இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் தான் எதிரிகளாக இருப்பார்கள்..

Posted By:
Subscribe to Boldsky

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்.

Daily Horoscope 23 March 2018

அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அப்படி நடந்துகொண்டால்தான் அவர்களுக்கு திருப்தி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சொத்து சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். சமயோகித பேச்சுக்களால் காரிய சித்தி பெறுவீர்கள். அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு

அதிர்ஷ்ட எண் - 1

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

ரிஷபம்

ரிஷபம்

முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனையின் மூலம் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை - தெற்கு

அதிர்ஷ்ட எண் - 5

அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

மிதுனம்

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் பொறாமையுடன் செயல்படவும். சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் தோன்றும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை - மேற்கு

அதிர்ஷ்ட எண் - 6

அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை

கடகம்

கடகம்

மனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். சமூக சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மறுமணத்திற்கு வரன் தேடுவதற்கான சரியான காலம் இது. மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். கல்வி பயில்பவர்களுக்கு தெளிவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை - வடக்கு

அதிர்ஷ்ட எண் - 9

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

சிம்மம்

சிம்மம்

நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். வாகனம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசுத்தரப்பு உதவிகள் கிடைக்கும். வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு

அதிர்ஷ்ட எண் - 3

அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

கன்னி

கன்னி

மூத்த சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். நற்செயல்களால் பாராட்டப்படுவீர்கள். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. புனித யாத்திரை சென்று மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை - தெற்கு

அதிர்ஷ்ட எண் - 8

அதிர்ஷ்ட நிறம் - இளநீலம்

துலாம்

துலாம்

பயணங்களில் கவனம் தேவை. சந்திராஷ்டமம் தொடர்வதால் கூட்டாளிகளிடம் பொறுமையைக் கடைபிடிக்கவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை - மேற்கு

அதிர்ஷ்ட எண் - 4

அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்

விருச்சிகம்

விருச்சிகம்

தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. நற்பெயருக்கு கலங்கம் உண்டாகும் சூழல் அமையும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை - வடக்கு

அதிர்ஷ்ட எண் - 1

அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

தனுசு

தனுசு

நண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். தொழிலின் மூலம் பிரபலம் அடைவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். மனைவியின் மூலம் சுப விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு

அதிர்ஷ்ட எண் - 9

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

மகரம்

மகரம்

நெருங்கிய உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகும். கலைஞர்களுக்கு பெருமை உண்டாகும். நினைவாற்றல் மேம்படும். அயல்நாட்டு பயணங்களில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை - தெற்கு

அதிர்ஷ்ட எண் - 6

அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை

கும்பம்

கும்பம்

தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் வந்தடையும். பூமி சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். உறவினர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் வரும். நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றும்.

அதிர்ஷ்ட திசை - மேற்கு

அதிர்ஷ்ட எண் - 2

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

மீனம்

மீனம்

எதிர்கால பலன் கருதி, புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் பெருமைப்படக்கூடிய செய்திகள் வந்தடையும். பூர்விக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை - வடக்கு

அதிர்ஷ்ட எண் - 4

அதிர்ஷ்ட நிறம் - ஊதாநிறம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope 23 March 2018

Astro is playing a important role of Hinduism. People believes the actions of 12 planets
Story first published: Friday, March 23, 2018, 6:05 [IST]