For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1000 ஸ்பார்டன்களுக்கு சமமான பலம்பொருந்திய ஹெர்குலஸ் - திகைப்பூட்டும் உண்மைகள்!

1000 ஸ்பார்டன்களுக்கு சமமான பலம்பொருந்திய ஹெர்குலஸ் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்!

|

கிரேக்க கடவுளான ஜீயஸின் மகன் ஹெர்குலிஸ். உலகின் மாபெரும் வீரனாக, நாயகனாக கருதப்பட்ட நபர். பின்னாட்களில் கிரேக்கம் மற்றும் ரோம நாடுகளில் கடவுளாகவும் காணப்பட்டார். ஹெர்குலிஸ் என்றாலே அவரது ஆஜானுபாகுவான உடலமைப்பு தான் முதலில் அனைவருக்கும் நினைவிற்கு வரும்.

எவ்வளவு பெரிய வீரனாக, தீரனாக இருந்தாலும், அவர்களுக்கும் ஏதேனும் ஒரு பலவீனம் இருக்கும். அப்படி உலக பலசாலியாக இருந்த ஹெர்குலிஸ்க்கு இருந்த பலவீனம் காமம், இச்சை உணர்வுகள் மற்றும் பெருந்தீனி உண்பதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெயர் பொருள்!

பெயர் பொருள்!

ஹெர்குலிஸ் என்ற பெயரின் பொருளாக Glory of Hera என்று கூறப்படுகிறது. இந்த பெயரை இவரது தாய் அதீனா வைத்தார் என்றும். கூறப்படுகிறது. வரலாற்றின் பல பகுதிகளில் ஹெர்குலிஸ்ன் பெயர் தவறாக குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. Hercules என்று கூறப்பட வேண்டிய பெயரை Herkules, Hurcaales, Heracules மற்றும் Hercales என்றும் சிலர் தவறாக குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு வளர்ப்பு தந்தையர்!

இரண்டு வளர்ப்பு தந்தையர்!

ஹெர்குலிஸ்க்கு இரண்டு வளர்ப்பு தந்தையர் இருந்துள்ளனர். கிரேக்க புராணங்களில் வரும் ஒரு குடும்பங்களின் கிளைகளானது கொஞ்சம் சிக்கலாகவும், பிணைவுகளுடனும் தான் காணப்படுகிறது. அந்த வகையில் ஹெர்குலிஸ்ன் குடும்ப கிளைஇல் இவருக்கு இரண்டு வளர்ப்புத் தந்தையர்கள் இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் வளர்ப்புத் தந்தையாக கருதப்படும் நபர் அம்ஃபிட்ரியான் (Amphitryon). இவர் பிலோபெனஸின் (Peloponnese) கிழக்கு பகுதியை பூர்வீகமாக கொண்டவர் என அறியப்படுகிறது. இரண்டாவது வளர்ப்புத் தந்தையாக கருதப்படுபவர் ராடாமந்தேஸ் (Radamanthes). இவர் அரசராக திகழ்ந்தவர் என்றும்., இவர் ஜீயஸ் மற்றும் யூரோப்பாவின் மகன் என்றும் கூறப்படுகிறது.

அழகானவர்!

அழகானவர்!

ஹெர்குலிஸ் அடர்ந்த தாடியும், ஆஜானுபாகுவான உடற்கட்டும் கொண்டிருந்த ஒரு அழகான ஆண்மகனாக தான் வரலாற்றின் பக்கங்களில் கூறப்பட்டிருக்கிறார். பெண்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு கொண்டிருந்தார். பெண்களும் இவர் மீது அளவுக்கடந்த ஈர்ப்பு காட்டினார்கள். இதனால் இவரிடம் காம உணர்வுகள் மேலோங்கிக் காணப்பட்டுள்ளது. சில சமயங்களில் இந்த உணர்வை கட்டுப்படுத்த முடியாமலும் போயிருக்கிறார் ஹெர்குலிஸ்.

முதல் மனைவி

முதல் மனைவி

ஹெர்குலிஸ்ன் முதல் மனைவி மெகரா. இவர் அன்றைய கிரேஸ்ன் தீப்ஸ் நகரின் மன்னராக இருந்த க்ரியோன் என்பவரின் மூத்த மகளாவார். போரில் இவரை வீழ்த்தி இவரது மகளை திருமணம் செய்துக் கொண்டார் ஹெர்குலிஸ். மெகரா மூலமாக ஹெர்குலிஸ்க்கு மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்கள் பெயர் க்ரியோன்டிடஸ், டேய்கூன் மற்றும் தெர்சிமசுஸ்.

மெகரா மீதும் தனது மகன்கள் மீதும் பேரன்பு கொண்டிருந்த போதும், ஹீராவின் சாபத்தால், இவர்கள் அனைவரயும் தன் கைகளாலேயே கொன்றார் ஹெர்குலிஸ்.

நிறைய குழந்தைகள்!

நிறைய குழந்தைகள்!

கிரேக்க நாட்டு அரசரான திஸ்பியூஸ்ன் (Thespius) ஐம்பது மகள்கள் மூலமாகவும் குழந்தைகள் பெற்றுள்ளார் ஹெர்குலிஸ். உடலுறவு மீதான ஹெர்குலிஸ்ன் தீரா தாகத்தின் காரணத்தால் இவருக்கு நிறைய குழந்தைகள் இருந்தனர் என கூறப்படுகிறது.

குழந்தையாக இருந்த போதே...

குழந்தையாக இருந்த போதே...

ஹெர்குலிஸ் தைரியத்திற்கும், பலத்திற்கும் பெயர்போன நபர். இவர் தன்னை கொல்ல வந்த இரண்டு பாம்புகளை தனது கைகளாலேயே கழுத்தைநசுக்கி கொன்றார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. பாம்புகள் இறந்தது தெரியாமல் சிரித்த முகத்துடன் காணப்பட்டார் ஹெர்குலிஸ் என்றும் பதிவு செய்துள்ளனர்.

ஓரினச்சேர்க்கையாளர்!

ஓரினச்சேர்க்கையாளர்!

ஹெர்குலிஸ்க்கு பெண்கள் மீது மட்டுமின்றி ஆண்கள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளராகவும் இருந்தார் என்று கூறியுள்ளனர். தனது நண்பரும், உறவினருமான அயோளுஸ் (Iolaus) உடன் ஹெர்குலிஸ் ஓரினச்சேர்க்கையாளராக இருந்துள்ளார். இவருடன் தனது நீண்ட நேரத்தை செலவு செய்ததாகவும், செக்ஸுவல் நடத்தை கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கொலை!

கொலை!

கிரேக்க இளைஞர்கள் இசை பயில்வது வழக்கமாக இருந்தது. இதற்கு ஹெர்குலிஸ் விதிவிலக்காகவும் இருக்கவில்லை. தனது சிறு வயதில் ஹெர்குலஸ்ம் இசை வகுப்புகளில் பங்குபெற்று பயிற்சி பெற்றார். ஆனால், ஒருமுறை தனது இசை ஆசிரியர் மீது வெறுப்படைந்த ஹெர்குலிஸ் அவரை கொலை செய்தார்.

ஆனால், அப்போது தனது வலிமை பற்றி ஹெர்குலிஸ் அறிந்திருக்கவில்லை என்றும், அந்த சம்பவத்தின் போது அவர் உயிரிழந்து போவார் என்று கருதவில்லை என்றும் கூறி வருந்தினாராம் ஹெர்குலிஸ்.

அடிமை!

அடிமை!

யூரிடஸ் (Eurytus) எனும் அரசரின் மகனான இஃபிடஸ் என்பவரை கொலை செய்த குற்றத்தால் ஹெர்குலஸ் ஒரு வருடம் அடிமையாக இருக்கும் தண்டனை பெற்றார். இந்த தண்டனையின் போது இவர் பெண்கள் உடுத்தும் ஆடையை உடுத்த வேண்டும் என்றும், பெண்கள் செய்து வந்த வேலைகளை தான் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆகையால் அந்த ஒரு வருட காலத்தில் பலர் இவரை பெண் என்று கருதி ஏமாற்றம் அடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

டேயானிரா (Deianira)

டேயானிரா (Deianira)

மெகராவை கொன்ற பிறகு சில காலம் கழித்து டேயானிரா எனும் அழகிய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார் ஹெர்குலிஸ். இவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு இணைப்பிரியா காதல் இருந்தது என வரலாற்றில் குறிபிடப்பட்டுள்ளது.

இடையே, செசுஸ் (Nessus) என்பவரை கொலை செய்து அவரது இரத்தத்தை பருகினார். அதில் விஷத்தன்மை இருந்தது கண்டறியப்பட்டது. அமரத்துவம் பெற்றிருந்தும், பின்னர் தன்னை சாகவிடும்படி தனது தந்தை ஜீயஸிடம் ஹெர்குலிஸ் மன்றாடினார் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

இதன் பிறகு தான் மூன்றாவதாக ஹெபே எனும் பெண்ணை ஹெர்குலிஸ் திருமணம் செய்துக் கொண்டார்.

ரோம நாணயங்கள்!

ரோம நாணயங்கள்!

ரோம நாணயங்களில் பொறிக்கப்பட்ட கிரேக்க நபர்களில் முதலாவதாக இடம்பெற்றவர் ஹெர்குலிஸ். பல மெடல்களில் கூடஹெர்குலிஸ்ன் முகம் பதிக்கப்பட்டிருக்கும்.

மேலும், ஹெர்குலிஸ் புகழ் அறியும்படி அவருக்காக கோவில் கட்டப்பட்ட இடங்களும் இருந்தன என்றும். அவை பராமரிப்பு இன்றி அழிந்து போயின என்றம் அறியப்படுகிறது.

ஆயினும், இன்னும் வடமேற்கு கிரீஸ் பகுதியில் சில சிறிய பகுதிகள் ஹெர்குலிஸ் புகழ் பாடும்படி நிலைத்து இருக்கிறது என அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts To Know About The Greatest Hero Hercules

Facts To Know About The Greatest Hero Hercules
Story first published: Tuesday, January 23, 2018, 11:58 [IST]
Desktop Bottom Promotion