1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீரி புலாவை செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்

Posted By:

Kashmiri Pulao Recipe in Tamil: மதியம் டக்குனு சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? அதேசமயம் வித்தியாசமா மற்றும் சுவையா ஒரு உணவை சமைக்க விரும்புகிறீர்களா? அப்படினா உங்களுக்கான பதிவுதான் இது. வழக்கமான பிரியாணி அல்லது தக்காளி சாதம் சாப்பிட்டு போரடித்து விட்டதா? ஆம் எனில் இந்த அட்டகாசமான காஷ்மீரி புலாவை ட்ரை பண்ணி பாருங்க.

Kashmiri Pulao Recipe How to Make at Home in Tamil

இது வழக்கமான புலாவ் போலவோ அல்லது தக்காளி சாதம் போலவோ நிச்சயம் இருக்காது. அதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் பொருட்களும், இது சமைக்கப்படும் முறையும்தான். முக்கியமாக காரம் இல்லாத இந்த புலாவ் உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். வட இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த புலாவை செய்வது மிகவும் ஈஸியானதும் கூட.

உங்களுக்கு இந்த காஷ்மீரி புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஷ்மீரி புவாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் பாஸ்மதி அரிசி
- 2 ஸ்பூன் நெய்
- 2 ஸ்பூன் முந்திரி
- 2 ஸ்பூன் பாதாம்
- 2 ஸ்பூன் உலர் திராட்சை
- 1 இன்ச் பட்டை
- 1 கருப்பு ஏலக்காய்
- 5 கிராம்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 பிரியாணி இலை
- 1 வெங்காயம் ( மெல்லியதாக நறுக்கியது)
- 1 இன்ச் இஞ்சி (துருவியது)
- 1 ஸ்பூன் சோம்பு
- ½ ஸ்பூன் ஏலக்காய் தூள்
- 2 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- சிறிது குங்குமப்பூ இழைகள்
- சிறிது மாதுளை முத்துக்கள்

செய்முறை:

- முதலில், ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யை சூடாக்கி, அதில் 2 ஸ்பூன் முந்திரி, 2 ஸ்பூன் பாதாம் மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.

- பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து தனியாக வைக்கவும்.

- மொறுமொறுப்பாகும் வரை மிதமான தீயில் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

- அதே நெய்யில் 1 இன்ச் பட்டை, 1 கருப்பு ஏலக்காய், கிராம்பு, 1 ஸ்பூன் சீரகம் மற்றும் 1 பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்க்கவும். வாசனை வரும் வரை வதக்கவும்.

- பின்னர் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் 1 அங்குல இஞ்சியைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- வெங்காயம் வதங்கியதும் 1 ஸ்பூன் சோம்பு மற்றும் ½ ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக வதக்கவும்.

- அதன்பின், 2 கப் தண்ணீர், 1 கப் பாஸ்மதி அரிசி மற்றும் 1 ஸ்பூன் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.

- பின்னர் சிறிது குங்குமப்பூ இழைகளைச் சேர்த்து, மூடி வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

- அரிசி நன்றாக வெந்ததும், வறுத்த பருப்பு வகைகள் மற்றும் சில மாதுளை விதைகளைச் சேர்த்து, 5 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.

- இறுதியாக, மேலே சிறிதளவு உரித்த மாதுளையை தூவினால் சுவையான காஷ்மீரி புலாவ் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Saturday, July 11, 2026, 15:04 [IST]
Desktop Bottom Promotion