உடல் எடையை குறைக்க பின்பற்றப்படும் சில விசித்திர பழக்கங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை குறித்த விழிப்புணர்வு இன்று பெரும்பாலோனோரிடத்தில் வந்து விட்டிருக்கிறது. எல்லாரும் பாதுகாப்பான முறையில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறையை தான் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லையென்றே பதில் கிடைக்கிறது.

எங்கோ பார்த்தது, கேட்டது, படித்ததை வைத்து பல்வேறு முயற்சிகளை எடுத்து உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, சாப்பிடும் முறை, பழக்கங்கள் ஆகியவை மிகுந்த வேறுபாடுகளை கொண்டிருக்கும். ஆகையால் நீங்கள் இந்த முறையை பின்பற்றி உடல் எடையை குறைக்கலாமா? இதனால் வேறு எதாவது பிரச்சனைகள் வந்து விடாதே என்று மருத்துவர்களிடத்தில் தகுந்த ஆலோசனை பெற்றே அதனை பின் தொடர ஆரம்பிக்க வேண்டும்.

அரிசி உணவை தவிர்ப்பேன், தினமும் இரண்டு மணி நேர உடற்பயிற்சி,பாக்கெட் உணவுகளுக்கு நோ என்ற விதிமுறைகளுடன் கூடவே விதவிதமான பெயர்களில் டயட்டுகளை கடைபிடிக்கிறார்கள். ஆனால் உடல் எடையை குறைக்க முற்றிலும் விசித்திரமான அதே சமயம் பயங்கரமான முயற்சிகளும் எடுக்கப்படுகிறது அவற்றில் சிலவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விக்டோரியா காலம் :

விக்டோரியா காலம் :

1830களிலிருந்து 1900வரையிலான காலகட்டத்தை விக்டோரியன் காலம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது தான் மக்கள் தங்களைப் பற்றியும் தங்களது ஆரோக்கியம், அழகு குறித்து கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். பேச ஆரம்பிக்கிறார்கள்.

அந்த காலத்தில் இருந்த பெண்கள் தங்களது இடுப்பப்பகுதி பதினாறு இன்ச் அளவுக்கு இருந்தால் அழகு என்ற எண்ணம் இருந்தது. இதனால் நிறைய மெனக்கெடல்களை எடுத்தார்கள்

Image Courtesy

உயிருள்ள புழுக்கள் :

உயிருள்ள புழுக்கள் :

பெண்கள் மண்புழு முட்டையை மாத்திரை போல விழுங்கி விடுவார்களாம். உள்ளே முட்டை உடைந்து புழு வெளிவரும். பின்னர் அவர்கள் வழக்கம் போல உணவு எடுத்துக் கொள்வார்களாம். இவற்றில் பெரும்பாலும் புழுவே தன் தேவைக்காக எடுத்துக் கொள்ளும். இதனால் அதிக கலோரி சேரும் என்கிற பயம் தேவையில்லை.

இந்த முறை குறித்து பேச்சுவழக்காக சொல்லப்பட்டு வருகிறது என்றாலும் இது உண்மையிலேயே நடந்திருக்கிறதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அதோடு, இந்த முறையை மருத்துவ உலகமும் சாத்தியமில்லை என்றிருக்கிறது.

Image Courtesy

 செலிபிரிட்டி :

செலிபிரிட்டி :

மக்களிடையே புகழ் பெற்றவர்கள், செலிபிரிட்டி அந்தஸ்த்து கிடைத்து விட்டது என்பதற்காகவே எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றில்லாமல் மிகுந்த பொறுப்புணர்வுடன் பேச வேண்டியது அவசியம்.

பாதுகாப்பற்ற, மருத்துவர்கள் பரிந்துரைக்காத மிகவும் ஆபத்தான உடல் எடையை குறைக்கும் யோசனைகளை ஒரு செலிபிரிட்டி வழங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் அது கிம் கர்தஸியன் தான். முதலும் கடைசியுமா இவர் மட்டுமே இந்த முறையை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 வினிகர் :

வினிகர் :

லார்டு பைரோன் என்பவர் கவிஞர் மற்றும் அரசியல் வாதியாக இருந்தார்,அதோடு தன்னுடைய உடல் நலனில் மீது அளவு கடந்த கவனத்தை செலுத்தினார். டயட் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தி, அதனை பின்பற்ற வழி வகை செய்ததும் அவர் தான்.

இவர் வினிகர் டயட் என்ற ஒரு புதுவிதமான டயட்டை பின்பற்றினார். அதன்படி பைரோன் தினமும் வினிகர் குடிப்பார். அதோடு உருளைக்கிழங்கை காரமான தண்ணீரில் ஊறவைத்து உண்பார். இப்படிச் செய்வதால் உடலிலிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறும் என்று நம்பினார். அதோடு தினமும் வினிகர் குடித்ததினால் அவருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்பட்டிருக்கிறது.

எலி மருந்து :

எலி மருந்து :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தப்பழக்கம் இருந்திருக்கிறது உடல் எடையை குறைக்க என்று சொல்லி ஒரு மாத்திரையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதில் மிகவும் ஆபத்தான சில மூலப்பொருட்களை கலந்திர்ந்தார்கள். அவற்றில் ஒன்று தான் அர்சினிக்.

இந்த மருந்து எலியைக் கொல்ல பயன்படுத்தும் ஒரு வகை விஷமாகும். இந்த மாத்திரையை தொடர்ந்தோ அல்லது குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடுத்தால் உங்கள் உயிரையும் பறித்து விடும்.

பிற நோய்கள் :

பிற நோய்கள் :

மரணத்தை அளிப்பதுடன் புற்றுநோய்,கல்லீரல் தொடர்பான நோய்களை உண்டாக்கிடும். இதைச் சாப்பிடுவதால் உங்களது மெட்டபாலிசம் அதிகரிக்கும் இதனால் உணவுகள் விரைவில் செரிமானமாகும் ஆரம்பத்தில் உடல் எடையில் மாற்றங்கள் தெரியும். ஆனால் இது மிகவும் ஆபத்தானது.

இந்தப் பேச்சு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கமோ இதில் ஆர்சினிக் மிகக் குறைவான அளவே சேர்க்கப்பட்டிருக்கிறது அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்கிறார்கள்.

துப்பிடுங்க :

துப்பிடுங்க :

இந்த டயட் அறிமுகப்படுத்தப்பட்டது 20வது நூற்றாண்டின் துவக்கத்தில்,ஹோரேஸ் ப்ளட்சர் என்பவர் வித்யாசமான டயட்டினை அறிமுகப்படுத்தினார். அதிகமாக மென்று கடித்து சாப்பிடுவது தான் அந்த டயட்டின் சாராம்சம்.

அவர் அறிமுகப்படுத்தியதில் அவரின் பெயராலேயே ப்ளட்சரிசம் டயட் என்று இதற்கு பெயரும் உண்டு. அதுவும் இந்த டயட் பின்பற்ற சில விதிமுறைகளை சொல்கிறார் ப்ளட்சர்.

அதாவது உணவினை கடித்து மென்று அதன் சாறை மட்டுமே விழுங்க வேண்டும் பிறகு மீத உணவினை வெளியில் துப்பிட வேண்டுமாம்!

சோப் :

சோப் :

இன்றைய விளம்பர யுத்திகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை, இந்த பழக்கம் 1920களிலிருந்தே ஆரம்பித்து விட்டிருக்கிறது. அப்போது வெளிவந்த நாளிதழில் ஒரு விளம்பரம், கொழுப்பையும்,முதிர்ச்சியையும் கழுவிடுங்கள் என்ற அர்தத்தில் அந்த விளம்பரம் இருக்கிறது.

டயட், எக்சர்சைஸ் எதுவும் தேவையில்லை இந்த சோப்பினை பயன்படுத்தினால் போதும் உங்கள் உடலிலிருக்கும் கொழுப்பு தானாக கரைந்திடும் என்று சொன்னார்கள். இந்த பிஸ்னஸுக்கு தொழில் போட்டி வேறு இருந்ததாம்.

Image Courtesy

 மூச்சுக்காற்று :

மூச்சுக்காற்று :

எல்லாவற்றையும் விட சற்று பயங்கரமானதாக இருக்கிறது இந்த டயட். அதாவது இந்த டயட் மன ரீதியாக உங்களை தாக்குகிறது. உயிர் வாழத்தேவையான அத்தியாவசியமான ஒன்று மூச்சுக்காற்று, இதனை எந்த கட்டுப்பாடில்லாமல் வரையறையின்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதனை முறைபடுத்தினால்?

கேட்கவே சற்று அதிர்ச்சியாக இருக்கிறது தானே....

Image Courtesy

ரப்பர் :

ரப்பர் :

இதற்கும் பயங்கர போட்டி நிலவியிருக்கிறது. உழைப்பில்லாமல் உங்களுக்கு ஊதியம் என்று சொன்னால் தான் நம் மக்கள் அடித்துபிடித்து வாங்கிவிடுவார்களே.... இந்த பழக்கம் இப்போதல்ல நம்முடைய மூதாதையர்களுக்கும் இருந்திருக்கிறது .

அதாவது எளாஸ்டிக் ரப்பர் போன்ற ஆடையை கொடுப்பார்களாம், அது நமக்கு மிகவும் டயட்டாக இருக்கும் அதனை அணிந்து கொள்ள வேண்டும். இதனால் அந்த பகுதியில் இருக்கக்கூடிய கூடுதல் கலோரி எரிக்கப்பட்டு அவை வியர்வையாக வெளியாகும் என்று சொல்ல.... வாங்கி குவித்துவிட்டிருக்கிறார்கள் மக்கள்.

எலக்ட்ரிக் மெஷின் :

எலக்ட்ரிக் மெஷின் :

1950 களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனம் அலுமினியம் மற்றும் ரப்பரினால் செய்யப்பட்டிருக்கும். கரெண்ட் கனெக்‌ஷன் கொடுத்தால் வைப்ரேட் ஆகிறது. உடலில் எந்த பகுதியில் வைத்தாலும் அது வேகமாக வைப்ரேட் ஆகிறது.

இப்படி வைப்ரேட் ஆவதினால் அங்கிருக்கும் கலோரி கறைக்கப்படும் என்று சொல்லப்பட்டது. டயட்,எக்ஸர்ஸைஸ் என்று எதுவும் தேவையில்லை ஈஸியா உடல் எடையை குறைக்கலாம் என்று சொன்னால் போதுமே....

Image Courtesy

இதெல்லாம் தேவையா! :

இதெல்லாம் தேவையா! :

இன்றைய நவீன யுகத்தில் பின்பற்றப்படும் மிக விசித்திரமான டயட் என்றால் அது இது தான். அதாவது காஸ்மட்டிக் மருத்துவர்கள் உங்களது நாக்கில் ஒரு பேட்ச் போல வைத்து தையல் போட்டு விடுகிறார்கள். வலியெடுக்கும், நாக்கில் அதனை வைத்திருப்பதால் சரியாக உணவைச் சாப்பிட முடியாது.

இது வைத்ததே அதற்காகத்தானே.... ஆம், உணவு எடுத்துக் கொள்வதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ஐடியா. வலிக்கிறது அதனால் சாப்பாடு வேண்டும் பேசாமல் திட உணவுகளை விட திரவ உணவுகளை எடுத்துக் கொள்கிறேன் என்று சென்றுவிடுவோம் அல்லவா? இந்த முறையினால் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 20 பவுண்ட் வரை குறைக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Extreme Shocking Weight Loss Techniques

Extreme Shocking Weight Loss Techniques
Story first published: Wednesday, February 28, 2018, 11:50 [IST]