For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எமன் ஏன் பாண்டவர்களை நரகத்திற்கும் துரியோதனனை சொர்க்கத்துக்கும் அனுப்பினார் தெரியுமா?

எம தர்மனுடைய நீதிக் கணக்குப்படி, துரியோதனனை ஏன் சொர்க்கத்துக்கு அனுப்பினார் என்பது பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

|

யமதர்மராஜன் தர்மப்படி துரியோதனன் சொர்க்கத்திற்குச் சென்றார். மகாபாரதத்தில் தருமரைத் தவிர மற்ற சகோதர்களும், திரௌபதியும் இறந்த பிறகு சொர்க்கத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர்.

spiritual stories

தருமர் இறக்காத நிலையில் அவர் இல்லாமல் சொர்க்கத்திற்குள் நுழையாமல் அவரின் வரவுக்காக அனைவரும் சொர்க்கத்தின் வாசலில் காத்துக் கொண்டிருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போர் முடிவு

போர் முடிவு

அவர்களின் மூத்த சகோதரர் இல்லாமல் உள்ளே நுழைய மறுத்து அனைவரும் வாயிலில் நின்று கொண்டிருக்கும்போது அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான எனினும் எரிச்சலூட்டும் குரல் ஒன்று சொர்க்கத்தின் உள்ளே ஒலித்தது அவர்களின் காதுகளில் விழுந்தது. அந்த குரலை அடையாளம் காண அவர்களுக்கு நீண்ட நேரம் பிடிக்கவில்லை. அது அவர்கள் பெரியப்பா மகன், பங்காளி துரியோதனின் குரல்.

துரியோதனன் இறப்பு

துரியோதனன் இறப்பு

துரியோதனன் இறந்த பிறகு அவன் நரகத்திற்கு சென்றிருப்பான் என்றே பலரும் நம்பினர். ஆனால், துரியோதனன் இறந்த பின் சொர்க்கத்திற்கே சென்றான் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணத்தை நாம் இப்போது அறிந்து கொள்வோம்.

துரியோதனன் வளர்ப்பு

துரியோதனன் வளர்ப்பு

துரியோதனன் ஆதரித்த எல்லா முயற்சிகளையும் செயல்களையும் பற்றி மகாபாரத புராணம் நமக்கு உரைக்கிறது. ஆனால் துரியோதனன் இயல்பில் மிகவும் நல்ல மனிதன். தனது மாமன் சகுனியின் தீய விஷம் கொண்ட சிந்தனையால் கெட்டுப்போனான்.

தனது பங்காளிகள் மீது சிறு வயது முதல் வெறுப்புடன் இருக்குமாறு வளர்க்கப்பட்டான். அந்த அளவிற்கு மூளை சலவை செய்யப்பட்டதால் ஒரு கட்டத்தில் பாண்டவர்களுக்கு வில்லனாக மாறினான். ஆனால் இவ்வாறு அவன் மாறியதற்காக எந்த ஒரு நாளும் அவன் கவலைக் கொள்ள வில்லை. சிறு வயது முதன் அவன் மனதில் பகைமை என்னும் விஷம் அவன் மாமன் சகுனியால் ஊற்றி வளர்க்கப்பட்டது. ஒரு முறை பீமனை ஆற்றில் தள்ளி கொள்ளும் அளவிற்கு அவனுடைய பகைமை வளர்ந்ததைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.

விதி எந்த ஒரு நாளும் வஞ்சம் மற்றும் பொறாமைக்கு ஆதரவாக இல்லை என்ற செய்தியை குரு வம்சத்தின் முழு கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.

துரியோதனன்

துரியோதனன்

துரியோதனன் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் மோசமான வினைகள், நீதிக்கு புறம்பான செயல், பெரியவர்களின் மறுப்பு ஆகியவற்றை அனுபவிக்க வேண்டியிருந்தது.

ஆனால் இப்படிப்பட்ட துரியோதனனுக்கு எப்படி சொர்க்கத்தில் இடம் கிடைத்தது என்பதை அறிந்து கொள்ள நம்மைப் போல் பாண்டவர்களும் ஆர்வமாக இருந்தனர். இதனை உணர்ந்த யம தர்ம ராஜன் இதற்கான விளக்கத்தைக் கொடுத்தார்.

சகுனி

சகுனி

துரியோதனன் செய்த ஒரே ஒரு குற்றம், அவனுக்கு நன்மை எது, தீமை எது என்பதை தீர்மானிக்கும் குணம் இல்லாமல், தனது மாமன் சகுனி போன்ற தீயவர்களின் கெட்ட செயல்களை கண்மூடித்தனமாக பின்பற்றினான்.

கர்ணன்

கர்ணன்

ஆனால், கர்ணனுக்கு ஒரு தன்னலமற்ற நண்பனாக, அவருடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்த மகனாக, தனது ராஜ்யத்திற்காக சிறந்த ராஜாவாக இருந்து, இறுதியில் உண்மையான வீரனாக இறந்தான். ஆகையால் துரியோதனன் தனது கெட்ட கர்மாவின் காரணமாக நரகத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு பிறகு சொர்க்கத்திற்குச் சென்றான்.

நரகம்

நரகம்

பாண்டவர்கள் தாம் விதைத்த கர்மத்திற்கான பலனை அனுபவித்தனர். ஆம், பாண்டவர்களின் வினை அவர்களை நரகத்திற்கு அழைத்துச் சென்றது. போரில் அவர்கள் வெல்வதற்காக கையாள நிர்பந்திக்கப்பட்ட யுத்திகள் நல்வினைகள் கணக்கில் வராததால் அவர்கள் நரகத்திற்கு சென்றார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

According to Yamraj, Duryodhana deserved to be in heaven; here's why

we are discuss about According to Yamraj, Duryodhana deserved to be in heaven.
Story first published: Wednesday, September 5, 2018, 12:18 [IST]
Desktop Bottom Promotion