எந்தெந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு என்ன கலர் ஆடை அணியணும்னு தெரியுமா?

Posted By: Lekhaka
Subscribe to Boldsky

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அதில் சிலரோ தங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறங்களைப் பார்த்து அந்த நிற உடைகளையே அணிந்து செல்வார்கள். அப்படி இன்றைக்கு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கும் முறையே இளம்பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, வெள்ளை, ஆரஞ்சு, வெளிர் மஞ்சள், நீலம், பல வண்ணம், சாம்பல், அடர் மஞ்சள், வெளிர் நீலம் ஆகிய நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கால்நடைகள் சம்பந்தமாக எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமன் உறவுகள். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும்.

 • அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் - 5
 • அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை
ரிஷபம்

ரிஷபம்

நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புத்திரர்களின் வழியில் சுப செய்திகள் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவு உண்டாகும். வாதத்திறமையால் லாபம் அடைவீர்கள். அந்நியர்களால் தன லாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

 • அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு
 • அதிர்ஷ்ட எண் - 2
 • அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
மிதுனம்

மிதுனம்

தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீர்வழி தொழில் செய்பவகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிட்டும்.

 • அதிர்ஷ்ட திசை- தென்கிழக்கு
 • அதிர்ஷ்ட எண்- 1
 • அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு
கடகம்

கடகம்

தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். ஆன்மிகப் பணிகள் மேற்கெள்வதால் கீர்த்தி வேண்டும். இளைய சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். புதியவற்றைக் கண்டறிவதற்கான முயற்சிகள் அனுகூலமான பலன்களைத் தரும்.

 • அதிர்ஷ்ட திசை- தெற்கு
 • அதிர்ஷ்ட எண்- 5
 • அதிர்ஷ்ட நிறம்- பச்சைநிறம்
சிம்மம்

சிம்மம்

வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். வாக்குறுதிகளைத் தவிர்க்கவும்.

 • அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு
 • அதிர்ஷ்ட எண் - 6
 • அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
கன்னி

கன்னி

வீட்டிற்கு தேவையான புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இசைக்கலைஞர்களுக்கு லாபகரமான நாள். கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனக்கவலைகள் நீங்கும்.

 • அதிர்ஷ்ட திசை - வடமேற்கு
 • அதிர்ஷ்ட எண் - 9
 • அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
துலாம்

துலாம்

பிறரிடம் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் சாதகமான முடிவைத் தரும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் கூடுதல் பொறுப்புகளால் பணிச்சுமை அதிகரிக்கும். கண்ணில் சில உபாதைகள் ஏற்பட்டு மறையும்.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் - 3
 • அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்
விருச்சிகம்

விருச்சிகம்

புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். தந்தையிடம் அமைதியை கடைபிடிக்கவும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். பூர்விக சொத்துக்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் - 8
 • அதிர்ஷ்ட நிறம் - நீலநிறம்
தனுசு

தனுசு

கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செய்யும் பணிகளில் கவனம் தேவை. தந்தையைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

 • அதிர்ஷ்ட திசை - வடக்கு
 • அதிர்ஷ்ட எண் - 7
 • அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்
மகரம்

மகரம்

இளைய உடன்பிறப்புகளால் சுப விரயம் உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளால் பாராட்டப்படுவீர்கள். எதிர் பாலினத்தவர்களால் சாதகமற்ற சூழல் ஏற்படும். ஆராய்ச்சிப்பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க கால தாமதமாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

 • அதிர்ஷ்ட திசை - வடமேற்கு
 • அதிர்ஷ்ட எண் - 4
 • அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்
கும்பம்

கும்பம்

தூரதேச பயணங்களால் சாதகமான சூழல் அமையும். மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் பேசவும். பொறுமையுடன் அந்நியர்களால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ளவும். தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.

 • அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு
 • அதிர்ஷ்ட எண் - 3
 • அதிர்ஷ்ட நிறம் - அடர் மஞ்சள்
மீனம்

மீனம்

பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அரசு உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கான சூழல் உண்டாகலாம். மனதில் காதல் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் தோன்றும். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.

 • அதிர்ஷ்ட திசை - தெற்கு
 • அதிர்ஷ்ட எண் - 8
 • அதிர்ஷ்ட நிறம் - மிதமான நீலம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

daily horoscope 20.3.18

astro is playing a important role of Hinduism. People believes the actions of 12 planets