இன்னைக்கு அதிர்ஷ்ட தேவதை அருள் தரப்போகும் அந்த மூன்று ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

daily horoscope 1.7.18, 1.7.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

daily horoscope 1.7.18

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் பொருள் சேர்க்கை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணத்திற்காக இதுவரை எடுத்து வந்த முயற்சிகள் கைகூடி வரும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால், தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் மனம் நாடிச் செல்லும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

முக்கியப் பொறுப்புகளில் வேலையில் உளள்வர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சுய தொழில் செய்பவராக இருந்தால், தொழிலில் உங்களுக்கு உயர்வு கிடைக்கும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவு பெருகும். வெளிநாட்டு தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு தொழில் முயற்சிகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

எதிர்காலம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் உங்களுக்கு மேலோங்கி நிற்கும். நீங்கள் சந்திக்கும் புதிய நபர்களின் மூலமாக, உங்களுக்கு தேவையில்லாத சின்ன சின்ன பிரச்னைகள் உண்டாகும். உங்களுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் மந்த நிலை ஏற்படும். வாகனப் போக்குவத்தில் கொஞ்சம் கவனம் தேவை. தொழிலில் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 7 ஆகவும் அதிர்ஷ்ட திசை தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறம் பழுப்பு நிறமாகவும் இருக்கும்.

கடகம்

கடகம்

நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு பேரும் புகழும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய சிந்தனையின் போக்கில், கொஞ்சம் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலமாக, உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய முழு அறிவுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

முக்கியப் பொறுப்பில் பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களுடன் வெளியூா் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருந்தது.

 கன்னி

கன்னி

வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். நிர்வாகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையால் பேரும் புகழும் உண்டாகும். பொது சுவைகளில் ஈடுபடுகிறவர்கள் எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

வாடிக்கையாளர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அதனால் உங்களுடைய தனலாபம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். எதையும் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றலால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களின் மூலமும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக, எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உழைப்புக்குற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டி்ல சகோரதரர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

தனுசு

தனுசு

பயணங்களின் மூலம் நினைத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கினில் மாற்றம் உண்டாகும். உடல் சோர்வின் காரணமாக எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.

மகரம்

மகரம்

பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனதில் தேங்கியிருந்த கவலைகளை தூக்கி எறிந்துவிட்டு மகிழ்ச்சியாக பயணிப்பீர்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமண முயற்சிகள் கைகூடும். வரன்கள் வந்துசேரும். வாகனச் சேர்க்கை ஏற்படும். திறமையின் காரணமாக புதிய பொறுப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

இன்றைக்கு எந்த காரியத்தை எடுத்தாலும் கொஞ்சம் இழுபறியாகவே போகும். ஆனாலும் இதற்கு முன் நீங்கள் பார்த்த வுலையின் வெற்றியால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடன் தொல்லைகள் உண்டாகும். சரியான நேரத்தில் கடனைத் திருப்பித் தர முடியாததால் பிறரின் மன வருத்தத்துக்கு ஆளாக நேரிடும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

மீனம்

மீனம்

பொதுக்கூட்டங்கள் மற்றும் பொது வெளிகளில் உங்களுடைய பேச்சு இன்று பாராட்டுக்கள் வந்து குவியும். இதுவரை இருந்து வந்த எல்லா பிரச்னைகளுக்கும் குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவை எடுப்பீர்கள். துன்பங்கள் நீங்கி, நிம்மதி உண்டாகும். புதுவித தொழிற்பயிற்சிகளில் ஈடுபட்டு, சோதனை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கும் இன்று சாதகமான சூழலே காணப்படும். இன்றைக்கு அதிர்ஷ்டம் தரும் திசையாக மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 4ம் அதிர்ஷ்டம் தரும் நிறமாக நீல நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, July 1, 2018, 7:00 [IST]
Desktop Bottom Promotion