For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு லட்சுமிதேவியின் அருள் கிடைக்காது

உங்கள் மனதில் இருக்கும் தீய எண்ணங்களை அழித்தால் மட்டுமே உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும். மேலும் சில மந்திரங்கள் மூலமும் லக்ஷ்மியின் அருளை பெறலாம்.

|

செல்வம் மற்றும் வளத்தின் கடவுளாக இந்து மக்களால் பூஜிக்கப்படுபவர் லக்ஷ்மிதேவி. ஒருவர் வாழ்க்கையில் பொருளாதாரரீதியாக முன்னேற வேண்டுமெனில் அவர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் மிகவும் முக்கியமானதாகும். லக்ஷ்மி தேவியின் அருள் ஒருவருக்கு கிடைக்க வேண்டுமெனில் அதற்கு நீங்கள் நிறைய முயற்சிகளும், வழிபாடுகளும் செய்ய வேண்டும்.

Goddess Lakshmi

உங்கள் மனதின் தூய்மையை பொறுத்தே உங்கள் வாழ்வில் செல்வத்தின் அளவு நிர்ணயிக்கப்படும் என்று வேதங்கள் கூறுகிறது. அதனால் உங்கள் மனதில் இருக்கும் தீய எண்ணங்களை அழித்தால் மட்டுமே உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும். மேலும் சில மந்திரங்கள் மூலமும் லக்ஷ்மியின் அருளை பெறலாம். இந்த பதிவில் எந்த குணம் உள்ளவர்களுக்கெல்லாம் லக்ஷ்மியின் அருள் கிடைக்காது என்றும் லக்ஷ்மிதேவியை வழிபட வேண்டிய மந்திரம் எண்ணவேண்டும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்திரன்

இந்திரன்

இந்திரனின் வேண்டுதலுக்கிணங்கி லஷ்மி தேவி அவருக்கு துவாதசாக்ஷர் என்னும் மந்திரத்தை அருளினார். இந்த மந்திரம் பக்தியுடன் கூறினால் உங்கள் வாழ்வில் செல்வம், அமைதி, புகழ் என அணைத்தும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை இரவு இந்த மந்திரத்தை கூறி லக்ஷ்மி தேவியை வழிபட்டால் உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் மட்டுமின்றி குபேரனின் அருளும் கிடைக்கும். இதனால் உங்களுக்கு குன்றா செல்வம் கிடைக்கும்.

செல்வத்துக்கான புனித மந்திரம்

செல்வத்துக்கான புனித மந்திரம்

புனித துவாதசாக்ஷர் மந்திரம் என்பது உங்களுக்கு குறைவில்லா செல்வத்தையும் வழங்கும். அந்த மந்திரம் என்னவெனில் " ஏய்ம் ஹிரிம் ஸ்ரீம் அஷ்டலட்சுமியே ஹிரிம் ரிம் சித்வேய் மாம் கிரிஹெ ஆகச்சக் நமஹ ஸ்வாஹா " ஆகும். இதனை வெள்ளிக்கிழமை இரவு லக்ஷ்மி தேவியின் முன் அமர்ந்து கூறவும்.

விஷ்ணு புராணம்

விஷ்ணு புராணம்

விஷ்ணு புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி லக்ஷ்மி தேவி இந்திரனின் மேன்மையையும், பக்தியையும் மெச்சி அவர் கேட்ட வரத்தை வழங்கினார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க சொர்க்கத்தில் தங்குவதற்கு சம்மதித்தார். ஆனால் ஒரு நிபந்தனையும் விதித்தார். அதன்படி இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் அங்கே தான் தங்கமாட்டேன் என்று கூறினார். இந்திரனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.அந்த நிபந்தனைகள் இந்திரனுக்கு மட்டுமல்ல மக்களுக்கும்தான். அந்த ஐந்து குணங்களில் ஒன்று இருந்தாலும் லக்ஷ்மி தேவி உங்கள் பக்கமே வரமாட்டார்.

காமம்

காமம்

எந்த ஒரு இடத்திலும், சூழ்நிலையிலும் காமமானது மேலோங்கி வாழ்க்கை நெறிகளும், தர்மமும் நிராகரிக்கப்படுமெனில் அந்த இடத்திற்கு லக்ஷ்மி தேவி ஒரு போதும் வரமாட்டார். ஒருவேளை அவரின் அருள் இருந்தாலும் அதற்கு பின் அது கிடைக்காது. அவர்கள் வாழ்வில் நிம்மதியிழந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.

MOST READ: விட்டா அடுத்து இப்படியே ரோட்டுக்கு வந்திடும் போல இந்த அம்மணி... - Hot Fashion Photos

ஈகோ

ஈகோ

ஒரு தனிநபரிடமோ அல்லது இல்லத்திலோ அடாவடித்தனமும், பிடிவாதமும் தான்தான் என்ற கர்வமும் இருப்பின் அவர்களிடம் மனசாட்சி என்பது இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கும், அவர்களின் இல்லத்திற்கும் ஒருபோதும் லக்ஷ்மிதேவியின் அருள் கிடைக்காது.

பேராசை

பேராசை

லக்ஷ்மி தேவி எப்பொழுதும் பேராசை அதிகம் உள்ளவர்களிடமோ அல்லது வீட்டிலோ இருக்க விரும்பமாட்டார். ஏனெனில் அவர்களுக்கு கடைபிடிக்கவேண்டிய தர்மத்தை காட்டிலும் பேராசையே பெரிதாக இருக்கும். வேதங்கள் கூறுவது என்னவெனில் பேராசை என்பது நரகத்திற்கான வாசலாகும்.

வன்முறை

வன்முறை

அப்பாவி மிருகங்களையும், மனிதர்களையும் தங்களின் பொழுதுபோக்கிற்காகவும், சுயலாபத்திற்காகவும் மதரீதியாக துன்புறுத்தும் இடத்திலும் சரி மக்களிடமும் சரி லக்ஷ்மி தேவி ஒருபோதும் இருக்கமாட்டார். அவர்களுக்கு லக்ஷ்மிதேவியின் அருள் என்பது எப்பொழுதும் கிடைக்காது.

பெண்ணை அவமதித்தல்

பெண்ணை அவமதித்தல்

பெண்ணிற்குண்டான மரியாதை தராத இடம், பெண்ணை இகழ்வது, கொடுமைப்படுத்துவது போன்ற இடங்களில் லக்ஷ்மி தேவி வசிக்க விரும்பமாட்டார். மேலும் அப்படிப்பட்டவர்கள் லக்ஷ்மிதேவியின் சாபத்திற்கு ஆளாகவேண்டிவரும்.

MOST READ: ஒரே மாதத்தில் 10 கிலோ குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்தால் போதும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Goddess Lakshmi will never go near to these kind of people

It is believed that if Goddess Lakshmi spots any of these 5 traits in her devotees, she leaves their side.
Story first published: Thursday, November 22, 2018, 17:24 [IST]
Desktop Bottom Promotion