ஐ.பி.எல் பார்ட்டியில் குடித்து கும்மாளம் அடித்த பிரபலங்கள் - சர்ச்சைப் புகைப்படங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஐபில் போட்டிகளில் வீரர்கள் மைதானத்தில் மட்டும் தான் ஆடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம். அதை காட்டிலும் சிறப்பாக மாடல்களுடன், நடிகைகளுடன் நமது வீரர்கள் ஆடியுள்ளனர். இதை எந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப முடியாது எனிலும், அவர்களது ஆட்டத்திற்கு அத்தாட்சியாக புகைப்படங்கள் இருக்கின்றன.

ஐபிஎல் சர்ச்சை புகைப்படங்கள் என்று ஒரு தொகுப்பை எடுத்து பார்த்தால், அதில் அதிகமாக இடம் பெற்றிருப்பவர் யுவி தான். ப்ரீத்தி ஜிந்தாவுடன் காதல் கிசுகிசு, மாடல்களுடன் பார்ட்டி புகைப்படம், டிஜே மியூஸிக் ஆட்டம் என ஆள் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லலித் மோடி!

லலித் மோடி!

ஊழல் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங் காரணத்தால் ஐபில் மற்றும் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட லலித் மோடி, ஐபிஎல் பார்டி ஒன்றில் பெண் பிரபலம் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட இந்த படம் சர்ச்சைக்குள்ளானது.

லவ்வோ லவ்!

லவ்வோ லவ்!

யுவராஜ் சிங்கும், ப்ரீத்தி ஜிந்தாவும் காதலித்து வந்தனர் என்ற புரளி, ஐபில் எல் துவங்கிய நாளில் இருந்தே காணப்பட்டது. ப்ரீத்தி ஜிந்தா உரிமையாளரான கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவர் விளையாடிக் கொண்டிருந்தார், அந்த தருணத்தில் இவர்களது நெருக்கமான படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின.

க்றிஸ் கெயில்!

க்றிஸ் கெயில்!

கிரிக்கெட் பந்துகளை அடித்து ஆடுவதில் மட்டுமல்ல, பெண்களின் மனதை கவர்ந்து ஆடுவதிலும் க்றிஸ் கெயில் வல்லவர். கிட்டத்தட்ட அவுக ஊருல அவரு பெரிய ப்ளேபாய் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அண்ணாச்சிக்கு பெண்கள் என்றால் அம்புட்டு பிரியம்.

ஐபிஎல் பார்ட்டி ஒன்றில் ஏகபோதையில் பெண்களை கட்டியணைத்துக் கொண்டிருக்கும் க்றிஸ். அந்த பெண்களுக்கு பின்னாடி நின்றுக் கொண்டிருப்பது நம்ம அய்யாசாமி இளம் சுழல் புயல் சஹால் போலவே இருக்கிறதே?!?!?!?

ஷாருக்கான்!

ஷாருக்கான்!

பல வருடங்களாக ஷாருக்கான் - பிரியங்கா மத்தியில் ஒரு 'இது' இருக்கிறது என பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இது, சில வருடங்களுக்கு முன் ஐபிஎல் பார்டி ஒன்றில் ஷாருக் - பிரியங்கா சோப்ரா ஜோடி செம்ம ஜாலி மூடில் இருந்த போது எடுக்கப்பட்ட படம். பிரியங்கா சோப்ரா கையில் இருப்பது ஆரஞ்சு ஜூஸ் தானே?!!?!

தீராத விளையாட்டு பிள்ளை...

தீராத விளையாட்டு பிள்ளை...

இந்தியாவுக்கு கிடைத்த முதல் சூப்பர் ஆல்ரவுண்டர் என்று யுவராஜ் சிங்கை கூறலாம். பக்கா ஃபீல்டிங், ஹிட்டர் பேட்ஸ்மேன், சுழல் பந்து போட்டு விக்கெட்டும் சாய்ப்பவர். ஆனால், இப்படியும் யுவி விக்கெட் சாய்ப்பார் என்று தேர்வுக் குழுவினர் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கத்ரீனா!

கத்ரீனா!

அரபு நாடே அசந்து நிற்கும் அழகி... கத்ரீனா ஐபில் பார்ட்டி நிகழ்வில் கொண்ட போது. எம்.டிவி தொகுப்பாளினி ஒருவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படம். ஓரமா உட்கார்ந்து இந்திய சுழல் ஜான்பவான் பெப்ஸி குடிச்சுட்டு இருக்காரு. கத்ரீனா பக்கத்துல இருக்கவர் கைல இருக்கிறது கூட கிரேப்ஸ் ஜூஸ் தானுங்க!

மலை, மல்லையா!

மலை, மல்லையா!

விஜய் மல்லையாவிற்கு பெண்கள் என்றாலே ஒரு காந்த சக்தி வந்துவிடுகிறது. எந்த ஒரு கவலையும் இல்லாமல், எத்தனை கேமராக்கள் இருந்தாலும் மருத்துவ முத்தம் தருவதில் வல்லவர் விஜய் மல்லையா. இவர் இப்படிக்கா சென்றால், இவர் மகன் சித்தார்த் மல்லையா அப்படிக்கா டாப் லிஸ்ட் நடிகைகளுடன் சென்றுக் கொண்டிருப்பார். இவர்கள் இருவரும் நாட்டை விட்டு சென்ற பிறகு, ஐபில் பார்ட்டிகள் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அக்தர்!

அக்தர்!

அக்தரின் வேகத்திற்கு கிரிக்கெட் பிட்சு மட்டுமல்ல, பார்ட்டி கூட தாக்குப்பிடிக்க முடியாது போலவே. அக்தர் இந்த அளவிற்கு சிரித்து வேறெங்கும் பார்க்க முடியாது. அண்ணன் மைதானத்தில் செம்ம கோபமாக இருப்பார், பார்ட்டியில் செம்ம போதையாக இருக்கிறார். ஆரம்பக் காலக்கட்ட ஐபிஎல் பார்ட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

பூனை மில்க் மொமன்ட்!

பூனை மில்க் மொமன்ட்!

ஐபில் பார்ட்டி நைட்டில் விராத் கோலியுமா? என்று நீங்கள் கருதலாம். ஆனாலும், நம்ம கேப்டன், நல்ல கேப்டன்.பெண்கள் தான் அவரை சூழ்ந்து இருக்கிறார்களே தவிர, அவர் தண்ணி பாட்டிலை (மெய்யாலுமே) தான் கையில் வைத்திருக்கிறார்.

யுவி எம்புட்டு...

யுவி எம்புட்டு...

பார்ட்டி செய்வதில் யுவியை மிஞ்ச ஆளே இல்லை (அந்த காலத்தில்). மற்றுமொரு பார்ட்டியில் செம்ம ஜாலியாக டிஜே மியூசிக்கில் நனைந்து கொண்டிருக்கும் யுவராஜ் சிங்.

All Image Source: Google

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dark Side: Controversial Photos From IPL Parties!

Dark Side: Controversial Photos From IPL Parties!