For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2014 பொது தேர்தல் குறித்த சில திகைப்பூட்டும் உண்மைகள்!

|

இன்றைய தேர்தல் ரிசல்ட் நிச்சயம் வரவிருக்கும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல மாநில தேர்தலில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த பா.ஜ.கவின் தாக்கம், நடந்துக் கொண்டிருக்கும் ஐந்து மாநில தேர்தலில் குறைந்து காணப்படுவது, அடுத்த வரும் பொதுத்தேர்தலில் அந்த கட்சியின் வாக்கு செல்வாக்கில் பெரும் சரிவு / தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Interesting Facts to Know About 2014 General Elections!

Image Source: Google

சரி! 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க இன்னும் சரியாக நான்கைந்து மாதங்கள் தான் இருக்கின்றன. தேர்தல் என்றாலே பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, வெற்றித் தோல்வி என்ற நிலைகளை கொண்டது தான். கடந்த 2014ம் நடந்த தேர்தலில் நாம் பெரிதாக கவனிக்காமல்விட்ட சில திகைப்பூட்டும் தேர்தல் சார்ந்த உண்மைகளை இந்த தொகுப்பில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கடந்த 2014ம் ஆண்டு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் 9 இலட்சத்து 19 ஆயிரத்து 452 வாக்கு அளிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

#2

#2

2014ம் ஆண்டு நடந்த பொது தேர்தலின் போது 17, 20, 080 கண்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் 18, 78, 306 எலக்ட்ரானிக் வாக்கு அளிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

#3

#3

அருணாச்சல் பிரதேசத்தின் டிபாங் பள்ளத்தாக்கில் (Dibang Valley) வாக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சிகளும் ஏறத்தாழ 10ல் இருந்து 46 கி.மீ நடந்தே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#4

#4

2014ம் ஆண்டு நடந்த பொது தேர்தலின் போது, டாக்டர் கே. பத்மராஜன் என்பவர் 159வது முறை இந்திய அரசு தேர்தலில் போட்டியிட்டு சாதனை படைத்தார்.

Image Source

#5

#5

நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் தந்தையும் இந்திய அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு நடந்த பொது தேர்தலின் போது தனது சொத்து மதிப்பாக, 131.74 கோடிகள் என்ற கோப்புகளை தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், 2009ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, தனது சொத்து மதிப்பு என வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே கோப்புகள் தாக்கல் செய்திருந்தார். ஆக, இடைப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் சத்ருகன் சின்ஹாவின் சொத்து மதிப்பு 116.73 கோடிகள் உயர்ந்துள்ளன.

#6

#6

மைசூர் பெயின்ட்ஸ் & வார்னிஷ் லிமிட்டட் நிறுவனத்தில் இருந்து 2014ம் ஆண்டுக்கான பொது தேர்தலுக்காக ஏறத்தாழ 20, 140 லிட்டர் தனித்துவம் வாய்ந்த வைல்ட் நிற இன்க் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

#7

#7

2014ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் ஆறு தேசிய கட்சிகள் போட்டியிட்டன. மாநில கட்சிகள் அந்தஸ்து வகிக்கும் 47 கட்சிகளில் 39 கட்சிகளும், அங்கீகரிக்கப்படாத 1634 கட்சிகளில் 419 கட்சிகளும் போட்டி இட்டன.

#8

#8

2014ம் ஆண்டு மொத்தம் 543 இடங்களில் பொதுத்தேர்தல் நடந்தது. இந்த இடங்களுக்கு மொத்தம் 8,251 போட்டியாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இதில் 7,578 ஆண்கள், 668 பெண்கள் மற்றும் 5 திருநங்கைகள். இவர்களில் 482 ஆண்களும், 61 பெண்களும் வெற்றிக் கண்டனர்.

#9

#9

கடந்த 2014ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 81.45 கோடி இந்திய பிரஜைகளுக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தது. இதில் 28, 314 பேர் தங்களை மாற்று பாலினத்தவர்களாக பதிவு செய்திருந்தனர். இவர்களை தேர்தல் ஆணையம் Others பிரிவில் சேர்த்திருந்தது.

#10

#10

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து தேர்தல் வரையிலும் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளாராக நிறுத்தப்பட்டு வென்ற மோடி அவர்கள் 437 பேரணிகள், மற்றும் 5827 பொது விழாக்களில் கலந்துக் கொண்டிருந்தார். மேலும், 25 மாநிலங்களில் ஏறத்தாழ மூன்று இலட்சம் கி.மீ தூரம் பயணம் மேற்கொண்டிருந்தார்.

#11

#11

ராகுல் காந்தி ஏறத்தாழ 1,65,000 கிமீ. சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். மற்றும் 2013 செப்டம்பர் மாதத்தில் இருந்து இவர் 250க்கும் மேற்பட்ட பேரணிகளில் கலந்துக் கொண்டிருந்தார்.

#12

#12

15 லோக் சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களில் 78% பேர் இளங்கலை, முதுகலை மற்றும் டாக்டர் பட்டம் படித்தவர்கள். இதில் குறிப்பாக மனோகர் பரிகார், ஐ.ஐ.டி. பாம்பேவில் உலோகவியல் (metallurgical) என்ஜினியரிங் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#13

#13

கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பதிவான நோட்டாவின் சதவிதம் 1.1% ஆகும். இதன் எண்ணிக்கை என்று பார்க்கும் பொழுது, 60 இலட்சம் வாக்குகளுக்கும் மேல் பதிவாகி இருக்கலாம் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் மூலம் அறியப்படுகிறது.

#14

#14

பனேஜ், கிர் எனும் இடத்தில் நடந்த வாக்கு பதிவில் மஹாந்த் பாரத் தாஸ் தர்ஷன் தாஸ் என்ற ஒரே ஒரு நபர் மட்டுமே வாக்கு பதிவு செய்தார். அந்த பகுதியில் ஆசிய சிங்கங்கள் காப்பகத்தில் இவர் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். இவரது ஒரே ஒரு வாக்கினை பதிவு செய்ய அங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts to Know About 2014 General Elections!

Here we have listed some interesting facts to know about 2014 General elections. Lets, check it out.
Story first published: Tuesday, December 11, 2018, 11:29 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more