For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்திய ராணுவத்தின் முதல் பெண் அதிகாரி ப்ரியா! Wonder Women #011

  |

  2018 ஆம் ஆண்டு ஆரம்பித்து பல சர்ச்சைகள்,பிரச்சனைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், வன்கொடுமைகள் எல்லாம் வழக்கம் போலவே நடந்து கொண்டிருக்கிறது.

  இன்றும் சமையலறையை விட்டு வெளியே வர முடியாத சூழலில் பெண்களில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று, இவர்களில் வெளியேறி சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நிச்சயம் வரலாற்றிலும் இடம் பிடிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை

  அப்படி வரலாற்றில் இடம் பிடித்த ஒரு பெண்ணை பற்றி தான் இன்று தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். ப்ரியா ஜிங்கன், இந்திய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பென் ப்ரியா அவரது பயணத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  இளம் வயது :

  இளம் வயது :

  ஹிமாச்சல பிரதேசத்தில் பிறந்து வாழ்ந்த ப்ரியா சிறிய வயதிலிருந்து துரு துருவென்று தான் இருப்பார், அப்பா ஒரு போலீஸ் அதிகாரி யூனிஃபார்ம் அணிந்து பணியாற்றுவதில் அலாதி இன்பம் கொண்டிருந்தார் ப்ரியா அதோடு, இந்த நாட்டிற்காக தன்னுடைய பங்களிப்பாக எதாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கவே அவரது ஆர்வம் ராணுவத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது.

  Image Courtesy

  1992 :

  1992 :

  அந்த 1992 ஆம் ஆண்டு வரையில் பெண்கள் ராணுவத்தில் பங்கேற்க அனுமதியில்லை, அந்த வழக்கத்தை மாற்றி வரலாற்றினை திருத்தி எழுதிய பெருமை ப்ரியாவையே சார்ந்திடும் ராணுவ பணியாளர்களின் உயர் அதிகாரிக்கு ப்ரியா ஒரு கடிதம் எழுதுகிறார்.

  அப்போது உயர் அதிகாரியாக இருந்தவர் சுனித் ஃப்ரான்சிஸ் ரோட்ரிக்ஸ், அவருக்கு ராணுவத்தில் பணியாற்ற பெண்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது, எங்களுக்கும் அந்த வாய்ப்பினை கொடுங்கள் என்று சொல்லி கடிதம் அனுப்புகிறார்.

  Image Courtesy

  பெண்கள் :

  பெண்கள் :

  பெண்கள் எந்த நிலையிலும் பின் தங்கியிருக்கக்கூடாது என்பதை மிகவும் கவனத்துடன் கையாண்டவர் இவர், ஆணுக்கு இணையாக பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அவரது எண்ணம் தான், அவரை வரலாற்றில் நிலைக்கச் செய்திருக்கிறது.

  Image Courtesy

   பதில் கடிதம் :

  பதில் கடிதம் :

  ப்ரியாவிற்கு பதில் கடிதம் கிடைக்கிறது, ஏற்கனவே ராணுவத்தில் பெண்களை சேர்ப்பது தொடர்பான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம், விரைவில் நல்ல சேதி வரும் என அதில் இருக்கிறது.

  அப்பாவைப் போலவே போலீஸ் துறையிலாவது சேர்ந்துவிட வேண்டும் என்று தயாராகாகிக் கொண்டிருந்த ப்ரியா தற்போது தன்னுடைய ராணுவக் கனவை உறுதியாக பற்றிக் கொண்டார்.

  Image Courtesy

  சட்டம் :

  சட்டம் :

  இந்நிலையில் தன்னுடைய சட்டப்படிப்பை படித்து முடித்தார். 1992 ஆம் ஆண்டு தினசரி நாளிதழ் ஒன்றில் எதார்த்தமாக ராணுவத்தில் பெண்கள் சேர விருப்பமா என்று கேட்டு ஒரு விளம்பரம் வந்திருக்கிறது.

  துரதிஸ்டவசமாக சட்டம் படித்த மாணவர்களுக்கு இரண்டே இரண்டு இடங்கள் தான் ஒதுக்கப்பட்டிருந்தது.

  Image Courtesy

  001 :

  001 :

  ஒரு வழியாக இணைந்து சென்னையில் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார். இவருடன் சேர்ந்து 24 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். மொத்தம் 25 பெண்கள் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தார்கள்.

  ப்ரியாவுக்கான என்ரோல் எண் 001. பயிற்சியிலிருந்த 25 பெண்களில் முதல் ஆள் ப்ரியா தான்.

  Image Courtesy

  கடினம் :

  கடினம் :

  ஆரம்பத்தில் ஆண் வீரர்களுக்கு சமமாக தங்களுக்கும் கடினமான பயிற்சி கொடுக்கப்படுவதை சமாளிக்க முடியாமல் திணறினர், தொடர்ந்து அதையே வழக்கமாக்கிக் கொண்டார்கள். ஆண் பெண் என்று சொல்லி எந்த பாகுபாடும் காட்டவில்லை.

  பயிற்சியின் ஒரு பகுதியாக ஆண் வீரர்களும் பெண் வீராங்கனைகளும் ஒரே நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது கஷ்டமாக இருந்தது என்கிறார்.

  Image Courtesy

  ஒரு டாய்லெட் :

  ஒரு டாய்லெட் :

  முதன் முதலாக இவருக்கு பணி அஹமதாபாதில் ஒதுக்கப்பட்டது. அங்கே ஒரே ஒரு கழிவறை மட்டும் தான் இருந்திருக்கிறது அதேயே ப்ரியா மற்றும் அங்கு பணியாற்றிய பிற ஆண் பணியாளர்களும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.

  மிகும் சிரமமான காலகட்டம், ஆனாலும் இதையெல்லாம் கஷ்ட்டமென்றோ அல்லது இப்படியெல்லாம் நான் வந்து சிரமப்பட வேண்டுமா என்றெல்லாம் நான் ஒரு போதும் நினைத்ததில்லை என்கிறார் ப்ரியா.

  Image Courtesy

  மார்ச் 6 :

  மார்ச் 6 :

  நேற்றைய தினம் மார்ச் ஆறு 1993 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ஜட்ஜ் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்படுகிறார் ப்ரியா. தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றிய இவர் மேஜர் மனோஜ் மல்ஹோத்ராவை திருமணம் செய்து கொள்கிறார் இவர்களுக்கு ஆர்யமான் என்ற மகனுண்டு.

  Image Courtesy

  பத்து ஆண்டுகள் :

  பத்து ஆண்டுகள் :

  பத்து ஆண்டுகள் கழித்து 2003 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ப்ரியா ஹரியானா ஜுடிசியல் சர்வீஸ் தேர்வினை எழுதி தேர்வாகிறார், தொடர்ந்து மாஸ் கம்யூனிகேசன் படிக்கிறார்.

  சரி பத்திகை துறையோ அல்லது அரசாங்கத்துறையிலோ இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்ப்பார்த்தால் எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியராக தன்னை இணைத்துக் கொண்டார்.

  Image Courtesy

  ஏன் பள்ளி ஆசிரியை :

  ஏன் பள்ளி ஆசிரியை :

  ராணுவத்தில் இருந்து வெளியேறிய பிறகு சில காலங்கள் சாஃப்ட் ஸ்கில் ட்ரைனராக இருந்திருக்கிறார் ப்ரியார். அப்போது அவரிடம் பயிற்சி பெற்றது எல்லாம் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படித்த மாணவர்கள், அப்போது அவர்கள் சொன்ன ஒரு விஷயம் தான் பள்ளி ஆசிரியராக தன்னை மாற வேண்டும் என்று தூண்டியிருக்கிறது.

  இப்போது எங்களுக்கு கிடைக்கும் பயிற்சி இன்னும் முன்கூட்டியே, அதாவது பள்ளிப்பருவத்திலேயே கிடைத்திருந்தால் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கும் என்றிருக்கிறார்கள்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync life wonder women
  English summary

  First Women In Indian Army

  First Women In Indian Army
  Story first published: Wednesday, March 7, 2018, 15:10 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more