அடேங்கப்பா! பார்க்க ஒரே மாதிரி இருக்கும் ஹாலிவுட் - இந்திய நடிகர், நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சில சமயங்களில் பிரபல அரசியல் தலைவர்கள், நடிகர் - நடிகைகளை போல உருவ தோற்றம் கொண்டுள்ள சாமானிய மக்களின் படங்கள் நாம் கண்டுள்ளோம். ஆனால், கனகச்சிதமாக பிரபலங்கள் இருவரே பார்பதற்கு ஒரே மாதிரி இருப்பது கொஞ்சம் ஆச்சரியத்தை அளிக்க தான் செய்யும்.

தல அஜித் குமார் விவேகம் படத்தின் ஆரம்ப காட்சி ஷூட்டிங்கில் இருந்த போது முதன் முதலில் ஒரு படம் வெளியானது. அந்த படத்தில் அஜித் அணிந்திருந்த அந்த கமாண்டோ உடையிலும் பார்க்க கச்சிதமாக சில்வெஸ்டர் ஸ்டாலோன் போலவே இருந்தார்.

Hollywood - Bollywood: Insane Look Alike Celebrities!

சில ஊடகங்கள் சில்வெஸ்டர் ஸ்டாலோன் தான் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார் என செய்திகளும் வெளியிட்டன.

அதே போல, நடிகர் விக்ராந்த் நடிக்க வந்த போது, பார்ப்பதற்கு அப்படியே தளபதி விஜய் போல இருக்கிறார் ஆச்சரியம் அடைந்தனர். இதோ! இந்த வகையில் ஹாலிவுட் - பாலிவுட் காம்போவில் பார்க்க ஒரே சாயலில் இருக்கும் நடிகர் நடிகைகள் சிலர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இலியானா - கீரா நைட்லி

இலியானா - கீரா நைட்லி

இந்திய நடிகை இலியானா மற்றும் ஆங்கில கீரா ஒருசில படங்களில் பார்க்க ஒரே மாதிரி இரிக்கிரார்கள். கீரா லண்டனை சேர்ந்த பிரிட்டிஷ் நடிகை ஆவார். இவர் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படத்தில் நடித்தவர் ஆவார். இலியானா தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் இந்திய நடிகை.

அலியா பட் - அரினா கிராண்டே

அலியா பட் - அரினா கிராண்டே

ஆலியா டியர் ஜிந்தகி டூ ஸ்டேட்ஸ் போன்ற படங்களில் நடித்தவர். அரினா ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகர் ஆவார். இவர் விக்டோரியஸ், ஸ்பின்-ஆப் , சாம் அன்ட் கேட் போன்ற படங்களில் நடித்துள்ளார். டேஞ்சரஸ் வுமன் மற்றும் மை எவ்ரிதிங் போன்ற பாடல் ஆல்பங்களில் பாடியுள்ளார்.

தியா மிர்ஸா - ஹீதர் கிரஹாம்

தியா மிர்ஸா - ஹீதர் கிரஹாம்

தியா மிர்சா மிஸ் ஆசியா பசிபிக் 2000 பட்டம் வென்றவர். இவர் ஹாலிவுட்டை சேர்ந்த ஹீதர் என்பவரை போலவே அச்ச அசல் தோற்றம் கொண்டுள்ளார். ஹீதர் ஃபெசிலிட்டி ஷக்வெல், ஆஸ்டின் பவர்ஸ்: தி ஸ்பை ஹூ ஷேக்டு மீ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ரன்பீர் கபூர் - ரியான் கோஸ்லிங்

ரன்பீர் கபூர் - ரியான் கோஸ்லிங்

ரன்பீர் கபூர் ரியான் போலவே முக தோற்றம் கொண்டுள்ளார். ரியான் கனடியன் நடிகர் ஆவர். இவர் இசை கலைஞர் ஈவா மேண்டேஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். முக்கியமாக இவர்கள் இவருடைய இதழ்கள் ஒரே மாதிரி இருக்கிறது என பார்ப்பவர்கள் கூறுகிறார்கள்.

ராம் கபூர் - ஷ்ரெக்!

ராம் கபூர் - ஷ்ரெக்!

ஷ்ரெக் என்பது டிஸ்னி படத்தில் தோன்றும் ஒரு அனிமேஷன் கதாபாத்திரமாகும். ராம் கபூரின் முகமும், இந்த ஷ்ரெக் பாத்திரத்தின் உருவமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

அடீல் - பியோனா

அடீல் - பியோனா

ராம் கபூர் - ஷ்ரெக் போல, அடீல் மற்றும் பியோனாவின் தோற்றமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. அடீல் ஒரு சாயலில் இளவரசி பியோனா கதாபாத்திரத்தை போல தான் இருக்கிறார்.

கிருட்டி சானோன் - சாரா கேனிங்

கிருட்டி சானோன் - சாரா கேனிங்

கிருட்டி ஹிந்தி சினிமாவை சேர்ந்த ரொமாண்டிக் நடிகை. ஹீரோபண்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தில்வாலே படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கனடியன் நடிகை சாராவை போல முக சாயலில் இருக்கிறார். சாரா தி வேம்பயர் டைரீஸ் தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீனா கபூர் - பாரிஸ் ஹில்டன்

கரீனா கபூர் - பாரிஸ் ஹில்டன்

கரீனாவின் சாதாரண தோற்றத்தில் உருவ ஒற்றுமை இருப்பது போல எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், இவர் ஒரு படத்தில் அணிந்திருந்த விக் தான், ஒருவேளை அந்த சிகை அலங்காரம் அல்லது ஹீர்கலரிங் செய்தால் கரீனா பார்க்க பாரிஸ் ஹில்டனை போலவே இருப்பாரோ என்ற எண்ணத்தை வரவழைக்கிறது.

சோபியா சவுதாரி - கிம் கர்தாஷியன்

சோபியா சவுதாரி - கிம் கர்தாஷியன்

சோபியா பிரிட்டிஷ்-இந்தியன் நடிகை, பாடகர் ஆவர். இவர் எம். டிவி நிகழ்சிகளில் பங்கெடுத்துள்ளார். பியார் கே சைட் எப்பெக்ட்ஸ், ஷாதி நம்பர் ஒன் போன்ற படங்களில்சோபியா நடித்துள்ளார். கிம் கர்தாஷியன் ஒரு புகழ்பெற்ற மாடல் ஆவார்.

ஆமிர் கான் - டாம் ஹாங்க்ஸ்

ஆமிர் கான் - டாம் ஹாங்க்ஸ்

ஹாங்க்ஸ் சேவிங் பிரைவேட் ட்ரைன், தி டா வின்சி கோட் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒருசில படங்களில் காண்கையில் அமீரும் ஹாங்க்ஸ்ம் ஒரே மாதிரி சாயலில் இருப்பது போல தெரிகிறது.

ஐஸ்வர்யா ராய் - சினேகா உல்லல்

ஐஸ்வர்யா ராய் - சினேகா உல்லல்

95% காண ஒரே மாதிரி இருப்பவர்கள் சினேகா உல்லலும் ஐஸ்வர்யா ராயும். ஏதோ கார்பன் செராக்ஸ் எடுத்து வைத்தது போல தான் இவர்கள் இருக்கிறார்கள்.

அக்ஷய் குமார் - ஷான் மைக்கேல்ஸ்

அக்ஷய் குமார் - ஷான் மைக்கேல்ஸ்

இதுவரை உங்களுக்கு இந்த சந்தேகம் வராமல் இருந்திருக்கலாம். இனிமேல் வரும். ஆம்! 2.O படத்தின் வில்லன் நடிகர் அக்ஷை குமார் போல தானே இருக்கிறார் ஷான் மைக்கல்ஸ்? இருவருடைய முக தோற்றமும் ஏறத்தாழ ஒரே மாதிரி தான் அமைந்திருக்கிறது.

அனுஷ்கா ஷர்மா - நாஜியா ஹாசன்

அனுஷ்கா ஷர்மா - நாஜியா ஹாசன்

பாகிஸ்தான் பாப் பாடகி நாஜியா ஹாசன் மற்றும் விராட் காதலியும் இந்தி பட நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காண ஒரே மாதிரி இருக்கிறார்கள். நாஜியா ஹாசன் டிஸ்கோ தீவானேன்,. அப்ஜைசா கொய் போன்ற பாடல்கள் பாடியுள்ளா.

அசோக் குமார் - எர்ரோல் ஃப்ளைன்

அசோக் குமார் - எர்ரோல் ஃப்ளைன்

ஹாலிவுட்டின் ஒரிஜினல் ப்ளேபாய் நடிகர் எர்ரோல் ஃப்ளைன் என்பார்கள். இவர் கேப்டன் பிளட், தி சீ ஹாவ்க் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பார்ப்பதற்கு இந்திய பழம்பெரும் நடிகர் அசோக் குமார் போலவே இருக்கிறார்.

அசின் - கைலா எவெல்

அசின் - கைலா எவெல்

இந்திய நடிகை அசின் மற்றும் ஆங்கில டிவி சீரியல் கைலா இருவரும் பார்க்க ஒரே முக சாயல் கொண்டுள்ளனர். கைலா தி போல்ட் அன்ட் தி பியூட்டிஃபுல் போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவ் ஆனந்த் - கிரேகோரி பெக்

தேவ் ஆனந்த் - கிரேகோரி பெக்

கிரேகோரி பெக் 1940-60களின் ஐகானிக் நடிகர் ஆவார். இவர் தி ஓமன், ரோமன் ஹாலிடேஸ், டு கில் எ மோகிங்பேர்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் பழம்பெரும் நடிகர் தேவ் ஆனந்தை போன்ற முக தோற்றம் கொண்டுள்ளார்.

டொமினிக் கூப்பர் - விராத் கோலி

டொமினிக் கூப்பர் - விராத் கோலி

டொமினிக் கூப்பர் என்பவர் கேப்டன் அமெரிக்கா மற்றும் நீட் ஃபார் ஸ்பீட் போன்ற படங்களில் நடித்துள்ளவர். இவரது முக சாயலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்தின் முக சாயலும் காண ஒரே மாதிரி அமைந்திருக்கிறது.

ஈஷா குப்தா - ஏஞ்சலினா ஜூலி.

ஈஷா குப்தா - ஏஞ்சலினா ஜூலி.

ராஸ் த்ரீ, ஜன்னத் 2 போன்ற படங்களில் நடித்த் கலக்கிய இந்தி திரைப்பட நடிகையின் தோற்றம் ஏஞ்சலினா ஜூலியை போலவே இருக்கிறது. ஏஞ்சலினா ஜூலி உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள நடிகை ஆவார்.

ஹைபா வீஹெப் - ராக்கி சாவந்த்

ஹைபா வீஹெப் - ராக்கி சாவந்த்

ஹைபா என்பவர் லெபனான்பாப் பாடகர் மற்றும் நடிகர். இவர் சி ஆப் ஸ்டார்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் கொஞ்சம் பார்பதற்கு ராக்கி சாவந்த் எனும் இந்தி திரைப்பட நடிகைக்கு தங்கை போல இருக்கிறார். ராக்கி ஒரு மாடல், நடன கலைஞர் மற்றும் இந்தி டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகை ஆவார்.

ஹோவர்ட் வோலோவிட்ஸ் - ரன்பீர் கபூர்

ஹோவர்ட் வோலோவிட்ஸ் - ரன்பீர் கபூர்

தி பிக் பேங் தியரி சீரியல் பார்த்திருந்தால் ஹோவர்ட் உங்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆன நபர் ஆவர். இவரது முக சாயலும், இந்தி நடிகர் ரன்பீர் முக சாயலும் காண ஒரே மாதிரி இருக்கிறது.

ஹ்ரிதிக் ரோஷன் - பிராட்லி கூப்பர் பார்

ஹ்ரிதிக் ரோஷன் - பிராட்லி கூப்பர் பார்

இது பலர் அறிந்த காம்போ தான். தி ஹேங்கோவர் படத்தின் நடிகர் பிராட்லி பார்பதற்கு ஹ்ரிதிக் ரோஷன் போலவே இருக்கிறார்.இந்த படத்தில் கூட இருவரது கண்களும், சிகை அலங்காரமும் ஒரே மாதிரி இருப்பதை காண முடியும்.

ஜானி காலேகி - சைஃப் அலி கான்

ஜானி காலேகி - சைஃப் அலி கான்

தி பிக் பேங் தியரியில் நடித்த மற்றுமொரு நடிகர் ஜானி. இவர் டாக்டர் லியோனார்ட் என்ற பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இவரது முக சாயலும், இந்தி நடிகரும் கரீனாவின் கணவருமான சயப் அலிகானின் சாயலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

பரினீட்டி சோப்ரா - ஹேடன் பனெட்டியர்

பரினீட்டி சோப்ரா - ஹேடன் பனெட்டியர்

ஹீரோஸ் , நாஷ்வில்லே போன்ற டிவி சீரியல்களில் நடித்துள்ளார் ஹேடன். விரும் பாலிவுட் நடிகையுமான பரினீட்டி சோப்ராவும் முக சாயலில் அச்ச அசல் ஒரே மாதிரி இருக்கிறார்கள்.

ரோஜர் ஃபெடரர் - அர்பாஸ் கான்

ரோஜர் ஃபெடரர் - அர்பாஸ் கான்

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் மற்றும் இந்தி நடிகர் அர்பாஸ் கான் காண ஒரே மாதிரி முக தோற்றம் கொண்டுள்ளனர்.

ஜரினி கான் - கத்ரீனா கைஃப்

ஜரினி கான் - கத்ரீனா கைஃப்

ஜரினி கானின் முக சாயலும், ஆசியாவின் கவர்ச்சியான நடிகை என பல வருடங்களாக பெயர் பெற்று விளங்கும் கத்ரினா கைப்பின் முக சாயலும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக தான் தோற்றமளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hollywood - Bollywood: Insane Look Alike Celebrities!

Hollywood - Bollywood: Insane Look Alike Celebrities!