ஏலியன் வந்து சென்றதற்கான சான்றுகளா இவை? மர்மம் நீடிக்கும் உலகின் 5 பகுதிகள்!

Posted By:
Subscribe to Boldsky

தட்டையானது, வட்டமானது என்று நாம் கருதி வந்த பூமி உருண்டையானது என்பதை ஒப்புக்கொள்ளவே மனிதர்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அதிலும், அது ஜியாமெட்ரிக் போன்ற சரியான உருண்டையானது அல்ல உருளைக்கிழங்கு போன்ற சீரற்ற உருண்டை என்பதை இன்னும் சிலர் ஒப்புக்கொள்வதில்லை, பலர் அறிந்ததே இல்லை.

பூமியின் வடிவத்திலேயே இத்தனை குழப்பங்கள், புதுப்புது கண்டுபிடிப்புகள் நம்மை வியப்பிற்குள்ளாக்கும் போது. அந்த பூமியின் உள்ளே இருக்கும் விந்தைகள் நம்மை எத்தனை வியப்படைய செய்யும். மனிதர்கள் பூமியில் இருக்கும் ஆச்சரியங்கள் என்று கடந்த நூறாண்டுகளில் மட்டும் எண்ணிலடங்காதவற்றை கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், அவை எல்லாம் பல நூற்றாண்டுகளாக பூமியில் நிலைத்திருக்கின்றன. அப்படியான ஒன்று தான் இன்று வரையிலும் அறிவியல், புவியியல் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களை குழப்பத்தில் சுற்றிவிட்டுக்கொண்டிருக்கும் மர்மமான பூமத்திய கோடு வடிவங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயற்கைக்கோள் படங்கள்!

செயற்கைக்கோள் படங்கள்!

சாட்டிலைட் மேப்பிங் டெக்னாலஜி உதவியுடன் அகழ்வாராய்ச்சியாளர்கள் மத்திய கிழக்கு பகுதிகளில் இருக்கும் பண்டையக் காலத்து லாவா டோம்ஸ் எனப்படும் எரிமலைக்குழம்பு குவிமாட இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை தான் இந்த மர்மமான கோடுகள்.

பல வடிவங்கள்!

பல வடிவங்கள்!

இந்த மர்மமான வடிவங்கள், ஒரு நீளமான கோடுகளால் வரையப்பட்டுள்ளன. இவை பல வடிவங்களில் இருக்கின்றன. சவுதி அரேபியாவில் மட்டுமே இதுப்போன்ற ஆயிரக்கணக்கான கோடுகள் இருப்பதாக அறியப்படுகிறது. இதை எல்லாம் கண்டுபிடிக்க உதவிய கூகுள் எர்த்க்கு தான் நன்றி கூற வேண்டும்.

நாஸ்கா கோடுகள்!

நாஸ்கா கோடுகள்!

மத்திய கிழக்கு பகுதியில் அமைந்திருக்கின்றன இந்த மர்மமான நாஸ்கா கோடுகள் (Nazca Lines). இவற்றை ஆய்வாளர்கள் வர்க்ஸ் ஆப் தி ஓல்ட் மென் என்று குறிப்பிடுகிறார்கள்.

அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த மர்ம கோடுகள் குறித்து தகவல்களில் சதி செய்கிறார்கள் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Image Source: flickr

எங்கிருந்த பார்க்க வேண்டும்?

எங்கிருந்த பார்க்க வேண்டும்?

இந்த மர்மமான வடிவங்களை நீங்கள் நிலத்தில் இருந்து காண்பது கடினம். பூமியில் இருந்து சில நூறு அடி மேலே இருந்து கண்டால் மட்டுமே அவ்விடத்தில் இப்படியான வடிவங்கள் இருப்பது தெரியும். குறைந்தபட்சம் ஆயிரம் அடிகளில் இருந்து கண்டால் தான் அது என்ன மாதிரியான வடிவம் என்பது தெரியும்.

Image Source: commons.wikimedia

ஜியாமெட்ரிக் வடிவம்!

ஜியாமெட்ரிக் வடிவம்!

இந்த கோடுகளானது பல மைல் தூரம் பறந்து விரிந்து கிடக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இவ்வளவு பெரிய வடிவங்களை அவர்கள் கச்சிதமாக வரைந்துள்ளனர். அந்த காலத்தில் அப்படி என்ன தொழில்நுட்பம் இருந்தது? இல்லையெனில், இத்தகைய பெரிய வடிவங்களை சரியான ஜியாமெட்ரிக் வடிவத்தில் வரைவது மிகவும் கடினம்.

வரலாறு!

வரலாறு!

வரலாற்று புவியியல் ஆய்வாளர்கள் இந்த மர்மத்தை உடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது. குறைந்தபட்சம் இந்த மர்ம கோடுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். சமீபத்தில் அவர்கள் இந்த குவிமாட பகுதியில் ஒரு வட்டமான வடிவத்தை கண்டுபிடித்தனர்.

Image Source: commons.wikimedia

சக்கரம்!

சக்கரம்!

சக்கரத்தை போன்று இருந்த இந்த வடிவத்தில், அதனுள் ஸ்போக்ஸ் போன்ற அச்சும் இருந்தன. இப்போதிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு இத்தகைய பெரிய வடிவங்களை கச்சிதமாக உருவாக்குவதே கடினம். ஆனால், அந்த காலத்தில் அன்று வாழ்ந்த மக்கள் இதை எப்படி உருவாகினர்? எதற்காக உருவாக்கினர்? இது ஏதாவது சமிஞ்ஞை மொழியா? என்று பல கேள்விகளை எழுப்புகின்றன.

நாஸ்கா வரிகள், பெரூ!

நாஸ்கா வரிகள், பெரூ!

1939ல் கண்டுபிடிக்கப்பட்டன இந்த நாஸ்கா வரிகள். இவை 200 BC - 500 ADயில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. யுனெஸ்கோ இதை உலக பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது. இங்கே வானியல் சார்ந்த சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

Image Source: worldnomads

ஏலியன் வருகை?

ஏலியன் வருகை?

இது பூமிக்கு வந்து சென்ற ஏலியன்களை தொடர்பு கொள்ளும் மொழியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நாள் வரையிலும் இதுக்குறித்து பல கற்பனை தியரிகள் மட்டுமே வகுக்கப்பட்டுள்ளனவே தவிர, இப்படியாக தான் இருக்கும் என்ற தெளிவான ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல் ஏதும் இல்லை.

மரீ மேன் (Marree Man)!

மரீ மேன் (Marree Man)!

இது புவியியல் ஆய்வாளர்களால் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய மனித உருவ மர்ம கோடுகள் ஆகும். இது தான் இந்த வகையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய மர்ம கோடு வடிவம் ஆகும். இது குறித்து ஆராய்ந்து வகுக்கப்பட்ட தியரிகள் இது கடைசியாக உருவாக்கப்பட்ட வடிவமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வடிவத்தை 1998ல் கண்டுபிடித்தனர்.

Image Source: commons.wikimedia

வெள்ளை குதிரை!

வெள்ளை குதிரை!

இது செயின்ட் ஜியார்ஜ் ஒரு டிராகனை வதம் செய்யும் வடிவமாக கருதப்படுகிறது. இது டிராகன் மலை அல்லது இவரது குதிரை என்று கருதுகிறார்கள். இது Bronze Age காலத்தில் 1200 BC - 800 BCக்கு இடைப்பட்ட காலத்தில் உருவாக்கி இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இந்த உஃப்பிங்டன் வெள்ளை குதிரை (Uffington White Horse)வரலாற்றுக்கு முந்தைய பூர்வீகம் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

சமீபத்தில் ஆக்ஸ்போர்டு அகழ்வாராய்ச்சியாளர்கள் இது மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.

Image Source: commons.wikimedia

பாராசஸ் கேண்டலப்ரா!

பாராசஸ் கேண்டலப்ரா!

200 கிமுவில் இந்த பாராசஸ் கேண்டலப்ரா (Paracas Candelabra) வடிவம் பெரூவில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வடிவத்தை அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் ஏன் உருவாக்கினார்கள் என்பது குறித்த ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது திரிசூல வடிவிலான ஒரு செடி போல இருக்கிறது.

போதை செடி!

போதை செடி!

இதை கள்ளிச்செடி அல்லது மெழுகுவர்த்தி ஸ்டான்ட் போன்ற பெயர் சொல்லியும் அழைக்கிறார்கள். இந்த மர்ம வடிவத்தை சுற்றி பல தியரிகள் வகுக்கப்பட்டுள்ளன. சிலர் இது இந்த உலகத்தை உருவாக்கிய கடவுளின் ஆயுதம் என்று குறிக்கிறார்கள். மேலும் சிலர், இது அப்பகுதியில் காணப்படும் Jimson weed எனும் செடியின் வடிவம் என்றும் கூறுகிறார்கள். இது ஒரு போதை செடி ஆகும்.

Image Source: wikipedia

அட்டகாமா ஜெயின்ட்!

அட்டகாமா ஜெயின்ட்!

அட்டகாமா பாலைவனத்தில் இருக்கும் பெரிய உருவ வடிவம் என்பதால் இதை அட்டகாமா ஜெயின்ட் என்றே அழைக்கிறார்கள். இது சிலியில் இருக்கிறது. இதை 1000-1400 கிபியில் உருவாக்கியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். சிலர் தியரிஸ்ட் இது நிலாவின் நகர்வை அளக்கும் வானியல் காலண்டர் என்றும் கூறுகிறார்கள்.

Image Source: commons.wikimedia

புதிர்!

புதிர்!

இது ஏலியன்கள் குறித்த புதிராகவும் இருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதை சுற்றி பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரோபோட் போன்ற இந்த வடிவத்தின் முகமானது பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இது ஏலியன் வடிவமா? உள்ளூர் பழங்குடி மக்கள் வணங்கி வந்த சின்னமா? அல்லது இது வானியல் குறித்து ஏதாவது கூறுகிறதா? என பல கேள்விகள் இந்த அட்டகாமா மர்ம கோடுகள் வடிவத்தை சுற்றி இருக்கிறது.

Image Source: commons.wikimedia

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Mysterious Ancient Patterns in The Earth!

Five Mysterious Ancient Patterns in The Earth!