இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சந்தித்த அநீதிகள்! Wonder Women #010

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு பெண்கள் பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றளவும் தங்களுக்கு நேர்ந்த கொண்டிருக்கிற சமூக அவலங்களை எல்லாம் பெண்கள் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பலூனில் விந்தணுவை நிரப்பி பெண்கள் மீது அடிப்பதும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கும்பலாக சென்று பாலியல் வன்கொடுமை செய்வதும் என பாதுகாப்பற்ற சூழலில் தான் இன்றைக்கும் பெண்கள் இருக்கிறார்கள். இப்போதே இப்படியிருக்கும் போது, ஆரம்ப நாட்களை யோசித்துப் பாருங்கள் வீட்டை விட்டு பெண்கள் வெளியே வந்திருக்க முடியுமா என்ன?

பெண்களின் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியிருந்த அந்தக் காலத்திலேயே வெளியே வந்து சமூக புறக்கணிப்புகளை எல்லாம் தாங்கிக் கொண்டு வரலாற்று சாதனை படைத்த பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் கடந்த வந்த பாதை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் கடினமானாதாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கார்னிலியா என்ற பெண்மணி நிச்சயம் பெண்களுக்கு எல்லாம் ஓர் முன்னோடி என்றே சொல்லவேண்டும். மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் கார்னிலியா தான்.

1889 ஆம் ஆண்டு ஆக்ஸ்வேர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதல் பெண்ணும் இவர் தான். அதே நேரத்தில் இவர் இன்னொரு சாதனையையும் படைத்திருக்கிறார்.

Image Courtesy

#2

#2

பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் படித்த முதல் இந்தியரும் இவர் தான். அதோடு இன்னொரு உலக சாதனை படைத்திருக்கிறார். என்ன தெரியுமா ? பெண்களில் முதன் முதலாக சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றியது இவர் தான். இந்தியாவில் மட்டுமல்ல பிரிட்டன் ஆட்சி செய்த பகுதிகளிலேயே முதல் பெண் கார்னிலியா தான்.

Image Courtesy

#3

#3

வீட்டில் ஒன்பது குழந்தைகளில் ஒருவராக பிறந்தார் பின்னர் ஒரு பிரிட்டன் தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்டார். அப்போது ஃப்ரான்சினா என்ற பெண்மணி பெண்கல்வி தொடர்பாக குழந்தையாக இருந்த கார்னிலியா படிக்கும் பள்ளியில் வந்து பேசியிருக்கிறார்.

பெண்களுக்கு நடக்கிற அநீதிகளைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறார். அது கார்னிலியா மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Image Courtesy

#4

#4

கார்னிலியாவின் மூத்த சகோதரிகள் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் சேரத்துடித்தனர். கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது பெண்கள் யாரையும் இதுவரையில் பல்கலைக்கழகத்தில் சேர்த்ததில்லை அதனால் உங்களையும் சேர்க்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் நிச்சயம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று சபதமேற்கிறார் கார்னிலியா.

Image Courtesy

#5

#5

இறுதியாக பதினாறு வயதில் தன்னுடைய பள்ளிப்படிப்பை நிறைவு செய்த கார்னிலியா பல்வேறு போராட்டங்களைக் கடந்து பல்கலைக்கழகத்தில் சேருகிறார்.அங்கே இவருக்கு ஆங்கில இலக்கியம் ஒதுக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்திற்கு சென்று படிக்கிற முதல் பென் கார்னிலியா வகுப்பில் எக்கச்சக்கமான தொல்லைகளை சந்தித்தார்.

ஆரம்ப காலங்களில் பல்கலைக்கழங்கள், வகுப்பறைகள் எல்லாம் அவ்வளவு வசதி நிறைந்ததாக இருந்திருக்கவில்லை. உள்ளே நுழையும் போதிருந்தே வகுப்பில் இருப்பவர்கள் கார்னிலியாவை கேலி பேசி கிண்டலடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். தொடர்ந்து அவரை பாடம் கவனிக்க விடாமல் செய்வது அவர்களின் வாடிக்கையாக இருந்தது.

Image Courtesy

#6

#6

ஆறு ஆண்டு படிப்பு முடியும் போது, தன்னை கேலி பேசிய அனைவரையும் முட்டாளாக்கி பல்கலைக்கழகத்திலேயே முதல் ஆளாக தேறினார். முதல் மதிப்பெண் பெற்றிருப்பதால் இங்கிலாந்திருக்கு சென்று மேற்படிப்பு படிக்கலாம் என்ற கனவுடன் காத்திருந்தார் கார்னிலியா.

Image Courtesy

#7

#7

அவரது கனவை சிதைக்கும் விதமாக ஓர் அறிவிப்பு வெளியானது. என்ன தான் கார்னிலியா முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர் பெண்ணாக இருப்பதினால் பல்கலைக்கழகத்தின் முதல் மதிப்பெண் பெற்றவர் என்ற அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட மாட்டாது. அதனால் அவருக்கு எந்த உதவித் தொகையும் கிடைக்காது என்றார்கள்.

சுக்குநூறாக நொறுங்கித்தான் போனார் கார்னிலியா.

Image Courtesy

#8

#8

ஆனால் அவரது நம்பிக்கை வீண் போகவில்லை அன்றைக்கு வாழ்ந்த பிரமுகர்களான மேரி ஹோஹவுஸ்,அடிலெயிட் மேனிங்,ஃப்லோரன்ஸ் நைட்டிங்கேல், வில்லியம் வெட்டெர்பர்ன் ஆகியோர் தங்களது பணத்தை சேர்த்து கார்னிலியாவை ஆக்ஸ்வேர்ட் பல்கலைக்கழத்தில் படிக்க உதவி செய்தனர்.

Image Courtesy

#9

#9

இவ்வளவு போராட்டங்களை கடந்து வந்தவருக்கு மீண்டும் கதவு அடைக்கப்படுகிறது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நீங்கள் ஆங்கில இலக்கியத்தை வேண்டுமானால் படிக்கலாம் ஆனால் உங்களுக்கு சட்டம் படிக்க எல்லாம் அனுமதிக்க முடியாது என்றார்கள். காரணம் கேட்டத்தற்கு நீ யொரு பெண் என்பதைத் தாண்டி வேறெந்த காரணமும் இருக்கவில்லை.

Image Courtesy

#10

#10

இப்போது கார்னிலியாவிற்கு உதவ கல்வியாளரும் தத்துவஞானியுமான பெஞ்சமின் ஜோவெட் வருகிறார். பெண்களும் சட்டம் படிக்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குகிறார். அதன் படி ஆக்ஸ்வேர் பல்கலைக்கழகத்தில் இணைந்து சட்டப்படிப்பை படிக்கிறார் கார்னிலியா.

Image Courtesy

#11

#11

அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றுகிறார். தேர்வு எழுதும் போது, இவருடைய விடைத்தாளை மட்டும் திருத்த மறுக்கிறார்கள் தேர்வாளர்கள். காரணம் பெண். இவருடைய விடைத்தாளை திருத்தாமலே தேர்வில் மூன்றாம் நிலையாகத்தான் தேர்ச்சி பெற்றார் என்று சொல்லப்படுகிறது.

#12

#12

இத்தனை சங்கடங்களை கடந்து சட்டப்படிப்பை முடித்தாலும் அடுத்ததாக அப்போது அமலிலிருந்து ஒரு சட்டம் பெரும் துயரமாய் வந்து நின்றது. அப்போதிருந்த சட்டம் என்ன தெரியுமா? என்ன தான் பெண்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தாலும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அவர்கள் பட்டம் பெற முடியாது என்றது அந்த சட்டம்.

#13

#13

லண்டனில் இருந்த லீ அண்ட் பெம்பெர்டன் என்ற வழக்கறிஞர் அலுவலகத்தில் சேர்ந்து பணியாற்றினார். அப்போதே தனக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவியவர்களின் உதவியுடன் இப்போதும் லிங்கன் நூலகத்தில் சேர்ந்து படிக்க நினைத்தார்.

அப்போது பெண்கள் யாருமே நூலகத்திற்கு சென்று படிக்க அனுமதிக்கப்படவில்லை, அந்த தடையை உடைத்து நூலகத்திற்கு சென்று படிக்கிறார்.

#14

#14

பல போராட்டங்களுக்கு பிறகு பட்டம் பெற்று தான் கற்ற கல்வி இந்தியாவிலிருக்கும் அனைத்து பெண்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்குடன் இந்தியா திரும்புகிறார் கார்னிலியா. இவர் இந்தியா திரும்பிய 1894 ஆம் ஆண்டில் இன்னொரு பேரதிர்ச்சியை சந்திக்கிறார்.

#15

#15

மும்பை நீதிமன்றத்தில் இருந்த தலைமை நீதிபதி, பயிற்சி வழக்கறிஞராக யாரும் பெண்ணை நியமிக்ககூடாது என்று அறிவிக்கிறார். இந்தியாவிற்கு வந்து வழக்கறிஞராக வேண்டும் என்ற கார்னிலியாவின் கனவு மீண்டும் நசுக்கப்படுகிறது.

#16

#16

ஆக்ஸ்வேர்டில் படித்துக் கொண்டிருந்த பட்டமேற்படிப்பினை தொடர்வதை விடுத்து, மும்பை பல்கலைக்கழகத்தில் இணைந்து மீண்டும் சட்டப்படிப்பை படிக்கிறார். இதனால் மும்பை பல்கலைக்கழகம் தனக்கு பட்டம் வழங்கும் அதை வைத்து வழக்கறிஞராகலாம் என்பது கார்னிலியாவின் திட்டம்.

#17

#17

கார்னிலியாவைச் சுற்றியிருந்த யாவரும் அவரை படிப்பை தொடரவிடாமல் செய்ய என்னென்ன நாச வேலைகளைச் செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்கிறார்கள். அவர்கள் நினைத்தபடியே கார்னிலியா அந்த தேர்வில் தோற்கிறார். இல்லை தோற்க வைக்கப்பட்டார். தொடர்ந்து போராட ஆரம்பித்தார் கார்னிலியா

#18

#18

தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு பெண்ணை வழக்கறிஞராக்க முடியாது என்று உறுதியுடன் இருந்தது. ஆனால் அப்போதிருந்த அரசர்கள் அவ்வளவு எதிர்ப்பு காட்டவில்லை, மாறாக இவருக்கு மிகவும் சிறிய மற்றும் கேலிக்கூத்தான வழக்குகளை வாதாட அனுமதியளித்தார்கள். அப்படியென்ன கேலிக்கூத்தான வழக்கு தெரியுமா? அவற்றில் ஒன்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.

Image Courtesy

#19

#19

தன்னுடைய தோப்பிலிருந்த வாழைப்பழங்களை யானை திருடி சாப்பிட்டுவிட்டது என்று ஒருவர் புகார் அளித்திருந்தார். இதில் கார்னிலியா யானைக்கு ஆதரவாக வாதிட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அவர்கள் பொழுது போக்க, சிரித்து நக்கலடிக்க இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பது பின்னர் தான் தெரிந்தது.

#20

#20

1899 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தன்னை வக்கீலாக அங்கீகரிக்க வேண்டுமென்று சொல்லி போராடினார். ஒன்று கூட கார்னிலியாவின் ஆதரவாக நடக்கவில்லை ஆனாலும் கார்னிலியா மனம் தளரவில்லை.

அந்த நேரத்தில் தான் இந்த கொடுமை தனக்கு மட்டுமல்ல பெண் இனத்திற்கே இப்படியான இழிநிலை இருக்கிறது என்பதை உணர்கிறார்.

Image Courtesy

#21

#21

அப்போது, பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சி நடுங்கினார்கள். கணவனைத் தவிர பிற ஆண்களிடம் பேசுவது பெரும் குற்றமாக பார்க்கப்பட்டது. இதே அந்தப் பெண் தன்னுடைய கணவனை இழந்தவள் என்றால் அவ்வளவு தான். தந்தை, சகோதரன் உட்பட எந்த ஆணிடமும் பேசக்கூடாது.

இந்த சூழ்நிலையில் இப்படி தங்களுக்கு நேர்வது எல்லாம் அநீதி என்று எப்படி தெரியும் அவர்களுக்கு

Image Courtesy

#22

#22

அப்போது தான், இனி இந்த போராட்டம் எனக்காக அல்ல, இந்த பெண்களுக்காக என்று சபதமேற்கிறார் 1904 ஆம் ஆண்டு வைசிராயாக இருந்த லார்டு குர்சன் என்பவர் இந்தியாவின் செயலராக நியமிக்கப்படுகிறார். அப்போது, இந்தியாவில் இருக்கும் பெண்களுக்கு ஆதரவாக வாதாட பெண் வக்கீல் இருக்கலாம் என்று சட்டம் கொண்டுவருகிறார்.

Image Courtesy

#23

#23

இதுவரை காலம் கார்னிலியா நடத்திய போராட்டத்திற்கு பெரும் வெற்றி கிடைத்தது. இனி கார்னிலியா ஒரு வக்கீலாக செயல்படலாம். அடுத்த இருபது ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றினார் கார்னிலியா அந்த காலத்தில் 600க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறார்.

அப்போதே குழந்தைத் திருமணம், கைம்பெண்,சொத்துரிமை, போன்ற பல விஷயங்களை கையில் எடுத்திருக்கிறார்.

Image Courtesy

#24

#24

அப்போது சொத்துக்கள் இருக்கும் ஓர் ஆண் இறந்து விட்டால் அவனின் சொத்துக்களை பறிக்க, அவனது வாரிசான குழந்தையை உறவினர்களே கொல்வது வாடிக்கையாக இருந்தது. சர்வ சாதரணமாக இப்படியான கொலைகள் நடந்தன அதற்கு எதிராகவும் போராடினார் கார்னிலியா.

Image Courtesy

#25

#25

இவரது தொடர் உழைப்பு மற்றும் போராட்டம் காரணமாக 1924க்கு பிறகு பெண்கள் வெளியே வர ஆரம்பித்தனர். கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியில் சேர்ந்து 1929 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்து சென்று விட்டார் கார்னிலியா ஆனாலும் அடிக்கடி தான் இறந்த 1954 ஆம் ஆண்டு வரையில் இந்தியா வந்து சென்று கொண்டு தான் இருந்தார் கார்னிலியா.

இப்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரக்காற்றினை முதலில் சுவாசித்து, அது எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று போராடிய கார்னிலியா நிச்சயம் போற்றப்படக்கூடியவர் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse wonder women
English summary

Inspiring Story Of First Women Lawyer In India

Inspiring Story Of First Women Lawyer In India
Story first published: Sunday, March 4, 2018, 11:00 [IST]