For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசப்புல பார்க்க ஒரே மாதிரி ஜாடையில இருக்க தமிழ் நடிகைகள்!

By John
|

உலகத்துல ஒரே மாதிரி முக ஜாடையில ஏழு பேர் இருப்பாங்கன்னு நாம கேள்விப்பட்டிருப்போம். ஏன் ஒருசிலர நாமலே நேர்ல பாத்திருப்போம். உங்க வாழ்க்கையிலேயே நீங்க எங்கையாவது வெளியூர் இல்ல, வெளிநாடு போன சமயத்துல உங்க உறவினர், நண்பர்கள், கூட வேலை பண்றவங்க மாதிரியே முக ஜாடையில இருக்க யாரையாவது பார்த்து, வியந்திருக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?

Indian Actresses Looks A Like

இந்த முக ஜாடை ஒற்றுமை சாதாரண மக்கள் இடையே இருக்கும் போதே ஆச்சரியமா இருக்குன்னா, பிரபலங்கள் மத்தியில இருந்தா எப்படி இருக்கும். இதுல, ஆச்சரியம் என்னன்னா.. இந்த லிஸ்ட்ல பார்க்க போற பலர நமக்கு ஏற்கனவே நல்லா தெரியும். ஆனாலும், இவங்க பார்க்க அந்த நடிகை மாதிரி இருக்காங்களேன்னு நாம ஒப்பிட்டு பார்த்திருக்க மாட்டோம்.

ஏற்கனவே நம்ம தமிழ் போல்ட்ஸ்கை இணையத்துல "தமிழ் பிரபலங்களை போல் முக ஜாடை கொண்டிருக்கும் சாமானிய மக்கள்", "ஒரே மாதிரி தோற்றமளிக்க கூடிய ஹாலிவுட் vs இந்தியன் பிரபலங்கள்" லிஸ்ட் பார்த்திருக்கோம். அந்த வகையில இந்த தொகுப்புல நாம பார்க்க போறது ஒரே மாதிரி ஜாடையில இருக்க தமிழ் நடிகைகள்.

(குறிப்பு! அச்ச அசல் அப்படியே இல்லாட்டியும், சிலர் ஒரு கோணத்துல பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்கங்கிறத முன்கூட்டியே சொல்லிக்கிறோம் சாமியோவ்!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரம்யா நம்பீசன்!

ரம்யா நம்பீசன்!

பிட்சா முதல் சேதுபதி வரை விஜய் சேதுபதியுடன் இவர் ஜோடி சேர்ந்த படங்கள் வெற்றிப்படங்களாக தான் அமைந்துள்ளன.

குத்து ரம்யா!

குத்து ரம்யா!

குத்து படத்தின் மூலம் சிம்புவுடன் ஜோடி போட்டு, கவர்ச்சி ஆட்டம்ப்போட்டு, பொல்லாதவனுக்கு பிறகு, அரசியல் பிரவேசம் செய்த குத்து ரம்யாவும் ரம்யா நம்பீசனும் ஒரே மாதிரி ஜாடை கொண்டிருக்கிறார்கள். இவர்களது பெயரிலும் ரம்யா பொதுவாக இருக்கிறது.

ஷ்ருதி ஹாசன்!

ஷ்ருதி ஹாசன்!

உலக நாயகனின் மூத்த வாரிசு. இசை, பாடல், நடனம், நடிப்பு என அப்பாவை போலவே பன்முக திறமை கொண்டவர் ஷ்ருதி ஹாசன்.

பிக்பாஸ் யாஷிகா!

பிக்பாஸ் யாஷிகா!

துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களில் நடித்து, பிக்பாஸ் சீசன் இரண்டில் அதகளம் செய்த யாஷிகா கொஞ்சம் உடல் இளைத்தால் நிச்சயமாக பக்காவாக ஷ்ருதி ஹாசன் போலவே இருப்பார்.

 மீரா ஜாஸ்மின்!

மீரா ஜாஸ்மின்!

தனது துறுதுறு நடிப்பால் தமிழக ரசிகர்களை ரன் முதல் சண்டை கோழி வரை கட்டிப்போட்டவர் மீரா ஜாஸ்மின் நேப்பாளி படத்திற்கு சொந்த வாழ்வில் சில பிரச்சனை காரணமாக ஒதுங்கி இருந்தார். பிறகு போதாத காலம் இங்க என்ன சொல்லுது படத்தில் விடிவி கணேஷுடன் எல்லாம் ஜோடி சேர்ந்து நடித்தார்.

பூவிழி வாசலிலே சுஜிதா!

பூவிழி வாசலிலே சுஜிதா!

பூவிழி வாசலிலே படத்தில் நடித்த குழந்தை இன்றும் பலரால் மறக்க முடியாத ஒரு அழுத்தத்தை லாலா என்ற சொல்லில் ஏற்படுத்தி சென்றது. அந்த குழந்தை வேறு யாரும் இல்லை. இப்போது தமிழ் தொலைக்காட்சிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை சுஜிதா தான். மீரா ஜாஸ்மினும், சுஜிதாவும் பார்க்க ஒரே ஜாடை கொண்டிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்!

ஐஸ்வர்யா ராய் பச்சன்!

இது பலரும் அறிந்த ஜோடி தான். ஐஸ்வர்யா ராய் போலவே ஒரு களம் இறங்கினார். ஐஸ்வர்யா ராயை வைத்து படம் எடுக்க முடியாதவர்கள், இவரை வைத்து படம் எடுத்தனர்.

ஸ்னேஹா உல்லல்!

ஸ்னேஹா உல்லல்!

ஸ்னேஹா உல்லல் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், திறமை என்று ஒன்று இருக்கிறது அல்லவா... அதனால், இவர் குறுகிய காலக்கட்டத்தில் காணமல் போனார்.

மதுமிதா!

மதுமிதா!

யோகி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தவர் மதுமிதா. பிறகு இவர் நாடகங்களில் கூட நடித்தார்.

ரச்சிதா!

ரச்சிதா!

ரச்சிதா என்பதை காட்டிலும் மீனாட்சி என்றால் தான் அனவைருக்கும் தெரியும். மதுமிதாவும், ரச்சிதாவும் ஒரே மாதிரியான முக ஜாடை கொண்டிருக்கிறார்கள்.

காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால்!

பொம்மலாட்டம் மூலம் தமிழுக்கு பாரதி ராஜாவால் அழைத்துவரப்பட்டவர் காஜல். தற்போது தென்னிந்தியா சினிமாவின் முதன்மை நாயகியாக இருக்கிறார்.

பிரனிதா!

பிரனிதா!

காஜலும், பிரனிதாவும் நேரடியாக பார்த்தால் ஒரே மாதிரி இல்லாவிட்டாலும், ஒருசில கோணங்களில், பார்பதற்கு இருவரது முக ஜாடையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

நஸ்ரியா!

நஸ்ரியா!

நேரம் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமான நஸ்ரியா, ராஜா, ராணிக்கு பிறகு தமிழ் திரைப்படங்களில் அதிகம் காணப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாகிவிட்டு. பிறகு இப்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.

வர்ஷா!

வர்ஷா!

வர்ஷா டப்ஸ்மேஷ் குயின் என்றே கூறலாம். இவர் பரவலாக நஸ்ரியா ஜெராக்ஸ் என்று தான் அழைக்கிறார்கள். இவர் இப்போது ஒருசில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாரா!

நயன்தாரா!

பல கஷ்டங்களை தாண்டி, தான் நம்பர் ஒன்னாக இருக்கும் போது திரை துறையில் இருந்து விலகி, பிறகு மீண்டும் வந்து நம்பர் ஒன் இடத்தை மட்டுமின்றி லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தையும் பிடித்திருக்கிறார் நயன்தாரா.

அகிலா கிஷோர்!

அகிலா கிஷோர்!

காஜல் அகர்வால் - பிரனிதா போலவே தான், நயன்தார - அகிலா கிஷோர் ஜோடியும். ஒருசில கோணங்களில் இவர்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரியாக தோற்றமளிக்கிறார்கள்.

திரிஷா!

திரிஷா!

ஜோடியில் அறிமுகமாகி இன்று வரை ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்தியா சினிமாவில் நடித்து வருகிறார் திரிஷா.

ரேஷ்மா!

ரேஷ்மா!

நடிகை ரேஷ்மா சில கோணங்களில் பார்பதற்கு நடிகை த்ரிஷா போல அச்ச, அசல் தோற்றமளிக்கிறார்.

கோபிகா!

கோபிகா!

ஆட்டோகிராப் திரைப்படம் மூலம் நன்கு பரிச்சயம் ஆனவர் கோபிகா. இவர் தேசத்தை சேர்ந்த ஒருவரே பார்க்க இவரை போல இருக்கிறார்.

நவ்யா நாயர்!

நவ்யா நாயர்!

இவரும் சேரனால் தமிழில் நல்ல அடையாளம் பெற்றவர் தான். கோபிகா - நவ்யா நாயர் இடையே முக ஜாடை ஒத்துப்போகிறது.

அசின்!

அசின்!

பாலிவுட்டில் எப்படி ஐஸ்வர்யா ராய் - ஸ்னேஹா உல்லல் ஜோடி பரிச்சயமாக ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று அறியப்பட்டதோ. அப்படி தான் கோலிவுட்டில் இந்த ஜோடி.

பூர்ணா!

பூர்ணா!

பூர்ணா அறிமுகம் ஆனதில் இருந்தே அவரை அசினுடன் இப்பிட ஆரம்பித்தனர். இதுவே அவருக்கு ஒரு பெரிய தடையாகவும், முன்னேற முடியாமலும் போக காரணியானது.

வசுந்திரா தாஸ்!

வசுந்திரா தாஸ்!

பிரபல பாடகி வசுந்திரா தாஸ் தமிழில் ஓரிரு படங்களில் மட்டும் தான் நடித்தார். அவர் அஜித்துடன் சிட்டிசன் மற்றும் கமலுடன் ஹேராம்.

கிரண்!

கிரண்!

ஜெமினி மூலம் அறிமுகமாகி தமி ரசிகர்களை ஓ போடா வைத்த கிரண், வில்லன், வின்னர், அன்பே சிவம் படங்களுக்கு பிறகு பெரிதாக திறமைக் காட்ட முடியாமல் போனது. வசுந்திரா தாஸ், கிரண் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்பது பலரும் அறியாத காம்போ.

சௌந்தர்யா!

சௌந்தர்யா!

அரசியல் பிரச்சாரத்தின் போது எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக தென்னிந்திய திரையுலகம் இழந்த ஒரு பெரும் நடிகை சௌந்தர்யா.

நித்யா மேனன்!

நித்யா மேனன்!

தற்போது தனக்கு பிடித்த கேரக்டர்களில் மட்டும் நடித்து திறமை காட்டி வரும் நித்யா மேனின் ஒரு சாயலில் மறைந்த நடிகை சௌந்தர்யா போல தான் இருக்கிறார்.

சமந்தா!

சமந்தா!

திருமணத்திற்கு பிறகும் திறமை காட்டும் நடிகைகள் வெகு சிலரே. அதிலும், நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட்டாவது எல்லாம் அபூர்வம். அதை செயல்ப்படுத்தி வருபவர் சமந்தா.

அஸ்ரிதா!

அஸ்ரிதா!

உதயம் என்.எச் 4 படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஸ்ரிதா. இவர் சமந்தாவை விட கொஞ்சம் கொழுகொழு மற்றும் உயரம் ஜாஸ்தி. மத்தபடி, இவர்கள் இருவரின் முக ஜாடை ஒரே மாதிரியானது தான்.

சிந்து மேனன்!

சிந்து மேனன்!

ஈரம் படத்தில் நீர் பேயாக வந்து மிரட்டியவர். பிறகு பெரிதாக திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையவில்லை.

நந்திதா!

நந்திதா!

அட்டைக்கத்தி, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வெற்றிப் படங்களில் நடித்தாலும். தொடர்ந்து நல்ல கதாப்பாத்திரங்கள் அமையாததால் தமிழில் பெரிதாக காலூன்ற முடியாமல் போன நந்திதா மற்றும் ஈரம் சிந்து மேனன் பார்க்க ஒரே முக ஜாடை கொண்டிருக்கிறார்கள்.

இலியானா!

இலியானா!

கொடியிடை அழகி என்று இவரை தவிர வேறு யாரையும் குறிப்பிட முடியாது. தெலுங்கு, இந்தி, தமிழ் என ஒரு கலக்கு, கலக்கியவர். இப்போது இவரை அதிகம் தன் புகைப்படக் கலைஞர் காதலருடன் அதிகம் இன்ஸ்டாவில் தான் காண முடிகிறது.

ரெஜினா!

ரெஜினா!

உடல் வாகிலே இருவரும் இருவேறு துருவங்களாக இருந்தாலும். முக ஜாதியில் இலியான ரெஜினா ஒரே மாதிரியாக தான் இருக்கிறார்கள்.

தீபிகா படுகோனே!

தீபிகா படுகோனே!

கோச்சடையான் மூலம் ஒரு பெரும் திருப்பம் எதிர்பார்க்கப்பட்ட தீபிகாவிற்கு, அதில் நடித்தது நான் தானா எனும் அவர சந்தேகிக்கும் அளவிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

அமலா பால்!

அமலா பால்!

அட! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குன்னு சிலருக்கு தோணலாம். ஆனா, மெய்யாலுமே பாருங்களேன்... சில கோணங்கள்ல தீபிகா, அமலா பால் பார்க்க ஒரே மாதிரி தானுங்க இருக்காங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Actresses Looks A Like

Here we have listed some Indian actresses who were actually look a like each other. Lets chekc it out this interesting photo story!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more