For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது பலரும் அறியாத தாராவியின் வேறொரு முகம்...

இது தாராவியின் இன்னொரு முகம்... தாராவி குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மை தகவல்கள் குறித்த ஒரு சிறப்பு கட்டுரை.

|

தாராவி... இந்த வார்த்தைய கேட்டதுமே... தமிழர்கள் வாழும் மும்பை பகுதின்னு தான் நம்ம எல்லாருக்குமே மனசுக்குள்ள ஒரு எண்ணம் வரும்.

தாராவி, உலகின் மூன்றாவது மாபெரும் சேரி / குப்பங்களில் ஒன்று. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சேரி. மக்கள் ஒன்றாக சேர்ந்து வாழும் பகுதி என்பது பின்னாட்களில் சேரியாக... ஏழை மக்கள் வாழும் பகுதியாக மாறிப் போனது. இங்கே சுத்தமாக இருப்பது இவர்களது மனம் மட்டுமே.

2.1 கிலோமீட்டர் சதுர சுற்றளவு கொண்ட பகுதி தாராவி. தாராவியில் மொத்தம் ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகில் அடர்த்தியான அளவில் மக்கள் வாழும் பகுதிகளில் தாராவியும் ஒன்று. பலதரப்பட்ட ஜாதி, மத, கலாச்சாரம் பின்பற்றி வரும் மக்கள் கூட்டமாக வாழுந்து வரும் இடம் தாராவி.

தாராவி என்பதை வெறும் சேரியாக மட்டும் அறிந்து வருபவர்களுக்கு... சில உண்மைகள் அறிந்துக் கொள்ளும் பட்சத்தில் அதன் வேறொரு முகமும் தெரிய

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலாறு ரொம்ப முக்கியம்...

வரலாறு ரொம்ப முக்கியம்...

தாராவி 18ம் நூற்றாண்டில் ஒரு தீவாக இருந்துள்ளது. இதுவொரு பிரதானமான சதுப்பு நிலப்பரப்பு என்று அறியப்படுகிறது. இங்கே 19ம் நூற்றாண்டின் இறுதிகளில் கோலி (koli) எனப்படும் மீனவ மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அப்போது தாராவியை கோலிவாதாஸ் என்று அழைத்து வந்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ தான் பாம்பேவின் (மும்பை) தெற்கு தீபகற்பமாக கூறப்படும் இப்பகுதி சில மாற்றங்கள் கண்டன. அப்போது இங்கே லண்டனை காட்டிலும் பத்து மடங்கு அதிக அளவில் மக்கள் வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பிறகு...

சுதந்திரத்திற்கு பிறகு...

சுதந்திரத்திற்கு பிறகு தான் தாராவி ஒட்டு மொத்த இந்தியாவில் பெரும் சேரியாக உருவானது. இங்கே நகரின் பிற பகுதிகளின் குப்பைகள் கொட்டப்பட்டன, கழிவுகள் நிரப்பப்பட்டன. மும்பை ஒருபுறம் பெரும் நகராக வளர்ந்து வந்தது. மறுபுறம் அந்த வளர்ச்சியின் கழிவுகளை தாங்கிக் கொள்ளும் சேரியாக உறுவார துவங்கியது தாராவி.

மறு உருவாக்கம்!

மறு உருவாக்கம்!

பொருளாதார வசதியின்மை மற்றும் அரசியல் உறுதுணை, உதவிகள் இல்லாத காரணத்தால் வளர்ச்சி என்பது பெரும் கனவாகி போனது தாராவிக்கு.

1997ல் இருந்து தற்போது வரை பல உலக தர நிறுவனங்களுடன் இணைந்து தாராவியை மறு உருவாக்கம் செய்ய அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள் அமைக்கக்க பல ஆயிரம் கோடிகளில் திட்டங்கள் போடப்பட்டன.

ஆனால், அவற்றுள் எத்தனை நூறு சதவிதம் உருவாகின என்பது தெரியவில்லை.

சுகாதார பிரச்சனைகள்!

சுகாதார பிரச்சனைகள்!

சேரி என்றாலே அதன் அர்த்தம், சூழல், தாக்கம் எப்படி இருக்கும் என்று நாம் நன்கே அறிவோம். அதுவே உலகின் மாபெரும் சேரியில் எப்படி இருக்கும் என்று தெரியுமா? மும்பை எனும் பெரும் நகரின் ஒட்டுமொத்த குப்பைகள், கழிவுகள் கொட்டப்படும் இந்த இடத்தில் நாற்றம் உச்சத்தில் இருக்கும்.

சௌகரியமான வாழ்க்கை மட்டுமல்ல, சுவாசம் கூட இருக்காது. காற்றும் மிகவும் மாசுப்பட்டு காணப்படுவதால் நுரையீரல் புற்றுநோய், டிபி, ஆஸ்துமா போன்றவை தாராவியில் வசிக்கும் மக்கள் மத்தியில் காணப்படும் சாதாரண நோய்கள்.

ஒரு கழிவறையை 1450 பேர் பயன்படுத்தும் நிலை தாராவியில் இருந்து வருகிறது. ஒரு நாளுக்கு 4000 தைராய்டு குறையுள்ளவர்களை காண்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கில்லாடி குழந்தைங்க!

கில்லாடி குழந்தைங்க!

தாராவியை சேர்ந்த 13-14 வயது மட்டுமே நிரம்பிய குழந்தைகள் ஆண்டராய்டு செயலியை உருவாக்கியுள்ளனர். இவர்கள் தங்க செயலிக்கான இலச்சினையை எம்.எஸ். பெயிண்ட்டில் உருவாக்கி அசத்தியுள்ளனர். பெண்கள் பாதுகாப்புக்காக, சிறுவர் கல்விக்காக, தண்ணீருக்காக, செயலிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.

வாட்ஸ்-அப்

வாட்ஸ்-அப்

தாராவியில் சொந்தமாக தொழில் செய்து வரும் நபர்கள் பலரும், தங்கள் பொருட்கள் தயாரிப்பு உருவான உடன் வாட்ஸ்-அப் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, படங்களை அனுப்பி பல்க் ஆர்டர்கள் பெற்று வருகிறார்கள். வாட்ஸ்-அப் பயன்படுத்தி தங்கள் தொழிலை பெரிதுப்படுத்தி வருகிறார்கள்.

இன்டர்நேஷனல் ஹிப்-ஹாப்!

இன்டர்நேஷனல் ஹிப்-ஹாப்!

SlumGods என்ற பெயரில் தாராவியில் ஒரு ஹிப்-ஹாப் இசைக்குழு இருக்கிறது. இவர்கள் சர்வதேச ஹிப்-ஹாப் கலைஞர்களுடன் இணைந்து உடனுலழைத்து பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் தங்கர் எனும் நபர் தான் இந்த SllumGods என்ற ஹிப்-ஹாப் இசை குழுவை நிறுவி உள்ளார். ஹிப்-ஹாப் என்பது கற்றுக் கொள்வது அல்ல, உருவாக்கிக் கொள்வது என்று இவர் கூறுகிறார்.

இவர்கள் டோக்கியோவை சேர்ந்த டிஜே சரசா, AKA சில்வர் பாம்ப் பாக்ஸ், போன்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

வருட வருமானம்!

வருட வருமானம்!

தாராவியில் லெதர், டெக்ஸ்டைல்ஸ், பானை உருவாக்குவதல், நகை போன்ற பல தொழில்கள் செய்து வருகிறார்கள். இங்கே தொழில் செய்து வசித்து வரும் மக்களின் ஒட்டுமொத்த மக்களின் ஆண்டு வருமானம் என்பது 665 மில்லியன் டாலர்களில் இருந்து ஒரு பில்லியன் டாலர்களை வரை இருக்கும் என்று சர்வே மூலம் அறிய முடிகிறது.

கலை திருவிழா !

கலை திருவிழா !

தாராவியில் ஒவ்வொரு வருடமும் மூன்று வாரங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சினேகா என்பவரால் 'ஆலி கல்லி பியென்னல்' என்ற கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவில் தாராவியில் வசித்து வரும் மக்களின் கலை திறமைகளை வெளிப்படுத்த படுகின்றன. இது தாராவியில் ஒரு பிரபலமான திருவிழாவாக காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts To Know About Other Side of Dharavai!

Dharavi is one of the most well-known slums in the world. So you think you know everything about Dharavi? Read on to know some interesting facts about this sprawling colony.
Story first published: Wednesday, May 9, 2018, 13:07 [IST]
Desktop Bottom Promotion