இந்த பொருட்களை தெரியாமல் கூட சனிக்கிழமைகளில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கொடுத்துவிடாதீர்கள்

Subscribe to Boldsky

சனிக்கிழமை என்பது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். ஏனெனில் அனைத்து மக்களும் அச்சப்படக்கூடிய கடவுளான சனிபகவானுக்கு மிகவும் பிடித்த நாள் சனிக்கிழமைதான். அந்த நாளில் சனிபகவானை வழிபடுவது உங்கள் மீதான அவரின் கோபத்தை குறைத்து அவரின் அனுகிரகத்தை பெற்றுத்தரும். அதுமட்டுமின்றி சனிக்கிழமைகளில் வரும் அனைத்து விஷேசங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

gifting these things on Saturday will anger Shanidev

இந்த சூழ்நிலையில் சனிக்கிழமைகளில் செய்யும் சில செயல்கள் உங்களுக்கு பாவத்தையும், சனிபாகவனின் கோபத்தையும் பெற்றுத்தரும். குறிப்பாக நீங்கள் சனிக்கிழமைகளில் மற்றவர்களுக்கு கொடுக்கும் சில பொருட்கள் உங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த பதிவில் சனிக்கிழமைகளில் நீங்கள் எந்தெந்த பரிசுகள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனிக்கிழமையின் முக்கியத்துவம்

சனிக்கிழமையின் முக்கியத்துவம்

சனிக்கிழமை என்பது சனிபகவானின் நாளாகும். புராண குறிப்புகளின் படி சூரியபகவான் தன் மகனான சனிபகவானை தன் வாயிற்குள் அடைந்தபோது சனிபகவானுக்கு பல காயங்கள் ஏற்பட்டது. எனவே ஒவ்வொரு சனிக்கிழமையும் தன் வலியை குறைத்து கொள்வதற்காகா சனிபகவான் எண்ணெய் தேய்த்து குளிப்பதாக கூறப்படுகிறது. எனவே சனிக்கிழமை அன்று சனிபகவான் எளிதில் கோபம் கொள்வார்.எனவே சனிக்கிழமையன்று சனிபகவானை வழிபடும்போது எச்சரிக்கையாக இருங்கள்.

முத்து

முத்து

சனிக்கிழமையன்று முத்து அல்லது முத்துக்களால் செய்யப்பட்ட நகையை பிறருக்கு கொடுக்கும்போது அது கொடுக்கும் உங்களை மட்டுமின்றி வாங்கும் அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இருவீட்டாருக்கும் உடல்நிலை மோசமாகவோ அல்லது மோசமான காயங்கள் ஏற்படவோ வாய்ப்புகள் உள்ளது. உச்சகட்டமாக மரணத்தை கூட இது ஏற்படுத்தலாம்.

கத்தரிக்கோல்

கத்தரிக்கோல்

சனிக்கிழமையன்று உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ தெரியாமல் கூட கத்தரிக்கோலை கொடுத்துவிடாதீர்கள். இது உங்கள் இருவருக்கும் இடையே உறவு சிக்கல்களை ஏற்படுத்தும்.

MOST READ: முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்!

வெள்ளி நகைகள்

வெள்ளி நகைகள்

வாழ்வில் பணக்கஷ்டம் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் யாருக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகளை கொடுத்துவிடாதீர்கள். இது உங்களுக்கு தொழில்ரீதியாக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சிவப்பு துணி

சிவப்பு துணி

இது மிகவும் மோசமான ஒன்றாகும். சனிக்கிழமை அன்று யாருக்காவது நீங்கள் சிவப்பு நிற துணியை கொடுக்க நேர்ந்தால் அது உங்களுக்கு சமூகத்தில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் குடும்பத்தினரிடையே பிரச்சினைகளை உண்டாக்கும்.

மல்லிகை

மல்லிகை

பொதுவாகவே பூ வாங்கி தருவது கொடுப்பவருக்கு சரி, வாங்குபவருக்கு சரி மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் சனிக்கிழமைகளில் மல்லிகையோ அல்லது மல்லிகை வாசனை திரவியமோ பரிசளிப்பது உங்களுக்கு நோய் ஏற்பட காரணமாக அமையும். இது வாங்கிக்கொள்பவர்க்ளுக்கும் பொருந்தும்.

சிவப்பு வண்ண பேனா

சிவப்பு வண்ண பேனா

சனிக்கிழமையன்று மற்றவர்களுக்கு சிவப்பு மை பேனா வாங்கி தருவது என்பது பாவமான செயலாகும் இதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதனை பெற்றுக்கொள்பவர்களுக்கு கடுமையான நஷ்டமும், அவமானமும் நேரலாம்.

MOST READ: முட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா? நீங்களே பாருங்க..

உலோக பாத்திரங்கள்

உலோக பாத்திரங்கள்

உலோக பாத்திரங்கள் கொடுப்பது என்பது சகஜமான ஒன்று. ஆனால் சனிக்கிழமைகளில் உலோக பாத்திரங்கள் கொடுப்பது சனிபகவானின் கோபத்தை அதிகரிக்க கூடிய ஒன்றாகும். இதனால் நஷ்டம் மற்றும் உடல்நிலை கோளாறு ஏற்படலாம்.

வெள்ளைத்துணி

வெள்ளைத்துணி

சனிக்கிழைமைகளில் வெள்ளை துணியை பரிசளிப்பது உங்களுக்கு திருமணம் தொடர்பான பல பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் கணவன், மனைவிக்கு இடையே புரிதலில் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

ஆரஞ்சு நிற இனிப்புகள்

ஆரஞ்சு நிற இனிப்புகள்

பொதுவகாவே இனிப்பு என்பது அதிகம் பகிரப்படும் ஒரு பொருளாகும். ஆனால் சனிக்கிழைமைகளில் இனிப்பு பகிரும்போது ஆரஞ்சு நிற இனிப்புகள் கொடுப்பதை தவிர்க்கவும். இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

MOST READ: மற்றவர்கள் மனதில் இருக்கும் இரகசியத்தை அறிய உதவும் எளிய தந்திரங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    gifting these things on Saturday will anger Shanidev

    Saturday is considered to be the Lord Shani's day. Gifting these things on Saturday will anger Shanidev.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more