For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சதித்திட்டங்களின் ராணி என்றழைக்கப்படும் உலகின் முதல் பெண் பேரரசி

|

உலகம் முழுவதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சர்வாதிகாரிகள் மக்களை கொடுமைப்படுத்தி ஆண்டுகொண்டுதான் இருந்தனர். ஆனால் இந்த சர்வாதிகாரிகள் பெரும்பாலும் ஆண்களாக மட்டும்தான் இருப்பார்கள் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. சில பெண்களும் சர்வாதிகாரிகளாக இருந்து கொடுங்கோலாட்சி நடத்தித்தான் வந்திருக்கின்றனர் வரலாற்றில்.

interesting facts about first woman emperor of china

" இரக்கமற்ற" ," சதிபுரிவது "போன்ற வார்த்தைகளுக்கு மிகவும் பொருத்தமான பெண் யாரென்றால் சீனாவின் முதல் பெண் பேரரசி வூ ஜெயின்தான். அதிகாரத்திற்கு வருவதற்காக இவர் செய்த கொடுஞ்செயல்கள் இவரை சீனாவின் வரலாற்றில் மிகமுக்கியமானவராக மாற்றியுள்ளது. " சதித்திட்டங்களின் ராணி " என்று வரலாற்று ஆய்வாளர்களால் அறியப்படும் இந்த ராணியை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படிப்பு

படிப்பு

வூ ஜெயின் 642ல் சீனாவில் இருந்த ஒரு வசதியான, அரசாங்கத்தில் மிகமுக்கிய பொறுப்பில் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரின் தந்தையின் செல்வாக்கின் காரணமாக அந்த காலத்தில் மற்ற பெண்களுக்கு கிடைக்காமல் இருந்த உயரிய கல்வி இவருக்கு கிடைத்தது. அவரது 14வது வயதில் டைசங் பேரரசரிடம் இருந்து கேரின் என்னும் பட்டம் பெற்றார். இவர் " மெய் - நியாங் " என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அதன் பொருள் " வசீகரமானவர் " என்பதாகும். மேலும் இவர் மன்னரின் பாலியல் இச்சைகளை தீர்த்து வைக்கும் கான்குபைன் ஆகவும் மாறினார்.

மன்னரின் உதவியாளர்

மன்னரின் உதவியாளர்

கலை மற்றும் இசை மீது அவருக்கு இருந்த ஆர்வம் அவரை மற்ற பெண்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டியது. அவரின் புத்திகூர்மையால் டைசங் பேரரசரின் உதவியாளராக 10 ஆண்டுகள் வேலை செய்தார். அதனால் அவரால் மன்னருடன் அதிக நேரம் செலவிட முடிந்தது, அரசாங்கத்தின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.

மன்னர் மகனுடன் உறவு

மன்னர் மகனுடன் உறவு

மன்னர் டைசங் இறந்த பிறகு அவர்களின் கலாச்சாரத்தின் படி மன்னரின் கான்குபைன்கள் தலையை மொட்டை அடித்துக்கொண்டு துறவறம் கொள்ள வேண்டும். ஆனால் வூ மற்ற கான்குபைன் போல இருக்க விரும்பவில்லை. அவர் அரணமானயில் இருந்தபோது மன்னரின் மகனான லி ஜி உடன் மிகுந்த அன்பு பாராட்டினார். எனவே லி ஜி தன் தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்த கோவிலுக்கு வந்தபோது அவனிடம் பேசி, மயக்கி தன்னை மீண்டும் அரண்மனைக்கு கூட்டிச்செல்லும்படி கேட்டார். இந்த சூழ்நிலையில் அப்போது அரசியாக இருந்த வாங் இதனை கவனித்தார். வாங்கிற்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லாதது அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. எனவே அரசி வாங் அனைத்து அதிகாரத்தையும் கையிலெடுத்தார். வூ அரண்மைக்கு வந்த பிறகு அவர் இரண்டாவது கான்குபைனாக நியமிக்கப்பட்டார்.

குழந்தைகள்

குழந்தைகள்

லி ஹாங், லி சியான் என்னும் இரண்டு மகன்களை பெற்ற பிறகு வூ ஜெயினுக்கு ஒரு மகள் பிறந்து இறந்துவிட்டது. உடனே இதற்கான பழியை அரசி வாங் மீது சுமத்தினார் வூ. அவரின் பொறாமைதான் மகள் இறக்க காரணம் என்று பழிசுமத்தினார். அதோடு இல்லாமல் வாங் மற்றும் அவரது தாயை சூனியக்காரிகள் என்று கூறி அவர்களை அரணமனையை விட்டு வெளியேறும்படி செய்தார். அவர்கள் வெளியேறிய பின் அவர்களை கொல்லவும் உத்தரவிட்டார். வாங் மற்றும் அவரது தாயார் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த பெண் குழந்தையை கொன்றது வூ தான் என்று பின்னாளில் தெரியவந்தது. அரசியவதற்காக தான் பெற்ற மகளையே கொன்று அந்நாட்டின் அரசியனார் வூ.

MOST READ: பெண்ணுறுப்பில் வைக்கப்பட்ட காப்பர்-டி சரியா இருக்கான்னு எப்படி சரிபார்ப்பது

தொடர்கொலைகள்

தொடர்கொலைகள்

அரசியான பிறகு வூ ஒரு ரகசிய படையை உருவாக்கினார். அப்படையின் வேலையே வூ ஜெயினை எதிர்ப்பவர்களையும், அவரை ராணியாக ஏற்றுக்கொள்ளாதவர்களையும் கொல்வதுதான். இதற்கு அரச குடும்பத்தினரும் விதிவிலக்கல்ல. வூ ஜெயினை ராணியாக ஏற்றுக்கொள்ளாத மன்னர் டைசங்கின் மைத்துனர் ஜங்க்ஷன் வுஜி, வூ தற்கொலைக்கு தூண்டப்பட்டு உயிரை விட்டார்.

அரசபொறுப்புகள்

அரசபொறுப்புகள்

மன்னர் காவ்ஸோங் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவுடன் பெரும்பாலான அரசபொறுப்புகள் வூ கையிற்கு வந்தது. அரசவை முழுவதும் வூ கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதனை விரும்பாத ஷங்குனான் யேய் ராணியை பதவியில் இருந்து விலக்க எண்ணினார். ஆனால் அது மிகதாமதம் ஏனெனில் அவர் நினைத்து முடிப்பதற்குள் அவர் ராணியின் ரகசிய படையால் கொல்லப்பட்டார்.

புதிய மன்னர்

புதிய மன்னர்

மன்னர் காவ்ஸோங் இறந்த பிறகு வூ அவரின் மூத்த மகனை அரசனாக்கினார். ஆனால் அவர் அவரின் மனைவியின் கட்டுப்பாட்டில் இருந்தார். அரசின் அனைத்து முக்கிய பொறுப்புகளிலும் அவர் மனைவியின் உறவினர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதனை விரும்பாத வூ தன் மூத்த மகனை அரியணையில் இருந்து இறக்கிவிட்டு இளைய மகனை அரியணையில் அமர்த்தினார். இளைய மகன் அரசனாக இருந்தாலும் அவரை பொம்மையாக வைத்து ஆட்சியை நடத்தியது வூ தான் பின்னர் அவரையும் பதவியை விட்டு இறக்கிவிட்டு தானே பேரரசியாக பதியேற்றுக்கொண்டார். ஜெயின் என்னும் பெயரை தன் பெயருடன் இணைத்துக்கொண்டார். அதன் பொருள் வானத்தின் அரசர் என்பதாகும்.

பேரரசி வூ

பேரரசி வூ

பேரரசியாக பதவியேற்ற பின்னும் வூ ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் கவனமாக இருந்தார். தன்னை எதிர்ப்பவர்களை தன் ரகசிய படை கொண்டு " கவனித்தார்". அவரது ஆட்சியை நிலைப்படுத்த வூ குறியீடுகள் மற்றும் நல்ல சகுனங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னை ஓர் வாழும் புத்தராக நினைத்துக்கொண்டிருந்தார் வூ.

பாலியல் தொடர்புகள்

பாலியல் தொடர்புகள்

தனது வயதான காலத்தில் கூட வூ பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார். ஆரம்பத்தில் ஹூய்யீ என்னும் போலி துறவியுடன் தொடர்பில் இருந்தார். இது அரசவையில் இருந்த யாருக்கும் பிடிக்கவில்லை. அவர் சென்ற பிறகு மன்னரின் சகோதரர்களுடன் தொடர்பில் இருந்தார். அந்த நாட்டின் முழுமையான அதிகாரமும் கையில் இருந்த போதிலும் அவர்கள் மீதான பாலியல் இச்சைகள் அவரின் பொறுப்புகளை மறக்கச்செய்தது. இறுதியில் அந்தத் சகோதரர்கள் அரசவையில் இருந்தவர்கள் மூலம் கொல்லப்பட்டனர். வூ பதவி விலக கட்டாயப்படுத்தப்பட்டார். வூ ஜெயினின் மூத்த மகன் மன்னராக நியமிக்கப்பட்டார். இறுதியாக தன் 81 வது வயதில் வூ இறந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: history வரலாறு
English summary

interesting facts about first woman emperor of china

“Ruthless”, and “scheming” are only a few of the words that describe the first female emperor of China, Wu Zetian.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more