பண்டைய இந்திய அரசு குடும்பங்களை ஆட்டிப்படைத்த வினோதமான ஆசைகள்!

By: Staff
Subscribe to Boldsky
பண்டைய அரச குடும்பங்களின் அபரிமிதமான ஆசைகள்..!!

வீரம் பொருந்தியிருந்தாலும் கூட, அரசர்கள் என்றுமே முரட்டுத்தனமாக இருப்பார்கள். வரலாற்றில் இடம்பெற்ற பெரும்பாலான அரசர்கள் தாங்கள் வெற்றிகொண்ட எதிரி நாட்டு அரசிகளை சிறைப்பிடித்து தங்கள் அந்தபுரத்தில் அடைத்து இச்சை வேட்கையை தீர்த்துக் கொண்டதற்கான ஆதாரங்கள் அதிகமாகவே இருக்கின்றது. தென்னிந்தியாவை காட்டிலும், வட இந்திய அரசர்கள் இத்தகையை செயலில் அதிக ஆர்வம் காட்டியிருந்தது வரலாற்று சுவடுகள் மூலம் அறியப்படுகிறது.

அந்தபுரம், செக்ஸ், பெண் மோகம் மட்டுமின்றி, பொருள் சார்ந்தும், தனது ஆதிக்கம் சார்ந்தும் என சில இந்திய அரசர்களிடம் வேறுசில மோகங்களும் அதிகமாக இருந்ததுள்ளது. அப்படியாக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த சில இந்திய அரசர்கள் நால்வர் குறித்து தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்.

நகை, செல்வாக்கு, அரசுரிமை மற்றும் உண்மையான காதல் என்று இந்த நால்வரும் நான்கு வகைகளில் வரலாற்றில் இடம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூபீந்தர் சிங்!

பூபீந்தர் சிங்!

வினோதமான ஆர்வம் கொண்டிருந்த இந்திய அரசர்களை குறித்து பேசும் போது, நிச்சயம் பாட்டியாலாவின் மகாராஜாவானா பூபீந்தர் சிங் தான் முதல் ஆளாக நினைவுக்கு வருகிறார். இவருக்கு வைர நெக்லஸ் மீது வினோதமான ஈர்ப்பும், பேரார்வமும் நிறைந்திருந்தது. இவர் உலகிலேயே விலை உயர்ந்ததுஎன்று கருதப்பட்ட 25 மில்லியன் டாலர் மதிப்பிலான வைர நெக்லஸ் ஒன்றை அணிந்து வந்தார்.

Image Source: wikipedia

சொந்த விமானம்!

சொந்த விமானம்!

இவர் தான் இந்தியாவிலேயே விமானம் வாங்கிய முதல் ஆள். தான் வாங்கிய விமானத்திற்காக தனியாக ரன்வே அமைத்தார். இவர் வருடம் ஒருமுறை வைர நெக்லஸ் மட்டுமே அணிந்து ஒரு நாள் முழுக்க இருப்பார். அதாவது, வேறு எந்த உடையும் அணியாமல் தனது மாரில் வைர நெக்லஸ் மட்டும் அணிந்து கொள்வார். இதன்மூலமாக தனது விறைப்பு பிறப்புறுப்பு ஆரோக்கியம் மேம்படும் என்று கருதினார் பூபீந்தர் சிங் மகாராஜா.

Image Source: wikipedia

காமம்!

காமம்!

தனது அந்தபுரத்தில் இருந்த பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மட்டுமே தனி மருத்துவ குழு வைத்திருந்தார். காமத்தில் தீரா தாகம் கொண்டிருந்த இவரது அந்தபுரத்தில் 350 பெண்கள் இருந்ததாகவும். அவர்கள் இவர் உடலுறவு ரீதியாக மிகவும் டார்ச்சர் செய்ததாகவும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

கடைசி நிஸாம்!

கடைசி நிஸாம்!

மிர் ஒஸ்மான் அலி கான், இவர் தான் ஐதராபாத் கடைசி நிஸாம். 1937ல் உலகின் முதல் பணக்காரர் என்று இவரது பெயர் டைம் பத்திரிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது இவர் தனது வங்கி கணக்கில் இரண்டு பில்லியன் டாலர்கள் வைத்திருந்தாராம். இது அன்றைய அமெரிக்க பொருளாதாரத்தில் இரண்டு சதவிதம் என்று கூறப்பட்டது.

Image Source: wikipedia

வைரம்!

வைரம்!

இவர் மூர்க்க குணத்தின் மறுவடிவமாக இருந்தார் என்றும். உலகின் விலை உயர்ந்த வைரத்தில் ஐந்தாவதாக கருதப்பட்ட 200 மில்லியன் டாலர் மதிப்பிலான வைரத்தை இவர் வாங்கி வெறும் பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார். இப்போது இந்த வைரம் இந்த அரசாள கையகப்படுத்தப்பட்டு, அரசு உடைமையாக்கப்பட்டுள்ளது.

Image Source: wikipedia

ராணியின் சாபம்!

ராணியின் சாபம்!

மைசூர் ராஜ்ஜியத்தை, மைசூர் அரசரை கொண்டு கைப்பற்றியது உடையார் அரசு. அப்போது மைசூர் அரசி எப்படியோ தப்பித்து சென்றார். ஆனால், அவர் தப்பித்த சென்ற வேகத்திலேயே சில நாட்களில் பிடித்துவிட்டனர். வரலாற்றில் பல ராணிகள் முயன்றது போலவே, இவரும் தண்டனை பெறும் முன்னர் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்தார்.

Image Source: wikipedia

சாபம்!

சாபம்!

தான் இறக்கும் முன்னர், உடையார் குடும்பத்திற்கு வாரிசே அமையாது, வாரிசற்று போவார்கள் என்று சபித்தார் அந்த ராணி. இந்த சாபத்தை நீக்க உடையர் குடும்பம் பல வழிகளில் முயன்றனர். அனால், அவர்களால் இந்த சாபத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை. அந்த ராணியின் சிலையை வைத்து வணங்கியும் வந்தனர். ஆனால், சாபத்தை போலவே, அவர்களுக்கு வாரிசு பிறக்காமல் போனது. இன்றளவும் அந்த ராணியின் சிலை வணங்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

Image Source: wikipedia

ராயல் காதல்!

ராயல் காதல்!

முமல், ராஜ்புட் குடும்பத்தை சேர்ந்த மிக அழகான இளவரசி. இவர் தனக்கு வரப்போகும் கணவர் மிகவும் தைரியமான சாதூர்யமாக செயற்பட கூடியவராக இருக்க வேண்டும் என்று கருதினார். இதனால், தனது ஏழு சகோதரிகளுடன் சேர்ந்து ஒரு மாய பொறியை வைத்தார். இதை உமர் கோட் (இன்றைய பாகிஸ்தான்) பகுதியை சேர்ந்த ரானா மகேந்திர வெற்றிகரமாக கடந்து வந்தார். இதன் மூலமாகவே இவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் மலர்ந்தது.

Image Source: blogspot

தாமதம்!

தாமதம்!

மகேந்திரா தனது ஒட்டகத்தின் மூலமாக தனது காதலியை காண ஒவ்வொரு நாளும் பயணித்து வந்தார். ஆனால், முமலை காண செல்வதை பிடிக்காத இவரது பெற்றோர் அந்த ஒட்டகத்தின் கால்களை வெட்டினார்கள். பிறகு, மீண்டும் வேறொரு ஒட்டகத்தை எடுத்துக் கொண்டு முமலை காண ஜெய்சால்மரிலிருந்து, பார்மர் சென்றார். இளவரசனுக்காக காத்திருந்த முமல், தனது சகோதரிகளுடன் விளையாடி சோர்ந்து உறங்கியே போனார்.

Image Source:rajputana.myewebsite

தற்கொலை!

தற்கொலை!

தாமதமாக வந்து சேர்ந்த மகேந்திரா முமல் என்று கருதி உறங்கிக் கொண்டிருந்த வரது சகோதரியை தூக்கி சென்று விட்டார். முமல் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கருதி சிதையில் குதித்து உயிர்துறந்தார். ஜெய்சால்மர் திரும்பிய பின்னரே இந்த செய்தி அறிந்த மகேந்திரா வேகவேகமாக ஒடாடி வந்தார். ஆனால், முமல் இறந்த நிலையில் இருந்தார். முமல் எந்த இடத்தில் தீயில் குதித்து தனது உயிரை துறந்தாரோ, அதே இடத்தில் தானும் தற்கொலை செய்துக் கொண்டார் மகேந்திரா.

Image Source: lemonicks

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bizarre Obsessions of Four Indian Royal Families!

Bizarre Obsessions of Four Indian Royal Families!
Story first published: Thursday, February 15, 2018, 12:19 [IST]
Subscribe Newsletter