For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சோலார் மின்சாரம் எடுத்தா, சூரிய பகவான் கோச்சுப்பார்... - பா.ஜ.க எம்.பி!?

|

பா.ஜ.க என்றாலே தென் மாநிலங்களில் கொஞ்சம் கூடுதல் கடுப்பு இருக்க தான் செய்கிறது. இதை நாம் மறுக்க இயலாது. அதற்கு சில வகியைல் அவர்களே காரணமாகவும் இருக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் யாரோ விரித்த வலைகளிலும் அவர்கள் வந்து சிக்கிக் கொள்வது தான் பரிதாபகரமான விஷயம்.

ஆம்! தாங்கள் செய்த செயல், கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பினால் பரவாயில்லை. யாரோ ஒருவர், என்றோ ஒரு நாள், எங்கோ செய்த செயல்களுக்கு கூட, அட பா.ஜ.க எம்.பி தான்பா அப்படி சொன்னார் என்று ஒரு போலியான செய்தியை தலைப்பிட்டு சமூக தளங்களில் பரப்பவும் ஒரு சிறிய கும்பல் இருக்க தான் செய்கிறது.

Did BJP MP Ashok Saxena Said Sun Get Angry, If We Generate Solar Energy?

அப்படியாக கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக பரவி வரும் ஒரே சம்பவத்தை கொண்ட இரண்டு செய்திகள் இது. 1) சூரிய ஒளி மின்சாரம் எனப்படும் சோலார் எனர்ஜியை எடுத்தால் சூரிய பகவான் கோபித்துக் கொள்வார் என பா.ஜ.க எம்.பி அசோக் சக்சேனா கூறினார். 2) சக்சேனா கூறிய இந்த தகவலை கொண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள் சோலார் பேனல்களை அடித்து உடைத்துக் கொண்டிருக்கும் காட்சி (வீடியோ).

பா.ஜ.க வின் பாராளுமன்ற எம்.பி அசோக் சக்சேனா நிஜமாகவே இப்படி கூறினார? இந்த பெயரில் பரவி வரும் அந்த காணொளிப்பதிவு உண்மையில் எங்க பதிவானது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆம் ஆத்மி கட்சி!

ஆம் ஆத்மி கட்சி!

ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ காட்சி பதிவானது. அதில், கும்பலாக வந்த மக்கள் மிக கோபமாகவும் ஆத்திரத்துடனும் சோலார் பேனல்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

ஸ்டேடஸ்!

ஸ்டேடஸ்!

இந்த வீடியோ காட்சியை பதிவிட்டு, அத்துடன் அசோக் சக்சேனா கூறியதை கேட்டு, சூரிய பகவான் கோபித்துக் கொள்வார் என பா.ஜ.க ஆதரவாளர்கள் சோலார் பேனல்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஸ்டேடஸ் அப்டேட் செய்திருந்தனர்.

அப்படி ஒரு ஆளே இல்லை...

அப்படி ஒரு ஆளே இல்லை...

இந்த பதிவில் இருக்கும் கூத்து என்னவென்றால்... பா.ஜ.க. கட்சியில் மொத்தம் இரண்டு எம்.பி.க்கள் உள்ளனர். ஒருவர் அசோக் குமார் தோஹரே (Ashok Kumar Doharey) இவர் உ.பியை சேர்ந்தவர். மற்றொருவர் அசோக் மகாதோராவ் நேடே (Ashok Mahadeorao Nete) இவர் மகாராஸ்டிராவை சேர்ந்த லோக் சபா எம்.பி.

இந்த இருவரை தவிர அசோக் சக்சேனா என பா.ஜ.க எம்.பி இல்லவே இல்லை என தகவல்கள் கூறுகின்றன.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

உண்மையில் அந்த வீடியோ காட்சியில் பதிவான நிகழ்வு என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் மகாராஸ்டிராவில் சோலார் பேனல்களை மக்கள் கூட்டமாக வந்து அடித்து நொறுக்கினார்கள். இது உண்மை சம்பவம் தான். ஆனால், அதற்கான காரணம் சூரிய பகவான் சோலார் எனர்ஜியை எடுத்தால் கோபித்துக் கொள்வார் என்பதல்ல.

சம்பள பிரச்சனை!

தங்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை சரிவர அளிக்கவில்லை என்பதால், கடுங்கோபம் கோபம் பணியாளர்கள். தாங்கள் வேலை செய்த அந்த சோலார் பேனல்களை அடித்து நொறுக்கினார்கள் என்று க்ளைமேட் சாமுராய் என்ற யூடியூப் செய்தி சேனலில் வெளியாகி இருக்கிறது.

நிருபர் பகிர்வு!

இந்த செய்தி குறித்து என்.டி.டி.வி செய்தி நிருபரான கர்ஜி ராவத் என்பவரும் வருத்தம் தெரிவித்து, இந்த வீடியோவை பகிர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் அனுதாபங்களை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றளவிலும்...

இன்றளவிலும்...

போலியான செய்திகள் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக தளங்களில் மிக எளிதாக காட்டுத்தீ போல பரவுகிறது. ஆனால், இது ஒரு குறுகிய காலக்கட்டத்துடன் நின்றுவிடுவதில்லை. ஆறுமாதம், ஒரு வருடம் என அடிக்கடி, அவ்வப்போது சொந்த கற்பனை, திரைக்கதை அம்சங்களுடன் அப்க்ரேட் ஆகிப் பரவிக் கொண்டே இருக்கிறது என்பது தான் சோகமான உண்மை.

Image Source: Facebook

எப்படி தடுப்பது?

எப்படி தடுப்பது?

கூகுளில் உணவகங்களை தேடுகவதற்கு இணையாக, ஒரு செய்தி வந்தால், அதை பகிரும் முன், அது உண்மையா? போலியா என்று ஆராய்ந்து, அதற்கான ஆதாரங்களை சரிப் பார்த்துக் கொண்டால் இப்படியான போலி செய்துகள் வைரல் ஆவது தடுக்க இயலும். வெளிப்படுவது கோபமாக இருப்பினும், அது உண்மையான கருத்து, சம்பவத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did BJP MP Ashok Saxena Said Sun Get Angry, If We Generate Solar Energy?

Fact Check: There is an info spreads so long time in social media says, BJP MP Ashok Saxena Said Sun Get Angry, If We Generate Solar Energy? and also BJP Workers Break Solar Panels Because It Made Sun God Angry? Here check it out either it is true or false.
Story first published: Saturday, November 17, 2018, 10:13 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more