த பார்ட்டிக்கும் செல்லவில்லை என்று சொல்லிவிட மகளைக் காணமால் வீட்டினர் தேட ஆரம்பிக்கிறார்கள்.

எங்கு தேடியும் கிடைக்காததால் சிறுமி காணாமல் போன இரண்டாம் நாள் இரவு போலீசாரிடம் புகார் அளிக்கப்படுகிறது. அவர்களும் தேடுகிறார்கள். எங்குமே சிறுமி யாராவை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவளை வேறு ஊருக்கு கடத்திக் கொண்டு சென்றிருக்கலாம் என்று பேசப்பட்டது.

இப்படியே நாட்கள் நகர கிட்டத்தட்ட யாரா காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆகிவிட்டிருந்தன.

Image Courtesy

#3

#3

மூன்றாம் மாதம் இறுதியில் போலீசாருக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஒரு பிணம் நிலத்தில் அழுகிய நிலையில் கிடப்பதாக சொல்கிறார்கள். போலீசார் விரைந்து வந்து அந்த பிணத்தை கைப்பற்றி விசாரணையை துவக்குகிறார்கள்.

அப்பகுதியில் இருப்பவர்கள் யாரும் அந்த பிணத்திற்கு உரிமை கொண்டாடவில்லை என்பதால் கொலை செய்யப்பட்டவர் யார் என்ற கோணத்தில் விசாரணையை துவக்குகிறார்கள். உடலெங்கும் கத்திக்குத்துகளுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பிணம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காணமல் போன சிறுமி யாரா தான் என்று உறுதியாகிறது.

Image Courtesy

#4

#4

கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட சிறுமி இப்படி கொலை செய்யப்பட்டு அதுவும் மிகவும் கோரமான நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது எல்லாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதோடு இந்த கொலையை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணையை ஆரம்பித்தார்கள்.

சிறுமி வசிக்கும் இடமும் அவரது பிணம் கண்டுபிடிக்கப்பட்ட இடமும் வெவ்வேறு என்பதால் கொலைக்காரன் குறித்த சரியான ஒர் பிம்பத்தை எட்ட முடியாமல் போலீசார் திணறினர்.

Image Courtesy

#5

#5

பிணம் இருந்த இடத்திலிருந்து எந்த விதமான சாட்சிகளோ அல்லது சந்தேகப்படும்படியான பொருளோ எதுவும் கிடைக்கவில்லை. எங்கிருந்து விசாரணையை துவக்குவது என்று போலீசார் குழம்பிக்கிடந்தனர்.

பின்னர் ஒரு வழியாக சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் வசித்த சுமார் பதினைந்தாயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ டெஸ்ட்டிலிருந்து எது ஒத்துப் போகிறது என்று பார்க்கப்பட்டது . முடிவாக டேமியானோ என்ற நபரின் டிஎன்ஏ ப்ரோஃபைல் ஒத்திருப்பதாக போலீசார் கண்டறிந்தார்கள்.

Image Courtesy

#6

#6

ஆனால் டோமியானோவின் உறவுக்காரர் ஒருவர் தான் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். அதனால் அவரும் அவரது குடும்பாதார் எல்லாருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது.

எதுவும் சிறுமியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பிற டிஎன்ஏ விற்கு ஒத்துவரவில்லை. சரி எங்களுக்கு டோமியானோ பயன்படுத்திய ஏதேனும் பொருள் கிடைக்குமா? என்று அந்த உறவுக்காரரிடம் கேட்கிறார்கள். வீடு முழுவதும் தேடி அலைந்த அந்த நபர் டோமியோனா தனக்கு அனுப்பிய ஒரு கடிதம் என்று சொல்லி ஒரு கடிதத்தை கொடுக்கிறார்.

அதிலிருந்து எடுக்கப்பட்டு டிஎன்ஏ ஒத்துப் போனது.

Image Courtesy

#7

#7

அப்படியென்றால் டோமியானோ தான் கொலைக்குற்றவாளி என்று முடிவெடுப்பதற்குள் போலீசாருக்கு இன்னொரு சவால் காத்திருந்தது. ஏனென்றால் சிறுமி இறந்த ஆண்டிலிருந்து பதினோறு ஆண்டுகள் முன்னதாகவே டோமியானோ உடல்நலக்குறைவால் இறந்திருந்தார். அதற்குரிய சான்றிதழ்கள் எல்லாம் சரிபார்த்து உறுதி செய்த பின்னர் மீண்டும் கொலைக்குற்றவாளியை தேட ஆரம்பித்தனர்.

இப்போது கையில் ஒரேயொரு துருப்பு இருக்கிறது. அதாவது டோமியானோவின் குடும்பத்தாரை பிடித்தால் கொலைக்குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம் என்று எண்ணினார்கள்.

Image Courtesy

#8

#8

டோமியானோவிற்கு மூன்று மகன்கள் மூன்று மகன்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. துரதிஷ்டவசமாக எந்த டிஎன்ஏவும் ஒத்துப் போகவில்லை.

டோமியானோவின் குடும்பத்தாரை பிடித்தால் வேலை முடிந்தது என்று நினைத்திருந்த நேரத்தில் இப்படியொரு ட்விஸ்ட்! எப்படியும் டோமியானோவைச் சுற்றி தான் கொலையாளி இருக்க முடியும் என்று போலீசார் தீவிரமாக நம்பிய நிலையில் அவரின் உறவினர்கள், நண்பர்கள்,அவர் வேலை செய்த இடம் என எல்லா இடத்திலும் விசாரணையை நடத்துகிறார்கள்.

இவற்றில் எல்லாரும் ஒரே மாதிரியாக சொன்ன விஷயம் டோமியானோ பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் என்பது தான். சிலர் அவன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தெரியாமல் வேறு திருமணம் செய்து கொண்டான் என்றார்கள். ஆனால் யாருக்கும் அந்த குடும்பத்தை பற்றிய தகவல் தெரிந்திருக்கவில்லை.

Image Courtesy

#9

#9

அந்த குடும்பத்தை தேட வேண்டும் என்று களத்தில் இறங்கினார்கள் போலீஸ். டோமியானோ பஸ் டிரைவராக பணியாற்றியவர் என்பதால் அவர் பஸ் ரூட்டில் தான் எங்கேனும் அந்த குடும்பத்தினர் இருப்பார்கள் என்று அந்த வழித்தடங்களில் இருப்பவர்களை விசாரித்தார்கள். கிட்டத்தட்ட 500 பெண்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டு டோமியானோ குறித்து விசாரிக்கப்பட்டது.

கொலை வழக்கு என்று தெரிந்தால் வரமாட்டார்கள் என்பதால் வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. இருபது பெண்கள் வரை டோமியானோவை தெரியும் என்றார்கள். அந்த இருபது பேருக்கும் டி என் ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது. இவர்களில் எஸ்தர் அர்ஜுஃபி என்ற பெண்மணியின் டிஎன்ஏ ஒத்துப் போனது.

Image Courtesy

#10

#10

அப்போது எஸ்தருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தார்கள். மூன்று குழந்தைகளில் ஒரு இரட்டையர்களும் அடக்கம். எஸ்தர் குடும்பத்தினருக்கு டி என் ஏ பரிசோதனை எடுக்கப்பட்டது. இவற்றில் இரட்டையர்களின் டி என் ஏவும் ஆரம்பத்தில் துருப்பு சீட்டாய் கிடைத்த டோமியானோவுன் டி என் ஏவும் பக்காவாக ஒத்துப் போனது.

அப்படியென்றால் இந்த இரட்டையர்களின் உண்மையான தந்தை யார் என்று கேட்ட போலீசாரிடம் பதில் சொல்லாமல் அமைதியாகவே நின்றிருந்தார் எஸ்தர்.

Image Courtesy

#11

#11

பரிசோதனையில் இந்த குழந்தைகளின் தந்தை நீங்கள் அல்ல டோமியானோ தான் என்றார்கள் போலீசார். இவ்வளவு ஆண்டுகளாக இந்த குழந்தைகளும் எனக்கு பிறந்தவை தான் என்று நினைத்திருந்தேன் என்று சொல்லியிருக்கிறார் எஸ்தரின் கணவர்.

இனி மறைத்து எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்தவர் டோமியானோவுடன் காதலில் இருந்ததை ஒப்புக் கொண்டார். யாரென்றே தெரியாது துவக்கிய இந்த பயணத்தில் கடைசியில் இருவரிடம் வந்து நின்றிருக்கிறது. இங்கே இருக்கும் இந்த இரட்டையர்களில் யாரோ ஒருவன் தான் கொலைக் குற்றவாளி.

இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கடைசியாக இரட்டையர்களில் ஒருவரான மசிமோ என்பவன் தான் கொலைக்குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு பதிமூன்று வயது சிறுமியை கொன்ற குற்றத்திற்காக 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Interesting Story About a Police Investigation

Interesting Story About a Police Investigation
Desktop Bottom Promotion