Just In
- 16 min ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- 57 min ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- 3 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 5 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
Don't Miss
- News திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளர் சூர்யமூர்த்திக்கு பெரிய சிக்கல்.. வேகமாக பரவும் பழைய வீடியோ
- Movies ரெஜிஸ்டர் ஆபிஸில் ஆனந்த்.. கல்யாணத்தை நிறுத்த தீபா செய்ய போவது என்ன?கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இந்த ஆறில் உங்க உள்ளங்கை எந்த கலர்னு சொல்லுங்க... உங்க விதி எப்படினு தெரிஞ்சிக்கோங்க...
உங்களுடைய உள்ளங்கையின் நிறத்தை வைத்து உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது.உங்களுடைய ஆரோக்கியம் என்பது பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஒவ்வொரு நபரின் உள்ளங்கையின் நிறமும் வேறுபட்டது என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? கைரேகைப் படி, உள்ளங்கையின் இந்த பல்வேறு நிறங்கள் ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் விதி பற்றி நிறைய விஷயங்களை வெளிப்படுத்த முடியும்.
கைரேகை ஜோதிடப்படி, உள்ளங்கையின் பல்வேறு நிறங்கள் மனிதர்களின் உடல்நலம், விதி மற்றும் தனிப்பட்ட ஆளுமை பற்றி கணிக்க முடியும் என்று தெரிய வருகிறது. ஒருவரின் உள்ளங்கையின் நிறத்தைப் பார்த்து, அவரின் குணநலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!
பிங்க் நிறம் என்றால்:
உங்கள் உள்ளங்கையின் நிறம் 'இளஞ்சிவப்பு' என்றால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதிலும் நல்ல அதிர்ஷ்டம் பெறுவீர்கள், குறைவான முயற்சியிலேயே நிறைய வெற்றிகளைப் பெறுவீர்கள். இந்த நபர்கள் ஆற்றல்மிக்கவர்கள், உற்சாகமானவர்களாகவும் வாழ்க்கைக்கு நேர்மறையான பார்வையையும் கொண்டிருக்கிறார்கள்.
ஆரோக்கியப் பார்வையில், நல்ல உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் கொண்ட நபர்கள் இளஞ்சிவப்பு உள்ளங்கைகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
வெள்ளை நிறம் என்றால்:
உங்கள் உள்ளங்கையின் வண்ணம் 'வெள்ளை' என்றால், நீங்கள் ஒரு குளிர் மனிதனாகவும் உள்முகச்சிந்தனை உள்ளவராகவும் இருப்பதைக் குறிக்கிறது. நீங்கள் உடனடியாக மற்றவர்களை நம்புவது கடினம். அதனால் உங்களுக்கு மிகக் குறைவான நண்பர்களே இருக்கலாம்.
ஆரோக்கியப் பார்வையில் , நீங்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படலாம் மற்றும் அதுவே உங்கள் உள்ளங்கைக்கு வெண்மை நிறத்தைத் தரலாம்.
MOST READ: வீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டியது லட்சுமி மந்திரங்கள்
நீல நிறம் என்றால்:
உங்கள் உள்ளங்கையின் நிறம் 'நீலம்' என்றால், அது ஒரு அடிப்படை இதய நிலையால் நீங்கள் பாதிக்கப்படலாம் என்பதைக் குறிக்கிறது. ஆளுமைப் பார்வையில், நீங்கள் மிகவும் பயந்த, மனச்சோர்வு மற்றும் இயற்கை சார்ந்து இருக்கும் தன்மை கொண்டவர்.
ஆரோக்கியப் பார்வையில், நீங்கள் ஒரு இரத்த சோகை, நெஞ்சு அழுத்தம் மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.
மஞ்சள் நிறமாக இருந்தால்:
உங்கள் உள்ளங்கை 'மஞ்சள் நிறமாக' இருந்தால், நீங்கள் மிகவும் வருத்தமாக இருக்கும் ஒரு நபர், சில நேரங்களில் ஒரு நம்பிக்கையற்றவராக இருக்கலாம். நீங்கள் உங்களைச் சுற்றி ஒவ்வொரு விஷயத்திலும் தவறு கண்டுபிடிக்க முனைவீர்கள்.
ஆரோக்கியப் பார்வையில், கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.
கருப்பு நிறம் (பிளாக்)என்றால்:
உங்கள் உள்ளங்கை வண்ணம் 'கருப்பு' என்றால், ஒரு தனிநபராக, பண விஷயங்களில் நீங்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் போராட வேண்டியிருக்கும், மேலும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆரோக்கியப் பார்வையில், நீங்கள் இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம் அல்லது வயிறு நோயால் கூட பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
MOST READ: 6 மாத குழந்தை புற்றுநோயால் இறந்ததால் தற்கொலை செய்து கொண்ட தந்தை - நடுரோட்டில் தாய்
சிவப்பு நிறம் (ரெட்) என்றால்:
உங்கள் உள்ளங்கை நிறம் 'சிவப்பு' என்றால், நீங்கள் அதிக சக்தி கொண்ட ஒரு நபர். உங்கள் ஆற்றல் நேர்மறையானதாக இருப்பதால் ஒரு தொற்றுப் போல அருகிலுள்ளவர்களுக்கும் பரவி அவர்களுக்கு உங்கள் அருகாமை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால் மறுபுறம், நீங்கள் ஒரு தொப்பியின் முனையிலுள்ள நீர்த்துளி போல கோபத்தை எளிதாகப் பெறுகிறீர்கள், அது உங்களின் பொறுமையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
ஆரோக்கியப் பார்வையில், நீங்கள் சோர்வால் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. இது பொதுவாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகமாவதால் ஏற்படலாம்.