Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
இந்தியாவில் நடந்த 9 ரணகொடூரமான கொலை வழக்குகள்!
இன்று இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்டு வரும் கொலை வழக்கு சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கு. அதிகாலையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் போதே பலர் முன் நடந்த இந்த கொலை வழக்கு பலதரப்பட்டவர்களை திகைக்க வைத்துள்ளது.
ஊடகம், சமூக ஊடகம், பொது மக்கள், போலீஸார் என அனைவரும் இந்த குற்றவாளியை கண்டுபிடித்து மிக கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என காத்திருக்கின்றனர். ஆனால் கொலையாளி இன்றும் கூட ஏதோ ஒரு தெருவில் ஒய்யாரமாக நடந்துக் கொண்டிருக்கின்றான்.
இந்தியாவில் இதுப் போன்ற கொலை வழக்கு ஒன்றும் புதியதல்ல, இது முதலாவதும் அல்ல. பல வருடங்களாக இது போன்ற கொலை வழக்குகள் சர்வசாதாரணமாக பதிவாகிக் கொண்டே தான் இருக்கிறது. அதில், மிக கொடூரமாக நடந்த கொலை சம்பவங்கள் பற்றி இங்கு காணலாம்...

நிர்பயா கற்பழிப்பு வழக்கு!
டெல்லியில் கடந்த 2012 ஆண்டு நடந்த மறக்க முடியாத இந்தியாவையே பதைபதைக்க வைத்த கேங் ரேப் வழக்கு. இந்தியர்களை அனைவரையும் பெண் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை, கவனம் செலுத்த வைத்த வழக்கு. பேருந்தில் வைத்து சற்றும் ஈவிரக்கமற்ற வகையில் நடந்த சம்பவம்.

ஜிஷா கொலை வழக்கு
கடந்த ஏப்ரல் மாதம் கேரளா மாநிலத்தில் நடந்த சம்பவம். கேரளாவின் தேர்தல் நேரத்தில் பெரிதாக அடிபட்ட வழக்கு. கேரளா மாநிலத்தையே உலுக்கியது இந்த வழக்கு என கூறலாம்.

சுவாதி கொலை வழக்கு
சென்னையை சேர்ந்த ஐ.டி ஊழியரான சுவாதி எனும் இளம் பெண் சில நாட்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் அதிகாலை அடையாமல் தெரியாத நபரால் படுகொலை செய்யப்பட்டார். இவர் ரயிலுக்காக காத்திருந்த போது இந்த துயர சம்பவம் நடந்தது.

உமேஷ் - கொலை வழக்கு
தொடர் கற்பழிப்பு குற்றவாளியான இவன், கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவன். பல பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்ட இந்த நபர், மிலிட்டரி கமேண்டர்-ன் மகளை கற்பழித்தது, திருட்டு, கொலை என கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களை சேர்ந்த 20 பெண்களை துன்புறுத்தியுள்ளார். இவருக்கு 2006-ம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டது.

சூர்யநெல்லி கற்பழிப்பு வழக்கு
1996-ல் 16 வயது இளம் பெண்ணை 40 நாட்கள் பல்வேறு ஆண்கள் சேர்ந்து கற்பழித்த வழக்கு. இந்த பெண் கேரளாவின் சூர்யநெல்லி எனும் இடத்தை சேர்ந்தவர். காதலனுடன் வலுக்கட்டாயமாக வீட்டைவிட்டு வெளியே கூட்டிவரப்பட்ட போது அப்பெண், வழியில் மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியை வெட்டி கொன்ற வழக்கு
சோம்நாத் பரிதா என்பவர் தனது மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்றார். இவர் ஓய்வுபெற்ற மருத்துவர் ஆவார். மிகவும் கோபக்காரரான இவர், தனது மனைவியை 300 துண்டுகளாக வெட்டி 22 பெட்டிகளில் போட்டு வைத்திருந்தார்.

நிதாரி வழக்கு, நொய்டா
மொனிந்தர் சிங் பந்தேர் எனும் தொழிலதிபர் தனது ஊழியர் உடன் சேர்ந்து செய்த மிக கொடூரமான குற்ற வழக்கு இது. நிதாரி எனும் இடத்தில் தொடர்ந்து சிறுமிகள் காணாமல் போய் வந்தனர். ஓர் நாள், அவர்களது பிணங்கள் சாக்கடை தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் 2005-2006-ம் ஆண்டில் நடந்தது. பந்தேர் தனது ஊழியரை வலியுறித்து சிறுமிகளை கடத்தி, துன்புறுத்தி துண்டுகளாக வெட்டி கொன்றுள்ளார். சி.பி.ஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குற்றவாளிகளுக்கு, நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

நொய்டா இரட்டை கொலை வழக்கு
2008-ம் ஆண்டு, மே 15-16 இரவன்று 14 வயது ஆருஷி தல்வார் மற்றும் 45 வயது ஹேமராஜ் (உதவிக்கு பணியமர்த்த பட்ட நபர்) என்ற இருவர் ஆருஷியின் வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தனர். முதலில் ஹேமராஜ் தான் கொலையாளி என போலிஸ் கருதியது. ஆனால், மறுநாள் காலை தான் ஹேமராஜ் உடல் மாடியில் கண்டெடுக்கப்பட்டது.
பணியாட்கள், பெற்றோர் மீது சந்தேகம் கொண்ட போலிஸ், கடைசியில் ஆருஷியின் பெற்றோர் தான் குற்றவாளிகள் என நிரூபணம் செய்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்றளவில் மர்மம் நீடிப்பதாக சில கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது.

நரமாமிச வழக்கு
ராம் நிரஞ்சன் என்பவர் தான் கொன்ற நபர்களை சமைத்து உண்டு வந்த வழக்கு. கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளார். மிக நட்புடன் பழகி, தனது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று இந்த கொலைகளை செய்துள்ளான் ராம் நிரஞ்சன்.
நிரஞ்சனும் அவனது தம்பியும் சேர்ந்து 14 கொலைகள் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தான் கொன்ற நபர்களின் மண்டை ஓட்டை ஏதோ வெற்றி கோப்பைகள் போல அடுக்கி வைத்திருந்தான் நிரஞ்சன். இவனுக்கு 2012-ம் ஆண்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.



Click it and Unblock the Notifications











